Header Ads



முகத்தை மூடிய, முஸ்லிம் பெண்ணுக்கு விளக்கமறியல் - கல்பிட்டியில் சம்பவம்

- சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் -

கல்பிட்டியை சேர்ந்த சகோதரி ஒருவர் முகம் மூடி சென்ற காரணத்திற்காக, சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு,  (17/05/2019) அன்று நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டுள்ளார்.

மேலதிக நீதவான், அவரை 07 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கும் படி பணித்துள்ளார்.

சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட அவர் மீது, ஒரு வேளை, INTERNATIONAL COVENANT ON CIVIL AND POLITICAL RIGHTS (ICCPR) அல்லது Prevention of Terrorism Act (PTA) கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருப்பின் அவரை அடுத்த கிழமையாவது பிணை எடுப்பது சாத்தியமில்லாது போகலாம். இதன்படி, மேல் நீதிமன்றிலேயே பிணை வழங்கப்படக்கூடியதாய் இருக்கும். ஒரு கொலையாளியை பிணை எடுப்பதற்குரிய முயற்சிகளை ஒத்தது இது.

ஆக, நாட்டின் சட்டம் என்பதை மதிக்க வேண்டிய தார்மீக பொறுப்புடையவர்களாக நாம் இருக்க வேண்டியுள்ளது. தலைமைக்கு கட்டுப்படுதல் என்பதை கருத்திற் கொண்டு சகோதரிகள் தம்மை பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

காலம் காலமாய் ஒரு வரையறைக்குள் வாழும் சகோதரிகளுக்கு இது இலேசாக எடுத்துக்கொள்ளும் விடயமல்ல. முகம் மூடுதலை இலேசாக புறந்தள்ளி விட முடியாத இக்கட்டான நிலையினை எல்லாராலும் புரிந்துக்கொள்ள முடியும். இருந்தும், சிறை செல்லல் என்பது மிக பாரதூரமான விடயம். இங்கு, மஹரம் பேணல், முகம் மூடலை விட எவ்வளவு முக்கியம் என்பதும் சிறை வாழ்க்கை என்பது எந்தளவு பாரதூரம் என்பதும் ஒவ்வொரு உள்ளமும் அறிந்த உண்மை.

இது தொடர்பாக பெண்கள், அவர்கள் பாதுகாவலர்கள் அறிந்திருப்பது மிக முக்கியம் என்பதால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் எம் சகோதரிகளை பாதுகாக்கும் எண்ணத்தில் இது சகலருடனும் பகிரப்படுகின்றது.

9 comments:

  1. Appadi 1 ikkattaana nilay irukkumeyaanaal athuku maatru waliyay thedanum....
    Face cover podaathinga ..solrathu arasaankam kattupada illanda neega islaattha mathikka illa...
    Innum nam penkal appudi seyraanga..ippothayku konjam peni nadakka theiryala...
    Pls....husband and father unga penkaluku neengathaan kaawal out warumpothu arasaankam solratha peni nadakka waynga...
    Eeimaan moham illa...unga heartthaan..atha nalla pottu poottunga atha yaaraalayum thorangandu solla elaathu....pls

    ReplyDelete
  2. இவர்கள் இவ்வளவு அறிவிலிகலாக இருப்பதையிட்டு மிகவும் கவலையாக உள்ளது.இதை விட இந்த பெண்ணின் பாதுகாவலர்களான கணவர்,தாய்/தந்தை,குடும்ப உறவுகளினை நினக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.இந்தலவுக்கு நாட்டு நிலமை மற்றும் புர்கா தடை தெரியாத அரிவீலிகலாக உல்லார்கலே

    ReplyDelete
  3. Our sisters should understand that the present situation is no joke.

    ReplyDelete
  4. Very Good She Deserved it.

    ReplyDelete
  5. மோட்டார்வாகனத்தில்பயணிப்பவர் தலைகவசம்அனிவது வாகானம் ஓட்டதெரியும்என்ரஅருத்தம்அல்ல மாராகதனதுபாதுகாப்புக்காகவேஅணியப்படுகிறது அதேபோண்ருதாண் பெண்கலும் தணதுபாதுகாப்புக்காகஅனியும்ஆடையும்அனனிக்யகூடாதுஎண்றா இந்தநாட்டை எவ்வாருபாலியல்துஸ்பிறயோகமற்றநாடாககட்டிஎலுப்பு வது

    ReplyDelete
  6. என்றாலும் அவசரகால சட்டம் நீங்கும் வரை பொறுத்திருப்பது அவசியமாகும்.

    ReplyDelete
  7. மிகவும் கவலை தரும் செய்தி அறிவீனமா, இடுவம்பா என்று புரியவில்லை. சிறையில், முகம் மூடுவது போக தலையைக்கூட மறைக்க சந்தர்ப்பம் கிடைக்குமா? இதேபோல தான் பழைய கோபுரங்களில் ஏறியவர்களை கஷ்டப்பட்டு வெளியே எடுத்த கையோடு இன்னும் மூவர் அதே தவறைச் செய்கிறார்கள். நாம் எங்கே இருக்கிறோம்.விஷேட
    சந்தர்ப்பத்தில் இறந்த மிருகங்களின் மாமிசத்தை கூட உண்ண அனுமதித்த இஸ்லாம். எவ்வளவு நெகிழ்வுத்தன்மை கொண்டது. ஒவ்வொருவரும் தான் விரும்பிவாறு இஸ்லாத்துக்கு விளக்கம் சொல்லவும், தனித்தனிக்கொள்கைகளுக்குத் தனிதனி பள்ளி அமைக்க வழங்கப்பட்ட சுதந்திரமும் இவைகளைக்கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க வக்கற்று காணப்பட்ட அ.இ.ஜ.உ. சபையும் முஸ்லீஙகளின் தான்தோன்றித்தனமான வாழ்க்கைக்கு முக்கியமான காரணங்களாகும். இவை இஸ்லாமிய நாடுகளிலும் அனுபவிக்க முடியாது. மேலும் தவறு செய்வோரைக்காப்பாற்றும் அரசியல்வாதிகள், பணத்தைக் கொடுத்துச் சட்டத்தை வளைக்கும் பணத்திமிர் கொண்டவர்கள் மூலமும் முஸ்லீம்களின்
    சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கின்றது. கட்டி வந்தால்
    வெட்டித்தான் மருந்து கட்ட வேண்டும் வேதனைக்குப்பயந்தால் கட்டி ஆறப்பொவதில்லை.

    ReplyDelete
  8. இதை சிலர் அறியாமை என்று சொல்வது அவர்களது அறியாமையைத்தான் காட்டுகிறது.முழு நாடே அறிந்த விடயம் அதை வழமையாக அணியும் அவர்களுக்கு தெரியாமலா இருக்கும் அல்லது குடும்பத்திலுள்ளவர்களாவது சொல்லாமலா இருந்திருப்பார்கள்.அது அவர்களது அல்லாஹ்வுக்காக என்ற ஈமானிய உணர்வின் வெளிப்பாடாக இருக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.