Header Ads



எந்த குற்றமும் ரிஷார்ட் மீது முன்வைக்கப்படாத நிலையில், அவர் பதவி விலகத் தேவையில்லை - ரணில்

அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் அமைச்சுப் பதவியை தற்காலிகமாக இராஜினாமா செய்யவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் விடுத்த கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துவிட்டதாக அறியமுடிந்தது.

நேற்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் – நம்பிக்கையில்லா பிரேரணை அமைச்சர் றிஷார்த்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளதால் அவர் தற்காலிகமாக பதவியில் இருந்து விலகினால் இப்போதைய பிரச்சினைகளை சமாளிக்கலாமெனவும் ,ரவி கருணாநாயக்க,திலக் மாரப்பன ஆகியோர் முன்னர் இராஜினாமா செய்தது போல ரிஷார்த்தும் செய்ய வேண்டுமென தீர்மானித்தனர்.

இந்தக் கோரிக்கை பின்னர் பிரதமர் ரணிலிடம் முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்தக் கோரிக்கையை உடனடியாக நிராகரித்தார் ரணில் .” தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலோ அல்லது வேறு எந்த குற்றங்களோ ரிஷார்ட் மீது முன்வைக்கப்படாத நிலையில் அவர் பதவி விலகத் தேவையில்லை ” என்று ரணில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். tamilan

4 comments:

  1. உருப்படியான கருத்து ரனிலிடம் இருந்து.ஆனால் அவர் கட்டியின் பின் வரிசை உறுப்பினர்கள் எதிர்க்கட்சியினரை விட மோசமான கருத்துகளை வெளியிடுவதை ஏன் இன்னும் கண்ணை மூடி கொண்டு கேட்டு கொண்டிருக்கிறார்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்...பாரக்கல்லாஹ் அல்லாஹ்வே போதுமானவன் படைத்தவனை மீரி எந்த காவாலியும் ஒரு மண்ணும் பன்னமுடியாது இன்ஷா அல்லாஹ்...அல்ஹம்துலில்லாஹ்..

    ReplyDelete
  3. அமைச்சர் ரிசாட்பதியுத்தீன் இது விடயத்தில் பாரளுமன்றத்தில் அசவ்கரியப்படுத்தப்படுவாராக இருந்தால் இந்த
    நாட்டின் பாராளுமன்றம் நீதி நியாயமற்ற இனவாதம் தலைதூக்குகின்ற சபையாகத்தான்
    அது மாறக்கூடும் என்பதில் எவ்வித சதேகமும்
    இலை.

    ReplyDelete

Powered by Blogger.