May 20, 2019

முஸ்லிம்கள் குறித்து ஒரு, தமிழ் எழுத்தாளரின் விமர்சனம்

- Vimal Kulanthaivelu -

நீங்கள் பூவை கொண்டு போங்கள் அல்லது புய்ப்பத்தை கொண்டு போங்கள் ஆட்சேபனையே இல்லை. ஆனால் ஒன்று ...

ரமழான் பெருநாள் வருகிறது நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்து உங்களுடனான சகல விசேடத்திலும் பங்குகொள்வோம் அதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும். ... எங்கள் ஆலைய திருவிழாக்கள் வருகிறது நீங்கள் வந்து தோரணம் கட்டவேண்டும் அதற்கு நாங்கள் சம்மதிக்க வேண்டும் ... செய்வோமா? இது நடக்குமா?

குண்டு வெடிப்பில் இறந்தது கிறிஸ்தவ தமிழர்களும்தான். ஆனால் அவைகளையெல்லாம் ஆயரின் படத்தை போட்டு போற்றி புகழ்ந்து சிங்களத்துக்குள்ளேயே அடக்க பார்ப்பதுதான் வேதனை . கிறிஸ்தவ சமூகம் என்று பேசிக்கொண்டு ஆராதிப்பவர்கள் இறந்தவர்களுக்குள் தன்மொழி பேசுபவனும் அடக்கமென்பதை பேரினவாதத்துக்கு வால் பிடிப்பதன் மூலம் மறைக்க பார்க்கிறார்கள் . பெளத்தர்களும் , கிறிஸ்தவர்களும் அமைதியாக இருக்க இந்த தமிழர்கள் ஏன் பொங்குகிறார்கள் என்ற ஆரம்ப பதிவுகள் இதைத்தான் சொன்னது.

முப்பது வருட போராட்டம் தமிழர்களின் நிலைப்பாட்டில் ஒரு கட்டுக்கோப்பை உணர்த்தியிருக்கிறதென்பதை யாராலும் மறுக்க முடியாது. கபூரின் வரப்பு தண்ணியை திருப்பி விட்டானென்பதற்காக கந்தசாமியின் தலையை மண்வெட்டியால் கொத்தியும், முகத்துவாரத்தில் தமிழ் பெட்டைக்கு தண்ணீர் ஒற்றினான் என்பதற்காக ஊரே ரெண்டு பட்டு அடிபட்டும் வரலாறு படைத்தவர்கள் தங்கள் சொந்தங்கள் குண்டில் சாகடிக்கப்பட்ட போதும் கூட அமைதியாக இருந்தார்களென்றால் அது யுத்தம் கற்பித்த பாடமே தவிர ஆயரின் கட்டளைக்குட்பட்டல்ல என்பதை உணராவிடில் அது அறியாமையே தவிர வேறேதுமில்லை .

நேற்று -18- முள்ளிவாய்க்கால் நினைவு நாள். 

அங்கும் கிறிஸ்தவ தமிழர்களும்தான் இறந்திருப்பார்கள் . ஐம்பது முஸ்லிம் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து தொப்பி அணிந்து உங்கள் இஸ்லாமிய அடையாளங்களுடேனேயே போய் இறங்கி நாங்களும் உங்களின் துயரில் பங்குகொள்கிறோமென்று நின்றிருந்தால் இன்று இஸ்லாம் பயங்கரவாதிகளென்றும் சோனிகளென்றும் வன்ம பதிவிடும் தம்பிகளே வாடா மச்சான் என்று உங்களை கட்டி தழுவியிருப்பார்கள். அப்படியொரு அரிய காட்சி இலங்கையில் நடப்பதற்கு சாத்தியமில்லையென்றே நினைக்கிறேன். அப்படி போயிருந்தால் உங்களை அங்கு யாரும் தடுத்திருக்கமாட்டார்கள் . ஆனால் காத்தான்குடி படுகொலையும் ,யாழ் வெளியேற்றமும் உங்களை இன்னும் தடுத்து நிறுத்துகிறது. போகட்டும் .இரு சிறுபான்மைகள் ஒன்று சேர்வதை விட பெரும்பான்மையினருக்கு நல்லபிள்ளையாக இருப்பதே நல்லதென்றே இன்று பன்சாலைக்கு புஷ்ப தட்டும் வெசாக் கூடுமாக ஓடுகிறார்கள் சிலர்.

இஸ்லாத்தை மதிக்கும் ,இஸ்லாமியர்களை பெருமளவில் நண்பர்களாக கொண்ட எனக்கே இது பெரிய தர்மசங்கடமாக இருக்கிறது.

ஆனால் அல்லாஹ் ஒருவனே கடவுள். அவனொருவனுக்கே நாங்கள் அடிபணிவோம் . அவனுக்கே பயந்தவர்களாவோம் , அவன் இடத்தில் வேறொருவனை வைத்து வணங்கமாட்டோமென்றவர்களில் சிலர் புத்தனின் சிலைநோக்கி புஷ்பங்களுடன் போவதைப் பார்க்கத்தான் புன்னகை புன்னகையா வருகிறது . பாவங்கள் பயத்தில் சுயத்தை இழந்து விடுகிறார்கள்.

10 கருத்துரைகள்:

இஸ்லாத்தை சரியாக விளங்காத சில முஸ்லிம் முட்டாள்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். இவர்கள் அடிபட்டது மாத்திரமல்லாமல் பௌத்த கொடியை ஏற்றுகிறார்கள்.இவர் ஹலோ அரைகுறை முஸ்லிம்கள் வெறும் தொப்பியும் தாடியும் இருக்கும் ஆனால் இஸ்லாத்தின் அடிப்படையை விளங்காத முஸ்லிம்கள். பள்ளியில் பிரித் ஓதுவதற்கும் இடம் கொடுப்பார்கள். இவ்வாறான முஸ்லிம்கள் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் உண்மையில் ஒரு முஸ்லிமான அல்லது பாசாங்கு செய்யும் முஸ்லிமாக எள்ளு.

நீங்கள் சொல்வது முற்று முழுதாக உண்மை தோழா.

முஸ்லீம் சமூகம் பெரும்பான்மை சமூகத்தோடு சேர்ந்து செல்ல நினைப்பது போல தமிழ் சகோதரர்களோடு சேர்ந்து செல்ல இன்னும் தயாராக இல்லை எந்த ஒரு தலைமைத்துவமும் அதை சொல்லுவதும் இல்லை அது அரசியல் தலைமைத்துவமாக இருந்தாலும் சரி மார்க்க தலைமைத்துவமாக இருந்தாலும் சரி.

உண்மையில் தமிழ் முஸ்லீம் இந்த இரண்டு சமூகங்களும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து சேர்ந்து சென்றால் மாத்திரமே எதிர் காலா இலங்கையில் வாழக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகும்

அவ்வாறு இல்லை என்றால் குறுகிய அரசியல் லாபங்களுக்காக இரண்டு சமூகங்களை மோதிக்கொள்ள வைக்கின்ற கீழ்த்தரமான அரசியலை இந்த பெரும்பான்மை சமூகம் செய்து கொண்டே இருக்கும்

நிதானமாய் சிந்திப்போம் ஒன்றை செயல்படுவோம் எதிர் கால சவால்களை எதிர் கொள்வோம்

ஒரு இருந்த எதிர் காலம் எனக்கு இப்போதே தெரிகின்றது

I agree with that... அனைத்து இறைவனையும் சமமாகப் பார்க்க பட்டிருந்தால் பிற நாட்டவன் எம்மை ஒன்றும் செய்ய முடியாது

ச்ர்ச்சிற்கு பக்கத்தில் நிற்பவனையே தீவிரவாதி என்ற சந்தேகத்தில் கைது செய்து கொண்டிருந்த நேரம் மரண வீட்டுக்கு சென்று மேலும் சந்தேகங்களை ஏற்படுத்தாமல் முஸ்லிம்கள் அநேகமான இடங்களில் ஒதுங்கி இருந்தது நியாயமானதாகவே படுகிறது

Hats off Mr.Kulanthaivelu. The reality is portrayed.

சர்ச்சிற்கு பக்கத்தில் நிட்பவனையே தீவிரவாதி என்ற சந்தேகத்தில் கைது செய்து கொண்டிருந்த நேரம் மரண வீட்டுக்கு சென்று மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தாமல் முஸ்லிம்கள் அநேகமான இடங்களில் ஒதுங்கி இருந்தது நியாயமானதாகவே படுகிறது

தம்பி அவர்கள் அங்கே சென்ரது ஒரு மரியாதை நிமித்தம் ஒழிய வணங்குவதற்கு அல்ல.ஒரு மாதத்துக்குல்தான் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம்.ஆனால் பல ஆண்டாண்டு காலமாக வெசாக் தன்சலுக்கு அதிகளவு நிதியும் கொடுத்து,அந்த சந்தர்ப்பத்தில் அங்கே தன்சல் பந்தலில் தன்சலை பங்கிட்டவனும் Muslim தான்.ஆனால் புலிகள் Muslim மக்களுக்கு செய்த அட்டூலியங்கல் போல சிங்களவர்கள் இன்னும் அதில் 1% கூட பன்னவில்லை.ஆனால் 1915 ம் ஆண்டே எமக்கு சிங்கலவருடன் இனைந்து ஆப்படித்தவர்கல் தமிழர்கள்,இப்போது நாங்கல் சிங்களவர்கலுடன் ஒற்றுமையாக இருப்பது பொறாமை போலும்.இப்போதும் கூட 2 நாட்களே நடந்த பயங்கரவாத சம்பவத்துக்கு தமிழர்களாகிய நீங்களும் உங்கள் ஊடகங்களும்,பாடசாலைகளும் கக்குகின்ர இனவாதமே போதும் உங்களின் பொறாமைக்கு சாட்சி.ஆனால் 30 வருடங்களாக நாட்டை சுடு காடாக்கி,அப்பாவி Muslim களின் பல் ஆயிரம் கோடி சொத்துக்களை சூரையாடி,சுமார் 1000 க்கும் மேற்பட்ட Muslim களை கொலை செய்தும் அப்பாவி தமிழனை புலியாக நோக்கவும் இல்லை நோகடிக்கவும் இல்லை.ஆனால் 2 நாள் பயங்கரவாதத்துக்கு நீங்கள் உங்கள் தமிழ் சமூகம் போடும் ஆட்டம் சகிக்க முடியவில்லை.

சிறந்த ஒரு பதிவு....இந்த விடயத்துக்கே சக வாழ்வு எனும்பெயரில் மார்க்கவிடயத்தில் Adjustment செய்து அடிமைபடுகிறது இந்தசமூகமும் சமயத்தலைவர்களும். அப்படியென்றால் தஜ்ஜால் வந்தால் இவர்களின் ஈமான் எப்படி இருக்கும்?

அடி உதவுவது போல் அன்னன் தம்பி உதவமாட்டார்கள். முற்றாக பாதிக்கப்பட்டது கிறிஸ்தவர்கள் ஆனால் தொண்டுகள் செய்வதோ சிங்கள பௌத்தர்களுக்கு. இதில் இருந்து என்ன தெரிகின்றது. இந்த நாடகம் ஒரு பயத்தாலும் சந்தர்பவாதத்தாலும் செய்ததே.

இது கடந்த காலத்தின் பாதிப்புக்களுக்காக பலி வாங்கும் காலமல்ல. ஏதோ ஒரு வகையில் இலங்கையில் வாழும் அனைவரும் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதே திரும்ப திரும்ப சொல்வதால் ஏதும் மாறி விடப்போவதில்லை. அன்பே சிவன் என்றும் உயிர்களிடத்தில் அன்பு கொள் என்றும் உன்னைப் போல் உன் அயலானையும் நேசி என்றும் மதங்கள் நற்போதனைகளைத் தான் போதிக்கின்றன. மதங்களில் பேரால் அரக்கர்களாய் மாறும் மனிதர்களை தனியாக பிரித்தரிந்து அவர்களையும் அவர்களுக்கு உடந்தையாய் இப்பவர்களையும் இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துதல் வேண்டுமே தவிர சட்டத்தை நம் கையில் எடுப்பதல்ல முறைமை. நிரூபிக்கப்படும் போது அது யாராக இருப்பினும் அதற்கான தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டியதுடன் அது சட்டத்தின் கடமை.

Post a Comment