May 02, 2019

முஸ்லிம்களுக்கு பல்வேறு துயரங்கள் - பாதுகாப்பு அமைச்சில் கொட்டித்தீர்த்த முஸ்லிம் தரப்பினர்

- AAM.  Anzir -

முஸ்லிம் தரப்பினருக்கும், பாதுகாப்பு உயர் தரப்பினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை 2 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.

பாதுகாப்பு ராஜhங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தனா தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், முப்படைத் தளபதிகள், முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் சிவில் பிரதிநிதிகள்  மற்றும் ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் பள்ளிவாசல்களுக்குள் நாய்களுடன் சோதனைக்குச் செல்லுதல், குர்ஆனை அவமதித்தல், முஸ்லிம் சகோதரிகளில் தலை மறைப்புக்கு இடையுறு விளைவித்தல், பெண்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு தனியே ஆண் படையினர் செல்லுதல், உள்ளிட்ட பல விடயங்களை இதன்போது முஸ்லிம் தரப்பினர் நேரடி வாய்மூல முறைப்பாடுகளாக தெரிவித்தனர்

அத்துடன் அச்சத்தினல் துஆக்கள், இஸ்லாமிய சஞ்சீகைகள் தீயிடப்படல் போன்ற சம்பவங்களையும் சுட்டிக்காட்டினர்.

இவற்றை உடனடியாக தடுத்துநிறுத்த, பாதுகாப்பு அமைச்சு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இதன்போது, முஸ்லிம் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இவற்றுக்கு பதில் வழங்கிய ருவன் விஜயவர்த்தனா தலைமையிலான பாதுகாப்பு உயர்மட்டக்கு குழு,  இதுதொடர்பில் அவசரமாகவே தாம் 2 சுற்றரிக்கைகளை வெளியிடுவதாகவும், முஸ்லிம் தரப்பினர் எதிர்கொள்ளும் சில நெருக்கடிடிகள், இதன்மூலம் நிவர்த்திக்கப்படுமெனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

4 கருத்துரைகள்:

எத்தனையோ முஸ்லிம்களின் பணம் நகைகள் எடுத்துச் சென்றதாக பலர் சொல்லுகின்றனர்,
அவர்கள் சொல்வது தான் சட்டமாம்,
வீடுகளில் பாவிக்க வைத்த பெரிய கத்திகள் சும்மா சும்மா சும்மா பொருட்களை எல்லாம் கிளறி சந்தேகக் கண் கொண்டு கஷ்டப் படுத்துகிறார்கள்,
ஜனநாயகத்தையும், தனி மனித சுதந்திரத்தியும் பாதுகாக்க உதவுங்கள்,
பெரிய அநியாயம் போல் தோன்றுகிறது, தயவு செய்யது பலதாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லவும்,
திரும்பத் திரும்ப அவர்களிடம் சொல்லவும்
இல்லாவிடில் மறந்து விடுவார்கள்,
நன்மைக்கு உதவியாய் இருப்போம்.

Welcome to the party
Tamil man

பிள்ளைகளை அடித்து ஒழுங்கு படுத்துவது போலவே சமூகத்தையும் ஒழுங்கு படுத்த வேண்டியுள்ளது. அதற்குள் கவலையான சில சம்பவங்களும் இடம்பெறும் தவிர்க்க முடியாது.

சொல்லொன்னா துயரங்கள் இன்னும் நிரையவே உண்டு அவைகளை இங்கு எழுதவும் அச்சமாக உள்ளது, அப்படி ஜனனாயகம், மனிதவுரிமைகள் எல்லாம் கொல்லப்பட்டுள்ளன அவசரகால சட்டமென்ற பெயரில்.
99 வீத கல்வி அறிவைப்பெற்று முன்னிலை வகிக்கும் இலங்கையானது அதன் பொது, நடப்பு உலக அறிவில் ரொம்பவே பின்தங்கியுள்ளது. வெறும் புத்தகபூச்சாக இருந்து என்ன பயன்? இந்த 99 வீதத்தை 100ஆக மாற்றப்போவதாக மிஸ்டர் மைத்திரி தன் பதவியேற்ற காலத்தில் சொன்னார், என்ன பயன்?
இதனால்தான் படைசேர்ப்புக்கு கல்வி தராதரமும் தகைமைக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.
வீட்டில் எப்பொருளும் இரண்டாக காணபட்டால் அதை அப்படியே அபகரிக்கிறார்கள். வீட்டில் பழிதான போன்களையுமா வீசாமல் வைத்திருப்பது குற்றம்? பாண் வெட்ட ஒரு கத்தி, சமையலுக்கு வேராக ஒரு கத்தி இருந்தால் அதுக்கும் அபகரிப்பு. இப்படி எதுவும் நிச்சயம்மற்ற நிலையில் பெரும் அவலமாக சொல்லொன்னா துயரத்தில் நம்மவர்.
உங்கள் ஆட்சியாளர்களைக்கொண்டே உங்களை நாம் சோதிப்போமென அல்குர்ஆன் சொல்லுகிறது.

Post a Comment