Header Ads



மினுவாங்கொடையில் புர்காவுக்கும், நிகாபுக்கும் முற்றிலும் தடைவிதிப்பு

மினுவாங்கொடை நகர சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில், புர்கா, நிக்காப் என்பவற்றை அணிவதற்கு, முற்றிலும் தடை விதித்து, மினுவாங்கொடை நகர சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நகர சபைத் தலைவர் நீல் ஜயசேகர தலைமையில் இது தொடர்பான விசேட கூட்டம் கூடியபோதே, நகர சபைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களால் மேற்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

பாதுகாப்புக் காரணங்களுக்காக, மினுவாங்கொடை பிரதேசங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிய வேண்டாமென,  நகர சபையினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

3 comments:

  1. வரவேற்கிறோம்,சரி ஆனால் இதை வைத்து சிலர் அபாயா போடுவதை மற்றும் தலை மூடுவதை யும் தடுக்காமல் பார்த்து கொள்ளும்கல்.

    ReplyDelete
  2. Why this story.
    It was already banned in all Island.
    "BANNED"

    ReplyDelete
  3. என்னப்பு இது பெரிய கருமமாக இருக்கு. அவசரகால சட்டவிதிகளின்பேரில் நிகாப், புர்கா என்பன ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ளன. இதனை மீறி யாராவது இவற்றை அணிந்தால் யார் யார் இவர்களை கைது செய்ய முடியும் என்ற நியதியும் இச்சட்டத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநகர, நகர, பிரதேச சபைகளினால் ஆக்கப்படும் சட்டங்கள் பாராளுமன்றத்தினால் அரசாங்கத்தினால் மற்றும் நாட்டின் தலைவரினால் ஆக்கப்படும் சட்டங்களை விட அதிகாரமிக்கதா?

    ReplyDelete

Powered by Blogger.