Header Ads



"முஸ்லிம் தனியார் சட்டத்தை முழுமையாக இல்லாமல் செய்வது, அச் சமூகத்திற்கு இழைக்கின்ற அநீதி"

இஸ்லாமிய விவாக, விவாகரத்துச் சட்டத்தில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எம்முடைய நாட்டில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலர் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். எனினும் இந்தத் தனியார் சட்டத்தில் முஸ்லிம் சமூகம் கோருகின்ற மாற்றங்களைச் செய்வதே தேவையாகும். மாறாக முஸ்லிம்களுக்கான தனியார் சட்டத்தை முழுமையாக இல்லாமல் செய்வது என்பது அந்தச் சமூகத்திற்கு இழைக்கின்ற அநீதியாகவே அமையும் என்று முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். 

முஸ்லிம் விவாக, விவகாரத்துச் சட்டத்தில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும், பொதுவானதொரு திருமண வயதெல்லையை நிர்ணயிப்பதற்கும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இதுகுறித்து முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர் ஒருவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொதுச்சட்டம் என்ற ஒன்று காணப்படுகின்ற அதேவேளை, முஸ்லிம்களுக்கென தனியார் சட்டமும் உள்ளது. அதுவே ஷரியா சட்டம் என்று அழைக்கப்படுகின்றது. பொதுச்சட்டத்தின் பிரகாரம் திருமண வயதெல்லையாக 18 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தின் கீழான முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின்படி வயதுக்கு வந்தவர்கள் திருமணம் செய்வதற்குத் தகுதியுடையவர்களாகக் கணிக்கப்படுகின்றனர். 

அதன்படி 18 வயதை அடையும் முன்னரே திருமணம் செய்துவைக்கும் சம்பவங்கள் எம்முடைய நாட்டில் நடைபெறவே செய்கின்றன. அதேபோன்று முஸ்லிம்களின் திருமணங்கள் பொதுச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதில்லை. மாறாக தனியார் சட்டத்தின் கீழேயே பதியப்படுகின்றன. அதேபோன்று விவாகரத்துப் பெறுவதாயின் முஸ்லிம்களுக்கென காதி நீதிமன்றங்கள் உண்டு.

இந்நிலையில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எம்முடைய நாட்டில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலர் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். எனினும் அதில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் சார்ந்த அமைப்பொன்றின் சிபாரிசை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. 

எனினும் இந்தத் தனியார் சட்டத்தில் முஸ்லிம் சமூகம் கோருகின்ற மாற்றங்களைச் செய்வதே தேவையாகும். மாறாக முஸ்லிம்களுக்கான தனியார் சட்டத்தை முழுமையாக இல்லாமல் செய்வது என்பது அந்தச் சமூகத்திற்கு இழைக்கின்ற அநீதியாகவே அமையும். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து முஸ்லிம்களை அடிப்படைவாதிகளாக நோக்குகின்ற நிலையொன்று உருவாகியிருக்கும் சூழ்நிலையில், அரசாங்கம் முஸ்லிம் தனியார் சட்டத்தில் எத்தகைய மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருக்கின்றது என்பது குறித்து சிந்திப்பது அவசியாகும் என்று குறிப்பிட்டார்.

(நா.தனுஜா)

2 comments:

  1. There must be equal law for each and every citizens of the country. We don't want these bullshit laws came from arab just before few decades.
    Muslims in SL lived many centuries along with Tamils & Sunhalese without these useless Islamic laws. Let our country to be as it was.
    Don't impose anything in the name of religion and it divide thecommunity more for forign needs.

    ReplyDelete
  2. இதன் மூலம் பயன்பெறும் எருமைகளுக்கே ஒருமித்த கருத்துக்கு வரமுடியாதுள்ள போது இவர்களுக்கு எதற்கு விஷேச சட்டம், பொதுச்சட்டம் நல்லது. படித்தவர்கள் என்பதற்கு பட்டம் பெற்ற மட்டை மட்டும் போதாது மூளையும் தேவை அலி சப்ரி போன்றவர்கள் மட்டைகளைமட்டும் வைத்துக் கொண்டு பிற்போக்குவாதத்திலிரப்பவர்களை பின்னோக்கித்தள்ளி விட்டு முன்னோக்கிச்செல்ல வேண்டும். இறைவன் அதற்கான சக்தியை தங்களுக்கு அருள வேண்டும். இலங்கையில் தனிச்சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல ஏனைய சமூகத்துக்கும் உள்ளது என்பதை கருத்துரை கூறும் பண்டிதர்கள் கற்றறிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.