Header Ads



பியசேன ஐயாவின், அற்புதமான செயற்பாடு (மெய்சிலிர்க்கச் செய்யும் மனிதம்)

ஏறாவூர் முஸ்லிம்களுக்கு நோன்பை முன்னிட்டு தம்புள்ளை சிங்கள வர்த்தகரால் அன்பளிப்பு பொதிகள்

புனித ரமழானை வரவேற்கும் ஏறாவூர் முஸ்லிம் சகோதரர்களுக்கு தனது அன்பளிப்புக்களையும் வழங்கி விடுங்கள் என சுமார் 2500 கிலோ கிராம்களுக்கும் அதிகமான உருளைக்கிழங்கு , மற்றும் பெரிய வெங்காய பொதிகளை அனுப்பி வைத்துள்ளார் தம்புள்ளையை சேர்ந்த பியசேன எனும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த வர்த்தகர்.

1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏறாவூர் பொதுச் சந்தையில் மரக்கறி வர்த்தகத்தில் ஈடுபட்ட இவர் பின்னர் இன மோதல்கள் வலுப்பெற்றிருந்த நேரம் இடம்பெயர்ந்து சென்று தம்புள்ளையில் பிரபல வர்த்தகராக திகழ்கிறார்.

அந்த வகையில் புனித ரமழானை எதிர்கொள்ளும் தனது ஏறாவூர் சொந்தங்களுக்கு பகிர்ந்தளியுங்கள் எனக் கூறி சுமார் 2500கிலோ கிராம் நிறை கொண்ட உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காய பொதிகளை அனுப்பி வைத்துள்ளார்.

இதனை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியினை ஏறாவூர் பொதுச்சந்தை வியாபாரிகள் சங்கம் முன்னெடுத்து வருகின்றனர்.


ஏறாவூர் பொதுச் சந்தை வர்த்தகர்கள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் வஹாப் ஹாஜி, செயலாளர் தஸ்த்தகீர், உப செயலாளரும் நகர சபை உறுபபினருமான ஜெமீல் ஆகியோர் தலைமையில் ,அமைப்பின் சக உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

ஏறாவூரில் உள்ள சுமார் ஆயிரம் வறிய குடும்பங்களுக்கும், அரபுக்கல்லூரிகளுக்கும் பகிர்ந்தளிக்க இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றிகள் பியசேன ஐயா.... உங்களைப்பபோன்றவர்களால் மனிதம் வாழ்கிறது...



3 comments:

  1. this is our relationship with sinhala peoples

    ReplyDelete
  2. பியசேன ஐயா
    நன்றிகள் உங்களுக்கு..

    ReplyDelete
  3. மனிதர்களில் இருவகை நல்லவர்கள்
    கெட்டவர்கள். ஏனைய பிரிவுகள் எல்லாம் தலைமைத்துவப் போட்டியிலும் தார்மீகப்போட்டியாலும் உருவாகியவையே..

    ReplyDelete

Powered by Blogger.