Header Ads



அவசரகால ஒழுங்குவிதிகளின்கீழ், வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தரவாதம் - ஓர் பார்வை

- சட்டத்தரணி பைஸர் -

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் பயங்கரவாதச் செயற்பாடுகள் பற்றி கையாளப்படும் சட்டங்களில் முதன்மையாக இருப்பது 1979ம் ஆண்டின் 48ம்  இலக்க பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும்  அதன்கீழ் உருவாக்கப்பட்டுள்ள 2120ஃ5ம் இலக்க 22.04.2019 திகதிய அவசரகால ஒழுங்குவிதிகள் என்பனவாகும். குறித்த அவசரகால ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்தும் போது கீழ்வரும் சட்ட ஏற்பாடுகளின் கீழான குற்றங்களும் அவ்வொழுங்கு விதிகளின் கீழான குற்றமாக கருதப்படும்.

1976ம் ஆண்டின் 36ம் இலக்க வெடிபொருட்கள் சட்டம்.
1955ம் ஆண்டின் 18ம் இலக்க துப்பாக்கிகள் சட்டம், 
1945ம் ஆண்டின் 25ம் இலக்க பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டம், 
2006ம் ஆண்டின் 5ம் இலக்க சட்டவிரோத பணயீட்டலை தடை செய்யும் சட்டம்,
2005ம் ஆண்டின் 25ம் இலக்க பயங்கரவாதிகளுக்கு நிதியீட்டல் செய்வதை ஒடுக்கும் சட்டம், 
அத்தியாயம்(19) குற்றவியல் சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட குற்றம் 
1966ம் ஆண்டின் 18ம் இலக்க அபாயகரமான ஆயுதங்கள் சட்டம்
1979ம் ஆண்டின் 15ம் இலக்க குற்றவியல் நடைபடிக்கோவை
மற்றம் சான்று கட்டளைச்சட்டம்

1979ம் ஆண்டு 48ம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பு

மேற்படி சட்டத்தின் படி பயங்கரவாதம்(வுநசசழசளைஅ ஆநயளெ) அல்லது பயங்கரவாத செயற்பாடு(வுநசசழசளைவ யுஉவiஎவைல) என்பது அவசரகால ஒழுங்குவிதியின் கீழ் கீழ்வருமாறு வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது,

யாராவது ஒருவரை கொலை செய்தல் ,கொலை செய்ய முயற்சி செய்தல், கடும்காயத்திற்கு உட்படுத்தல் ,பணயக்கைதியாக வைத்திருத்தல், சட்டத்திற்குமுரணாக கடத்திச் செல்லல்
யார் மீதும் ஆபத்தை ஏற்படுத்தாத நபர் ஒருவரினது உயிரை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குதல்
 தனிப்பட்ட அல்லது அரசு அல்லது அரசாங்க சொத்துக்களுக்கு அல்லது வசதிகளுக்கு அல்லது பொதுமக்கள் பாவனைக்கான ஏதாவது இடங்களுக்கு, தனியார் மற்றும் பொது போக்குவரத்து அல்லது ஏதாவது உட்கட்டமைப்புக்கு அல்லது சுற்றாடலுக்கு அபாயகரமான சேதம் ஏற்படுத்தல்
அத்தியாவசிய சேவை மற்றும் விநியோகம் என்பவற்றிற்கு கடுமையான தடங்கள் அல்லது சேதம் ஏற்படுத்தல்
தனியார் அல்லது அரச சொத்துக்களை களவெடுத்தல் அல்லது தவறான முறையில் கையாடல்,கொள்ளை அடிக்கும் குற்றத்தை புரிதல்
 ஏதாவது இலத்திரனியல் மற்றும் கணனி மயப்படுத்தப்பட்ட தொகுதியை அல்லது வலைப்பின்னலை அல்லது வலைத்தளங்களை தடைசெய்தல் அல்லது சேதப்படுத்தல் அல்லது செய்வதற்கு ஊகித்தல்
அத்தியாவசிய சேவையுடன் தொடர்புடைய ஏதாவது பண்டங்கள், இணைப்புக்கள் மீது தடைசெய்தல் அல்லது சேதப்படுத்தல் அல்லது செய்வதற்கு ஊகித்தல்
சமய அல்லது கலாச்சார அல்லது புராதன சொத்துக்களை அழித்தல் அல்லது சேதப்படுத்;தல் மற்றும்
இலத்திரனியல், அனலொக், டிஜிட்டல் அல்லது ஏனைய கம்பி அல்லது கம்பி தொடர்பற்ற தொடர்பாடல் பரிவர்த்தணைகளை தடைசெய்தல் அல்லது சேதப்படுத்தல் அல்லது செய்வதற்கு ஊகித்தல்அல்லது ஏதாவது செயற்பாடு 

மேற்போந்த செயற்பாடுகளை கீழ்வரும் நோக்கங்களுக்காக செய்யின் அது பயங்கரவாத நடவடிக்கை எனப்பொருள்படும்
மக்களை பயமுறுத்தும் வகையில்
தவறாக அல்லது சட்டமுரனான வகையில் இலங்கை அரசாங்கத்தை அல்லது வேறு ஏதானும் அரசாங்கத்தை அல்லது சர்வதேச அமைப்புக்களை ஏதாவது செயலை செய்ய அல்லது செய்யாது விட செயற்படல்
அவ்வாறான அரசாங்கத்தை செயற்படுவதை தடுத்தல் அல்லது 
இலங்கை அல்லது வேறு ஏதாவது நாடுகளின் ஆள்புல ஒருமைப்பாடு அல்லது இறைமைக்கு ஆபத்து ஏற்படுத்தல் 
மேற்படி விடயங்களை நல்லெண்ணத்துடன் செய்ய சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட எவ்விடயமும் பயங்கரவாத செயற்பாடு ஆகாது.
மேற்படி ஏற்பாடுகளின் படி பயங்கரவாத தடைச்சட்டம் ஒரு தனிமனிதனின் அல்லது இனத்தின் அல்லது குழுவின் உரிமைகள் மீது அல்லது சமாதானமான வாழ்வில் குறுக்கீடு செய்யும் செயலை அவசரகால நிலைமையின் கீழ் பயங்கரவாதச் செயலாக சித்தரித்து பூரண பாதுகாப்பு வழங்குவதை அவதானிக்கலாம். ஆனால் இதனை நடைமுறைப்படுத்துபவர்களின் விருப்பு வெறுப்புகளே இன்று இச்சட்ட ஒழுங்குவிதிகள் மீது மக்கள் நம்பிக்கையீனம் அடைவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
 2120ஃ05ம் இலக்க 22.04.2019 திகதிய அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் சமூகப்பாதுகாப்பு
அவசரகால ஒழுங்குவிதிகள் நடைமுறையில் இருக்கும் போது அவ்விதிகளின் எற்பாடுகளால் சொல்லப்பட்ட வகையில் புரியப்படும் பயங்கரவாதக் குற்றச் செயலுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரிவு-2(1) தண்டணைகளை விதிக்க இயலுமாக்கப்பட்டுள்ளது.

அப்பிரிவின் உப-பிரிவு-01(h)-யின் படி பார்வைக்கு தென்படும்படியான அல்லது பதிவுகள் ஊடாக அல்லது வாசிக்கப்படும் என்ற எண்ணத்துடன் அல்லது கதைக்கும் படி செய்யக்கூடிய ஏதாவது வார்த்தைகள் மூலம் அல்லது வேறு ஏதாவது வகையில் ஏற்படும் வன்முறையான செயற்பாட்டின் மூலம் அல்லது ஏதாவது செயல் நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ஏதாவது வன்முறையை ஏற்படுத்தும் செயற்பாடு அல்லது சமய அல்லது இனவாத அல்லது சமுதாய அமைதியின்மை அல்லது பகைமை அல்லது வேறுபட்ட சமூகங்களுக்கிடையே அல்லது சமயக் குழுக்களுக்கு இடையே அல்லது இனத்திற்கு இடையே விரோதம் ஏற்படுத்தும் எத்தகைய செயலும் பயங்கரவாதச் செயலாகும்.

மற்றும் அப்பிரிவின் உபபிரிவு-1(i) யின் கீழ் சட்டரீதியான அங்கீகாரம் இன்றி ஏதாவது நெடுஞ்சாலை அல்லது வீதிகள், பாதைகள் அல்லது பொது இடங்களில் உள்ள ஏதாவது பதாதைகள் அல்லது பொருத்துக்கள், கல்வெட்டுகளை அழிக்கும் வகையில் அல்லது அதன் அழகைக்கெடுத்தல் அல்லது உருவத்தை சேதப்படுத்தல் அல்லது கல்வெட்டுக்கள் போன்றவற்றை சேதப்படுத்தல் போன்ற செயலுக்காக குற்றம் காணப்படும் ஒருவர் 5 வருடத்திற்கு குறையாமலும் மற்றும் 25 வருடத்திற்கு விஞ்சாததுமான  வகையில் அமைந்த தண்டனைக்கு உட்படுத்தப்படுவார். 

மேலும் அவசரகால ஒழுங்குவிதியின் பகுதி-ஏஇ விதி-25(1) யின் படி யாராயினும் நபர்
ஏதாவது அசையும் அல்லது அசையா ஆனத்திற்கு அழிவினை அல்லது சேதத்தை ஏற்படுத்தும் நோக்குடன் அவ்வாதனத்தின் பெறுமானம் அல்லது பயன்பாட்டினை அழிக்கும் அல்லது மதிப்பிறக்கும் வகையில் ஏதாவது செயலினை செய்தல் 
ஏதாவது நபருக்கு மரணம் அல்லது காயம் ஏற்படுத்தல் அல்லது ஏற்படுத்த எத்தனித்தல்
 அழிக்கப்பட்ட அல்லது சேதப்படுத்தப்பட்ட அல்லது ஆட்கள் வெளியேற்றப்பட்டு வெற்று இடமாக அல்லது பாதுகாப்பு அற்ற இடமாக காணப்படும் ஏதாவது வளாகத்தினுள் ஏதாவது பொருட்களை களவெடுத்தல்
குற்றவியல் சட்டக்கோவையின் பிரிவு 427 தொடக்கம் 446 வரையான எதாவது குற்றங்களை செய்தல் அல்லது சட்டமுரணாக ஏதாவது வளாகத்தில் இருந்து ஏதாவது பண்டம் அல்லது வியாபாரப்பொருட்களை அகற்றல் அல்லது அகற்ற முயற்சித்தல் 
குற்றவியல் கோவையின் பிரிவு-138யின் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளதன் படி சட்டமுரணான ஒன்றுகூடல் ஒன்றின் உறுப்பினராக இருந்து கொண்டு மேற் கூறப்பட்ட உப பந்திகள் (ய) அல்லது (டி) அல்லது (உ) அல்லது (ன) யின் கீழான செயல் ஒன்றினை செய்யும் நோக்குடன் செயற்படல் 
அல்லது தெரிந்து கொண்டு நேர்மையீனமாக மேற்படி உப பந்திகள் (உ) அல்லது (ன) யின் கீழ் பெறப்பட்ட பொருட்களை பெற்றுக்கொள்ளல்
இவ்விதியின் கீழ் குற்றமாக கருதப்படுவதுடன் குற்றவியல் சட்டத்தில் எது எவ்வாறு இருப்பினும் இவ்விதியின் கீழ் அக்குற்றம் மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் குற்றம் காணப்படின் மரண தண்டனை அல்லது ஆயுட் தண்டனையால் குற்றத்தீர்ப்பளிக்கப்படும்.
அவசரகால ஒழுங்குவிதியின் கீழ் தற்காப்புக்கு இடம் உண்டா? 
தற்போது நடைமுறையில் உள்ள அவசரகால ஒழுங்குவிதியின் கீழான விதி 25(2) படி பிழையான செயற்பாட்டினால் ஒருவருக்கு இறப்பு அல்லது தீங்கு ஏற்படுத்தும் நபருக்கு எதிராக தற்காப்பு நடவடிக்கைக்காக செயற்படும்  போது குற்றவியல் கோவையின் பிரிவு-96 யின் கீழ் கூறப்பட்டுள்ள ஆதனத்திற்கான தனிப்பட்ட தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தல் என்ற உரிமை குறித்த 25ம் இவ்விதியின் கீழ் பாதிக்கப்படப் போகும் நபருக்கு ஏற்புடையதாகும். 

பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதை தடை செய்தல் 
ஏற்கனவே பயங்கரவாதச் செயல் என்றால் என்ன என்பதை அறிய முடிந்தது. அத்தகைய செயல் மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகால ஒழுங்குவிதியின் கீழான குற்றம் ஏதாயினும் ஒன்றினையோ அல்லது பலவற்றையோ செய்த நபர் யாரும் இவ்வொழுங்கு விதியின் கீழான விதி-26 யின் படி தண்டணைக்கு உட்பட வேண்டிய நபர் ஆவார்.
விதி-26, ஆளெவரும் அல்லது சங்கம் ஒன்று உள்ளடங்களான ஒருங்கிணைக்கப்பட்ட அல்லது ஒருங்கிணைக்கப்படாத குழு எதுவும் தனியாக அல்லது குழுவாக அல்லது குழுக்களாக  அல்லது அல்லது ஏவப்பட்ட குழுக்களுடாக மற்ற நபர்கள் மீது,
பயங்கரவாதச் செயற்பாடு
ஏதாவது குறிப்பிடு செய்யப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள் 
 மேற்படி பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்கப்படுத்தல் போன்ற செயற்பாடுகளை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது
இவ்வாறு மேற்படி விதிக்கு முரணாக ஏதாவது செயல் அல்லது செயல்களைச் செய்தல் குற்றம் ஒன்று ஆவதோடு மேல் நீதிமன்றத்தால் குற்றத்தீர்ப்பளிக்கப்படும் 10 வருடத்திற்கு குறையாத அல்லது 25 வருடத்திற்கு மேற்படாத மறியத்தண்டனையால் தண்டிக்கப்படுவார்.
மேலும் அவசரகால ஒழுங்குவிதியின் கீழான விதி 43(1)(2) யின் படி சனாதிபதி அவர்களால் குறிப்பீடு செய்யப்பட்டு கட்டளை இடப்பட்ட இலங்கையில் உள்ள ஏதாவது வீடு அல்லது இடத்தில் பீதியை ஏற்படுத்தும் வகையில் அல்லது சமாதானக்குலைவு ஒன்றை ஏற்படுத்த வழிசமைக்கும்  செயற்பாட்டில் அல்லது அச்சத்தை ஏற்படுத்தும் காரியங்களில் ஈடுபடும் வகையில் கலந்துகொள்ள அல்லது அதன் அருகில் செல்லல் தடைசெய்யப்பட்டுள்ளது. 
மேற்படி விதி-43(2) அச்சம் அல்லது பயமூட்டல் என்பதை பின்வருமாறு விபரிக்கின்றது. யாராயினும் நபருக்கு அல்லது அவரது குடும்பத்தின் உறுப்பினர் ஒருவருக்கு அல்லது அவரின் கீழ் வாழும் நபருக்கு நியாயமான அளவில் காயம் அல்லது ஊறு ஒன்று ஏற்படுத்துவதற்கான பயத்தினை அவர் மனதில் ஏற்படுத்தல் அல்லது நபர் ஒருவருக்கு வன்முறையை கட்டவிழ்த்து விடல் அல்லது அவரது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தல் என்பதைக்குறிக்கும்.

இவ்விதியின் கீழ் ஊறு அல்லது காயம் ஏற்படுத்தல் என்பது ஒருவரின் வியாபாரம், தொழில், வேலை அல்லது வேறு வகையிலான வருமானம் என்பவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்தல் என்று பொருள்படும் இது வேறு வகையில் அமைந்த நடவடிக்கை எடுக்கத்தகுந்த செயற்பாட்டையும் குறிக்கும்.

அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் பிரகடனப்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவை மீற முடியுமா? 

அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழான விதி 14(1) ஊரடங்கு உத்தரவு பற்றி கூறும் போது எந்த ஒரு நபரும் குறித்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நேரப்பகுதியில் குறித்த ஊரடங்கு உத்தரவில் கூறப்பட்டுள்ளவாறு பொது வீதி, புகையிரத பாதை, பொதுப்பூங்கா, பொதுமக்கள் இளைப்பாறும் மைதானம் அல்லது வேறு பொது மைதானம் அல்லது கடற்கரை ஓரம் அல்லது வேறு ஏதாவது கட்டிடம், வளாகம் அல்லது இடம் என்பவற்றில் எழுத்திலாலன அனுமதியின்றி நடமாட முடியாது.இவ்விதியின் கீழ் பொதுவீதி என்பது பாலத்திற்கு மேலான ஏதாவது வீதி, நடைபாதை, கால்வாய் என்பவற்iயும் குறிக்கும்.

பொதுமக்கள் கட்டளைச்சட்டத்தின் பிரிவு-16 மேற்படி விதி-14(1) யின் கீழான அதே வரைவிலக்கணத்தை கூறுவதோடு மேற்படி பிரிவு-16 உபபிரிவு-(3) யின் படி குறித்த ஊரடங்கு உத்தரவை மீறும் நபருக்கு நீதவான் நீதிமன்றால் சுருக்க முறை விசாரணை ஒன்றின் கீழ் குற்றம் காணப்படின் ஒரு மாத கடூழிய சிறைத்தண்டனையும் 100 ரூபாவுக்கு மேற்படாத தண்டப்பணமும் அறவிடப்படும். 

மேற்படி தண்டனை குறித்த நபர் ஊரடங்கு உத்தரவை மீறி தடுக்கப்பட்ட இடத்தில் நின்றால் மாத்திரமே அத்தண்டனைக்குரியது. அவ்வாறு ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் வந்து மேற்கூறப்பட்ட குற்றச் செயல்களை செய்தால் அது அப்பிரிவால் கூறப்பட்ட தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே மேற்படி அவசரகால ஒழுங்குவிதிகள் மற்றும் அதனுடன் ஒன்றித்த ஏற்பாடுகள் சமூகரீதியில் பாதுகாப்பு வழங்கும் வகையில் அமைந்தாலும் அதன் செயற்பாட்டு எல்லை தளர்வாக்கப்படாமல் பிரயோகிக்கப்படின்  வன்முறைகள் வளர்வதை தடுக்க முடியும். குறித்த சட்ட ஏற்பாடுகளை மதித்து நடப்பதோடு அதனை தவறாக பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில் உரிய முறையில் உரிய நபர்களுக்கு தெளிவூட்டி அழுத்தம் கொடுத்தல் நாமும் சட்டத்தினால் உச்ச அளவில் பாதுகாக்கப்படலாம். 

1 comment:

  1. இத வன்முரைக்கு முன்னதாகவே போட்டிருக்கலாமே! உயிர் போய் ,சொத்துக்கள் தீக்கரையாக்கப் பட்டதுக்குப் பின்பு தானே அத கொண்டு வாரீங்க. இப்ப என்ன பிரயோஜனல் எல்லாம் முடிஞ்சி போய்டு.

    ReplyDelete

Powered by Blogger.