Header Ads



சஹ்ரானுக்கு வீடு வழங்க உதவியதாக, குற்றம்சாட்டப்பட்ட அப்பாவி இளைஞன் விடுதலை

சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­தா­ரி­க­ளுக்கு தங்­கு­வ­தற்கு வீடு பெற்றுக் கொடுப்­ப­தற்கு உதவி புரிந்தார் என்ற குற்­றச்­சாட்டில் சந்­தே­கத்தின் பேரில் கைதுசெய்­யப்­பட்டு தடுப்புக் காவலில் வைத்து விசா­ரணை செய்­யப்­பட்டு வந்த இளை­ஞனை கல்­முனை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் ஐ.எம். றிஸ்வான் புதன்­கி­ழமை (22) விடு­தலை செய்­துள்ளார்.

சஹ்ரான் குழு­வி­ன­ருக்கு வீடு பெற்றுக் கொடுப்­ப­தற்கு உதவி புரிந்­துள்­ளா­ரென சந்­தே­கத்தின் பேரில் கடந்த 02 வாரங்­க­ளுக்கு முன்னர் பொலி­ஸா­ரி­னாலும், குற்­றப்­பு­ல­னாய்வு அதி­கா­ரி­க­ளாலும் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் குறித்த இளை­ஞன்­கைது செய்­யப்­பட்டு தடுப்புக் காவலில் வைத்து விசா­ரணை செய்­யப்­பட்டு வந்தார்.

இச்­சம்­பவம் தொடர்­பாக குறித்த இளைஞன் மீது முன்­வைக்­கப்­பட்ட  குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­ப­டா­மை­யினால் கல்­முனை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் ஐ.எம். றிஸ்வான் புதன்­கி­ழமை (22) இளை­ஞனை விடு­தலை செய்­துள்ளார்.

இதே­வேளை, கல்­மு­னைக்­குடி பிர­தே­சத்தில் சஹ்ரான் குழு­வி­ன­ருக்கு உத­விய குற்­றச்­சாட்டின் பேரில் கைதுசெய்­யப்­பட்­டுள்ள 02 சந்­தேக நபர்­க­ளையும் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு அம்பாறை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு நீதிமன்றம்  புதன்கிழமை (22)  உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.