Header Ads



முஸ்லிம்களை தாக்கியவர்களை மீட்டு, தனது வாகனத்தில் ஏற்றிச்சென்ற தயாசிறி


குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று முன்தினம் முஸ்லிம் மக்களின் கடைகளுக்கு தீ வைத்து இனரீதியான வன்முறைகளை ஏற்படுத்திய 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எனினும் ஸ்ரீலஙகா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேர தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை விடுவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பெட்ரோல் போத்தல்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 200 பேர் கொண்ட குழுவினர் குளியாப்பிட்டிய முஸ்லிம் இனத்தவர்களின் கடைகள் மற்றும் வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதல் மேற்கொண்ட குழுவிற்கு தலைமை தாங்கிய 4 பேரை பொலிஸார் கைது செய்த போது அவர்களை தயாசிறி ஜயசேகர விடுவித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களை பிணையில் விடுவித்த தயாசிறி அவர்களை தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றமை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

தயாசிறி ஜயசேகர ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்திற்கு சென்று தாக்குதல்தாரிகள் பிணையில் எடுக்கும்போது, சர்ச்சைக்குரிய நபரான நாமல் குமாரவும் அங்கு இருந்துள்ளார்.



1 comment:

  1. தயாசிரி ஜானாதிபதியின் நிகழ்கால நம்பிக்கைக்குரிய ஜானாதிபதியிடம் செல்வாக்கு உள்ள நபர்.அதனால்தான் சுதந்திர கட்சி செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்டார்.நாமல் குமாரவை சொல்ல தேவையில்லை.எனவே கயவர்கலை,காடயர்கலை தயாசிரி மீட்டு தன் வாகனத்தில் கூட்டிச் செல்லுமலவுக்கு விசயம் பெரிய இடத்தின் கைவரிசையோ தெரிய வில்லை.அதனால்தான் ஊரடங்குச் சட்டம்,அவசரகால சட்டம் இருந்தும் படையினர் ஒன்னுமே செய்யாமல் வேடிக்கை பார்த்தது.பாதுகாப்பு அமைச்சரே ஜனாதிபதிதான்.

    ReplyDelete

Powered by Blogger.