May 16, 2019

இலங்கை முஸ்லிம்களே, துவண்டு போகவேண்டாம் - தைரியமாக எதிர்கொள்ளுங்கள்...!!

நீங்கள் சஹ்ரான்களை, இப்ராஹிம்களை ஆதரித்தவர் அல்லர் வன்முறையை தீவிரவாதத்தை முற்றிலும் நிராகரித்து வாழ்பவர்கள் மூளையற்ற இனவாதிகள் சொல்வது போல் கொத்து ரொட்டியில் மலட்டுமருந்து கலப்பவருமல்லர்.

இனங்களை அழித்துவாழ்பவருமல்லர்.

புலிகள் இனச்சுத்திகரிப்பை நியாயப்படுத்த சொல்வது போல் காட்டிக்கொடுப்பவரும் அல்லர் தொப்பிபிரட்டுபவருமல்லர்..

இந்த நாட்டின் இரண்டாந்தர பிரஜையுமல்லர்..

இந்த நாட்டினை நேசித்து தேசப்பற்றுடன் தனது சதவீதத்திற்கும் அதிகமாக தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்பவர்கள்.

புத்தாக்கம் புத்துணர்ச்சியுடன் புதிய வர்த்தக வணிக முயற்சிகளை தங்களது சொந்த முதலீட்டில் சோதனை செய்து நாட்டில் அறிமுகம் செய்பவர்கள்..

அரச பணி அரச பணத்தினை சலுகைகளை சமுர்த்திகளை தங்களது சதவிகிதத்திற்கு மிகவும் குறைவாக அனுபவிப்பவர்.

அரச உதவிக்கு கையேந்தாமல் சொந்தக்காலில் நின்று பேமண்ட் பிஸ்னஸாவது செய்து வாழ்பவர்கள்..

தனது சதவிகிதத்திற்கு அதிகமாக வரி செலுத்தி குறைவாகவகே வரியின் பலனை அனுபவிப்பவர்..
மதுபானம் கசினோ சூதாட்டம் விபச்சாரம் வட்டித் தொழிலில் நாட்டை சீரழிக்காமல் நல்ல தொழில்கள் மட்டுமே செய்து வாழ்பவர்கள்.
அரசாங்கத்தில் எல்லாவற்றிற்கும் தங்கியிறாது தனியார் துறைக்கு பொருண்மியத்திற்கு பெரும் பங்களிப்பு செய்பவர்கள்..
மத்திய கிழக்கில் அடிமை சேவகம் செய்தாவது திறைசேரியின் டொலர் கையிருப்பை கௌரவநிலையில் வைக்க பெரும் பங்களிப்பு செய்பவர்கள்.
தேசப்பற்றாளர்கள்...
ஒரு சில கழிசடைகள் செய்த கீழ்த்தரமான வேலைக்கு ஒட்டுமொத்த சமூகமும் குற்றம் சுமக்க வேண்டியதில்லை..
அதிலும் இந்த தீவிரவாத கும்பல் குறித்து வெளிப்படையாக தகவல் கொடுத்து ஆர்ப்பாட்டம் செய்து ஊரைவிட்டு விரட்டி அடித்து படித்து படித்து சொல்லியும் எதையும் செய்யாத குருடரே குற்ற உணர்வுடன் திரிய வேண்டும்..
இதனால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க ஈவன்ஜிலிக்கன் சகோதரருடன் வாஞ்சையுடன் துன்பியலை பகிர்ந்து கொண்டவர்கள் , ஆற்றுப்படுத்தியவர்.
தீவிரவாத கும்பலை சூடு தணிவதற்குள்ளே பிடித்துக்கொடுத்தவர்.
சொந்த மகளை தீவிரவாதியென தூற்றி பொலிஸாரிடம் கையளித்த தாய்மாரினை கொண்டவர்.
இனி..
நாம் எம்முள் கிடக்கும் ஒருசில வரட்டு கொள்கைகளை விடுவோம்..
இராணுவம் முப்படையில் பொலிஸ் அரச ஆளணியில் அதிகம் இணைவோம்..
சகோதர மொழி பிராந்தியங்களில் வாழ்வோர் சகோதர மொழியில் கல்வி பயிண்று தமிழ் போலவே சகோதர மொழியையும் வளர்ப்போம்..
தேசிய அபிலாசைகளை புரிந்து அரசியல் முடிவுகளை எடுப்போம்..
சோரம்போன இனவாத, மதவாத, தீவிரவாத, அடிப்படைவாத கொள்கைகளை புறந்தள்ளுவோம்..
இனமத ரீதியான கல்வி ,அரசியலை மாற்றுவதில் முன்னனி வகிப்போம்..
பேரினவாதம், தமிழ்இனவாதம் ,முஸ்லிம் இனவாதம் எல்லாம் ஒரே சாக்கடையில் மலர்ந்தவேயே இனத்தை நேசிப்போம் இனவாதத்தை ஒழிப்போம்..
சுதந்திரத்தில் இருந்து இற்றைவரை இனத்தின் மதத்தின் பெயரால் நாம் இழைத்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்போம் மற்றவர்கள் இழைத்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க வைப்போம்.
எமது பக்கம் நியாயம் உள்ளது அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அச்சமின்றி குரல் கொடுப்போம்.
அழிக்கப்பட்ட ஊர்கள், துரத்தப்பட்ட வாழ்க்கை முன்னரைவிட அழகானதாய் மாறியதே வரலாறு.
அல்லாஹ் பாதிக்கப்பட்டவருடனேயே இருப்பான்..
அழகான இந்த தேசத்தை அழிக்கும் சக்திகளில் இருந்து பாதுகாப்போம்...

5 கருத்துரைகள்:

இதுபடி நடந்தா சரி!

very very very suuuuuuuuuuuuuuper I do appreciate brother. Nice article .

Feel wel relex but we unity

Post a Comment