Header Ads



அமைச்சர் மங்களவிற்கு, இறைவன் அருள்புரிய வேண்டும்...


அமைச்சர் மங்கள சமரவீர முஸ்லிம் சமூகத்தால் கொண்டாடப் படவேண்டியவர்.

அண்மையில் நடந்த சம்பவங்கள் குறித்து மிக நடுநிலையாகவும் முஸ்லிம்களின் உணர்வுகளை மிகவும் மதித்தும் நடந்து கொண்ட ஒரு அமைச்சர் என்றால் அது மங்கள சமரவீர மட்டும்தான்.

அவர் எப்போதுமே இந்த இனவாதத்துக்கு எதிராக மிக நடுநிலையாக குரல் கொடுத்து வருபவர்.

அண்மையில் நடந்த நிறுவனத்தலைவர்களின் கூட்டமொன்றில் அமைச்சர் மங்கள சமரவீர கருத்துத் தெரிவிக்கையில்...

"நாட்டில் இனவாதத்தை போஷிப்பதில் ஹிரு, தெரன ஆகிய இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் பெறும்பங்கு இருக்கிறது.

இந்த நிறுவனங்கள் தெளிவாக ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே இயங்கிவருகின்றன.

இலங்கையில் 99 வீதமான முஸ்லிம்கள்  தீவிரவாதத்தை எதிர்ப்பவர்கள்,தீவிரவாதிகளை அரச படைகளுக்கு காட்டித் தந்தவர்கள்.

ஆனால் முஸ்லிம் வீடுகளில் கடு,கடு என்று சிங்களமக்கள் மத்தியில் முஸ்லிம் வெறுப்பை உருவாக்கியவர்கள் இந்த இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களும்தான்.

எனவே இந்த இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் விளம்பரம் வழங்குவதை  தற்காலிகமாக நிறுத்துமாறு நிறுவனத் தலைவர்களுக்கு நிதி அமைச்சர் என்றவகையில்  மங்கள கட்டளையிட்டார்.

இனிவரும் காலங்களில் குறித்த தொலைக்காட்சி  நிறுவனங்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்   என்பதனை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு  விளம்பரம் வழங்குவது பற்றி சிந்திப்போம் என்றார்"

ஒரு சாதாரண சிங்களக் குடிமகன்,  ஹிரு, தெரன சொல்லும்  செய்திகளை நம்பியே நாட்டு நடுப்புகள் குறித்த தீர்மாணத்துக்கு வருகிறான்,  எனவே இவர்கள் பொறுப்பாக நடந்து இருந்தால்  முஸ்லிம்கள் குறித்த அச்சம்,வெறுப்பு சிங்கள மக்கள் மத்தியில் இந்தளவுக்கு ஏற்பட்டு இருக்காது.

பெரும்பான்மை மக்களின்,தேரர்களின்,ஊடகங்கின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அமைச்சர் மங்கள சமரவீர  நடந்து கொள்ளும்விதம், எடுக்கும் தீர்மாணங்கள்  அனைத்துமே மிகவும் போற்றத்தக்கதாக அமைந்திருக்கிறது.

அமைச்சர் மங்களவிற்கு இறைவன் அருள்புரியவேண்டும்.

Safwan Basheer 

இலங்கையில் jaffna muslim இணையம் மகிந்தவின் காலத்தில்   தடை செய்யப்பட்ட போது, அதற்கெதிராக பாராளுமன்றத்தில் முதன்முதலாக குரல் கொடுத்ததும் இந்த மங்கள சமரவீரதான் என்பது குறிப்பிடத்தக்கது.

11 comments:

  1. அருள் புரிய துஆ செய்யாமல் ஹிதாயத் கிடைக்க துஆ செய்யுங்கள்

    ReplyDelete
  2. I also agreed with Safwans article. Hon. Mangala is ones of the trust Worthy of this nations.

    ReplyDelete
  3. அது மட்டுமல்லாது இலங்கை ஒரு பௌத்த நாடு, சிங்கள நாடு என்று கூறலாகாது...அனைத்து இன மக்களுக்குமான் நாடு என்று எந்த பெரும்பான்மையின தலைவர்களும் கூறாத கருத்தை கௌரவ மங்கள சமரவீர சொல்லியுள்ளார்...பௌத்த மத குருமாரே இவரது இந்த கருத்தால் சங்கடத்துக்கு ஆளாகியுள்ளனர்

    ReplyDelete
  4. அது மட்டுமல்லாது இலங்கை ஒரு பௌத்த நாடு, சிங்கள நாடு என்று கூறலாகாது...அனைத்து இன மக்களுக்குமான் நாடு என்று எந்த பெரும்பான்மையின தலைவர்களும் கூறாத கருத்தை கௌரவ மங்கள சமரவீர சொல்லியுள்ளார்...பௌத்த மத குருமாரே இவரது இந்த கருத்தால் சங்கடத்துக்கு ஆளாகியுள்ளனர்

    ReplyDelete
  5. Ameen
    really mangala is good person

    ReplyDelete
  6. ஆமாம் அரசியல்வாதிகள கொண்டாடி கொண்டாடிதான் இந்த நிலமை. அவர் ஒன்றும் முஸ்லிம்களுக்கு சார்பாக எதையும் கூறவில்லை. உண்மையைக்கூறினார் அவ்வளவுதான்.
    முஸ்லிம் அரசியல்வாதிகள் பயந்தாங்கொல்லிகள் அதனால் உண்மை பேசமாட்டார்கள்.
    முஸ்லிம் சமூகமும் அப்படித்தான்.
    முஸ்லிம்களாகிய நாம் எவ்வாறு பிற நாடுகளிலிருந்து வந்தோமோ அவ்வாரே சிங்களவர்களும் இந்தியா/நேபாலிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு எவ்வாறு உரிமை இருக்கின்றதோ அவ்வாரே முஸ்லிம்களுக்கும் இங்கு உரிமையுண்டு.
    இந்த நாடு இங்கு பிறந்த அனைவருக்கும் சொந்தமான ஒன்று!!

    ReplyDelete
  7. மங்கள, மண்ணில் நல்ல வண்ணம் வாழிய

    ReplyDelete
  8. Hon.mangala samara
    Veera sir..
    Behalf of srilankan
    Muslims Highly thanks
    You...
    God bless you...

    ReplyDelete
  9. Thank you for your co-operation sir.

    ReplyDelete

Powered by Blogger.