May 23, 2019

முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை, விதைக்கும் சிங்கள ஆசிரியர்கள்

- Akbar Rafeek -

பொறாமைத்தீ அணையட்டும்.

முஸ்லிம்களின் மீது காழ்ப்புணர்ச்சியை நெல்லைப்போல சிறுவர்களின் மனதில் விதைக்கின்றார்கள்.அவை முற்செடிகளாக வளர்ந்து மரமாகும் என்பதை எத்தனை பெற்றோர் ஆசிரியர்கள்,பாதுகாவலர்கள் உணர்வார்கள்?.

பொய்,களவு,கொலை போன்றன மாபாதகச்செயல்கள் போன்றே இனவாதமும் பாதகச்செயல் என்பதை கற்றுக்கொடுக்கக்கூடாதா?

அன்றாட வாழ்வில் மனிதன் அற்பமான புழுவைப்போல நடந்து கொள்வதனை காணும்போது உள்ளம் பதைக்கின்றது.தான் பெற்ற மகளை வன்புணர்வு செய்யும் தந்தை,தன் தாய் தந்தையர்,உடன்பிறப்புக்களை கொலை செய்யும் பாதகர்கள் உள்ள சமூகத்தில் அடுத்த சமூகத்தின் நலம் எம்மாத்திரம்?

ஒரு ஆசிரியன் எவ்வாறு மாணவர்கள் மத்தியில் இனவாதத்தை விதைக்கின்றான் என்பதற்கு சான்றொன்றை இணைத்திருக்கின்றேன்.

அட்லஸ் எனப்படும் உபகரணப்பெட்டி வியாபாரம் முஸ்லிம் வியாபாரி ஒருவருக்கு சொந்தமானது, இனிமேல் வகுப்பறைக்கு அட்லஸ் பொருட்களை கொண்டுவரவேண்டாம் என மாணவர்களுக்கு எச்சரிக்கும் ஆசான் ,ஏனையவர்களையும் அதனை தொடருமாறு கேட்டிருக்கின்றான் என்பதனைத்தான் நீங்கள் பார்க்கின்றீர்கள்.

முஸ்லிம் மக்களின் முதுகெலும்பான பொருளாதாரத்தை அழிப்பதற்காக திட்டமிட்டு வேலைகள் நடைபெறுகின்றன ,தமிழர்களின் முதுகெழும்பாகவிருந்த கல்வியை ஒருகை பார்த்ததைப்போல.

நாங்கள் அவர்களின் செல்வத்தை சூறையாடி சுகபோகமாக வாழ்வதாக எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.ஆனால் அது மாயை.

எமது வீடுகளில் நாங்கில் மூன்று வீடுகள் வெளிநாட்டில் உழைத்துக்கட்டப்பட்டது.எமது வாகனங்களும் அப்படித்தான்.எமது வியாபாரங்களின் மூலதனம் வெளிநாடுகளில் சிந்திய வியர்வை உரமானது என்றால் மிகையாகாது,அநேகமாக 5,10 வருடங்கள் வெளிநாடுகளில் உழைத்துச்சேமித்த பணத்தினால் உருவாக்கப்பட்ட வியாபாரம்.இந்தப்பணத்திற்கும் இந்த நாட்டிற்கும் சம்பந்தமில்லை.எமது ஆடைகள் மெருகாக இருப்பதற்குக்காரணமும் இன்னும் வெளிநாடுகளில் உழைத்து ஊருக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் ரியால்களும் திர்ஹம்களும்தான் என்பதனை ஏன் சிந்திப்பதில்லை?

நாட்டின் திறைசேரியில் தங்கிவாழும் இவர்கள் திறைசேரிக்கு பணம் ஊட்டும் எம்மையும் எமது பொருளாதாரத்தையும் அழித்து சாதிக்க நிணைப்பது என்ன?

தாய்நாட்டு முஸ்லிம்களை எதிர்களாக எண்ணுவதும் அரபு நாட்டு ரியால்களுக்கு ஏங்குவதும்,ஹைனா எனும் மிருகத்தின் குணத்தை நிணைவு படுத்துகின்றது.83 கலவரத்தினதும் கம்பஹா வடமேல் மாகாணகலவரத்தினதும் இயல்புகள் ஒன்றே.மாற்றம் என்பது சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே என்பது துள்ளியமாகத்தெரிகின்றது.


3 கருத்துரைகள்:

சிலர் இவ்வாறு இனவாதம் பேசினாலும் அது எல்லா சிங்களவர்களின் கருத்தல்ல,3or 4 % மான சிங்கள இனவாதிகலின் கருத்துக்கள்.அவர்களுக்கே தெரியும் வியாபாரத்திர்கான முதலீடுகள்,வசதியான வாழ்க்கைக்கான முதலீடுகள் எங்கே இருந்து உழைத்து அனுப்ப படுகின்ரன.அடுத்தது மஹிந்த,ரனில்,மைத்திரி, இன்னும் சில அரசியல் இனவாதிகலுக்கு தெரியும் எம்மை பற்றி நாம் தனி நாடு கேட்கவில்லை,எமது சமூகத்தில் இருந்த ஒரு சில மன நோய் பிடித்த மிருகங்கள் செய்த வேலைதான் இந்த குண்டு வெடிப்பு,99% மான Muslim கள் தீவிரவாதத்தை எதிர்ப்பதும் அவர்களுக்கு நன்றாக தெரியும்.ஆனால் வருவது தேர்தல்கள் அதுக்கு தேவை சிங்களவர்களின் வாக்குகள் அதற்காக சில இனவாத தரகர்கலை அவர்கள் பணம் கொடுத்து பாவிக்கின்ரனர்.

anda ATLAScompaniyil athanai peru singhala samudayathil welay pannuhirarhal andu anda theacherukku theruyadu pola? pawam iwarhal padiththa muttalhal

முஸ்லிம் சமூகம் பற்றிய புரிதலை இளைய சிங்கள சமூகம் பெற்றுக்கொள்ள சிங்கள மொழியிலான ஒலி ஒளி எழுத்து வடிவிலான ஊடகங்கள் முஸ்லிம்களினால் இயக்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயத்தேவைப்பாடாகஉள்ளது..

Post a comment