May 23, 2019

நான் களைத்து விட்டேன், இனி போராடும் மனநிலை இல்லை - தியானம் செய்து வாழப் போகிறேன் - ஞானசாரரர்

கடந்த காலங்களில் தான் சொன்னது போன்று தற்போது அனைத்தும் நடந்து விட்டதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு ஏற்படப் போகும் ஆபத்து குறித்து கருத்து வெளியிட்ட போது அவமானப்படுத்தினர். இறுதியில் தான் நாடு தொடர்பில் வெளியிட்ட தகவல்கள் உண்மையாகி விட்டதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மிகுந்த அடைகிறேன், எனினும் எதிர்வரும் காலங்களில் பொறுமையாக செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் களைத்து விட்டேன், நீண்ட காலம் போராடினேன். இனியும் போராடும் மனநிலை இல்லை. தியானம் செய்து வாழத் தீர்மானித்து விட்டதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

தேரர் என்ற ரீதியில் தான் சிங்களவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தேன். உயிர் தியாகம் செய்து காப்பாற்றுவது என்றாலும் நாடு இருக்க வேண்டும். அனைவருக்கும் இதனை இறுதியாக கூறிக்கொள்கிறேன் எனவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று -23- மாலை விடுதலை செய்யப்பட்ட ஞானசார தேரர், தனது விகாரைக்கு சென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

4 கருத்துரைகள்:

நீங்கள் சொன்னது சரி,ஆனால் நீங்கள் ஏன் ஆதாரத்தோடு சொல்லவில்லை,எவ்வாறு இந்த தகவலை எங்கிருந்து கிடைத்தது.அப்படியெனில் ஏன் இந்த தாக்குதல் நடப்பதுக்கு முன் நீங்கள் அதுபற்றி உரிய தரப்புக்கு அறிவிக்கவில்லை.50 இடங்களில் குண்டு வெடிப்பத்தாக சொன்னீர்கள்.ஆனால் அவ்வாறு நடக்க வில்லை.ஒரு பேச்சுக்கு நீங்கள் சொன்னது நடந்து விட்டது.அப்படியில்லாமல் உன்கலுக்கு தெரிந்தால் உண்மையாக நீங்கள் ஏன் குண்டு தயாரித்த இடத்தை ரானுவம்,பொலிசுக்கு சொல்லி தடுத்து நிருத்தியிருக்கலாமே.முதலில் உங்களால் உசுப்பேர்ரப்பட்டுல்ல பெரும்பான்மை வாலிபர்கள் சிலர் இன்னும் வன்முறை சிந்தனையில் உள்ளார்கள் அவர்களை மீண்டும் நல்ல நிலைமைக்கு கொண்டு வாருங்கள்.இனியாவது சிங்கள வாலிபர்கலை உசுப்பேத்தாமல் நல்லவராக வாழுங்கள்,உங்களை நாங்களும் மதிப்போம்.

இது போல தமிழ் சகோதரர் அஜன் என்பவரை CID விசாரித்தால் இன்னும் பல உண்மைகளை கண்டு பிடிக்கலாம்.வருட கணக்கில் அஜனும் பதிவிட்டார் கிழக்கில பயங்கரவாத அமைப்பு உள்ளது என.எவ்வாறு அஜனுக்கு தெரியும் தெரிந்தும் ஏன் அரசுக்கு சொல்லவில்லை என.அஜனுடைய கடந்த பதிவுகள் உள்ளன ஆதாரமாக.ஏதோ ஒரு மர்மம் அஜன் அந்தோனிராஜ் அவர்கலிடமும் உள்ளது இங்கு முக்கிய விடயம்

என்ன சாமி சிறையில் நல்ல சாப்பாடும் கவனிப்பும் போல நீங்கள் இவ்வளவு சீக்கிரம் கலைத்து விடுங்கள் என்று எதிர்பார்க்கவும் இல்லை

உங்களுக்கு நான் சொல்ல வரும் விடயம் தெரியுமோ இல்லையோ எனக்குத் தெரியாது. உங்களை Alert பண்ண வேண்டியது வாசகர் என்ற வகையில் என் கடமை. சிறப்பாக இந்த வேண்டுகோள் அஜனுக்கும் சேர்த்துத்தான். எங்களுடைய கருத்துக்களை சரியாக ஆதாரத்துடன் Jaffna Muslim ல் மட்டுமல்ல வேறு எந்த online newspaper இல் போடுவது என்றாலும் சரியாக மிகத் தெளிவான ஆதாரங்களை வைத்துக் கொண்டு எழுத வேண்டும். (டேய் மாடு, சொல்ற ஒனக்கும் சேர்த்துத்தான்டா). துவேசம் வெளிப்படும்போது மாற்;று இனத்தவர்கள் தம் நெருங்கிய சகாக்களையே பொருட்படுத்தமாட்டார்கள். இன்னொருவருடைய Resource பாவித்து எழுதுபவர்கள் வீணாக சும்மா இருக்கும் மற்றவர்களையும் மாட்டி வைத்து விட வேண்டாம். சாக்கிரதை.

Post a comment