Header Ads



சிரியாவிலிருந்து பயங்கரவாதி, அனுப்பிய பணம் - தந்தை முறைப்பாடு

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைய சிரியாவுக்கு சென்ற இலங்கையரான மொஹமட் முஹூசித் இசாக் அஹமட் என்பவரின் தந்தை பயங்கரவாத விசாரணை பிரிவில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

இந்த விடயத்தை பயங்கரவாத விசாரணை பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பில் மேலும்,

சிரியாவில் ஐ.எஸ். அமைப்பில் இருக்கும் மொஹமட் முஹூசித் இசாக் அஹமட் என்ற எனது மகன், தனது மகளான அஸ்மாவுடன் இலங்கைக்கு வந்த போது பொதி ஒன்றை என்னிடம் கொடுத்தார்.

இதன்போது மொஹமட் அருஸ் மொஹமட் சுபைஹிர் சிரியாவில் இருந்து கடந்த 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வட்ஸ் அப் மூலம் என்னை தொடர்பு கொண்டு, அறிவிக்கும் வரை அந்த பொதியை கவனமாக வைத்திருக்குமாறு கூறியிருந்தார்.

இந்த தொலைபேசி அழைப்பு கிடைத்து சில தினங்களுக்கு பின் முகத்தை முற்றாக மூடிய முஸ்லிம் பெண் ஒருவர் வீட்டுக்கு வந்து, சிரியாவில் உள்ள மொஹமட் அருஸ் மொஹமட் சுபைஹிருக்கு வழங்குமாறு மற்றுமொரு பொதியை வழங்கியிருந்தார்.

இதனையடுத்து நான் மற்றைய பொதி இருந்த இடத்தில் இந்த பொதியையும் வைத்திருந்தேன். இதன் பின்னர் என்னை தொடர்பு கொண்ட சுபைஹிர், பொதிகளில் உள்ள பணத்தை அமெரிக்க டொலர்களாக மாற்றி, அறிவிக்கும் வரை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கூறினார்.

அந்த பொதிகளில் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட பணம் இருந்தது. வெள்ளவத்தையில் உள்ள மூன்று வெளிநாட்டு நாணயமாற்று நிலையங்களுக்கு சென்று பணத்தை டொலர்களாக மாற்றி, வீட்டில் படுக்கை அறையில் உள்ள அலுமாரியில் பாதுகாப்பாக வைத்திருந்தேன் என மொஹமட் முஹூசித் இசாக் அஹமட் என்பவரின் தந்தை முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி முறைப்பாட்டுக்கு அமைய முறைப்பாடு செய்த நபரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்த பின், 23,500 அமெரிக்க டொலர் பணத்தை கைப்பற்றியதாகவும் இந்த பணம் சட்டரீதியான பணமாக என்பதை கண்டறிய விசாரணை நடத்துமாறு மத்திய வங்கிக்கு உத்தரவிடுமாறும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து கைப்பற்றப்பட்ட பணம் சட்டரீதியான அமெரிக்க டொலர்களான என்பது சம்பந்தமான விசாரணை நடத்தி, அறிக்கை ஒன்றை வழங்குமாறு இலங்கை மத்திய வங்கியின் நிதி முகாமையாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2 comments:

  1. இவர் யாருக்கு கதை விடுகிறார்.பொதியை வருடக் கணக்கில் திறந்து பார்க்காமலும்,தன் மகனிடமும் அந்த முகம் மூடிய பென்னிடமும் பொதியில் என்ன உள்ளது என விசாரிக்காமல் எவ்வாறு வீட்டுக்குள் வைத்துக் கொண்டார்.ஆகக் குறைந்தது முகம் மூடிய பெண் யாரெண்டு விசாரிக்காமல் பொதியை எவ்வாறு வாங்கிக் வைத்துக் கொண்டார்.எல்லாமே குடும்பங்கலோடு சேர்ந்து பன்னிவிட்டு (பனத்துக்காக) இப்போ சூப்பர் கதை விடுராரு போல

    ReplyDelete

Powered by Blogger.