Header Ads



அப்பாவி முஸ்லிம் பெண்ணின் கைது, பொலிசார் மீது மனித உரிமைகள் ஆணைக்குழு சீற்றம்

- எ.யு.எம்.மௌபீர் -

துறைமுக அடையாலமாக பயன்படுத்தும் கப்பல் சக்கரத்துக்கும், பெளத்த தம்ம சக்கரத்துக்கும் வித்தியாசம் தெரியாத போலிஸ் அதிகாரிகல் எவ்வாறு நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கமுடியும் என மணித் உரிமைக்கான அமைப்பின்  பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் (பதில்) சுறங்கி ஆரியவன்ச போலிஸ் மா அதிபரிடம் கேள்வி.

தம்ம சக்கரம் என்று கூறி கப்பல் சக்கரம் போன்ற படத்துடன் கூடிய ஆடை அணிந்திருந்தாள் என்று ஒரு பெண்ணை போலீசார் கைது செய்து விலக்கு மறியலில் வைத்த சம்பவம் குறித்த் போலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்திலேயே சுறங்கி ஆரியவன்ச இதனை தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் இந்த விடயத்துடன் தொடர்ப்பு பட்டுள்ள போலீசார் மீது உடனடியாக விசாரணை மேட்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

மஹியங்கனை போலிருக்கு கிடைத்த தகவலின் படி விரைந்த போலீசார் ஹசலக கொலன்கோட பிரதேசத்தில் வசிக்கும் எம்.ஆர். மஷாகிமா என்ற பெண் இவ்வாறு கைதி செய்ய முன் அவர் அணிந்திருந்த ஆடை புகைப்படம் எடுத்த போலீசார் அதனை வாட்சப் மூலம் போலிஸ் உயர் அதிகாரிக்கு அனுப்பி அவர் கொடுத்த உத்தரவின் பேரிலேயே இந்த பெண் கைதி செய்யப்பட்டதாக பெண்ணின் கணவர் அப்துல் முனாப் தெரிவித்துள்ளார்.

இந்த பெண் (ICCPR ) international covenant on civil political right சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான சர்வதேச சட்ட மூலத்துக்கு அமைவாக கைது செய்யப்பட்டு இம்மாதம் 27 திகதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

இப்படியான ஆடைகள் fashion போன்ற வை உலக நாடுகளில் வேகமாக பரவி வருவதும் விற்பனையில் இருப்பதும் தெரியாத போலிஸ் அதிகாரிகள் குறித்து மனித உரிமை மீறல் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொலிஸ்மா அதிபரை கேட்டுள்ளார்.

3 comments:

  1. ICCPR இற்ற்கு எதிரான கைது

    ReplyDelete
  2. Why cant Human right council file case to this incident

    ReplyDelete
  3. This we call total break down of law and order in the Island!!!

    ReplyDelete

Powered by Blogger.