Header Ads



"அரபு பெயர் உடையவர்கள் என்கின்ற ஒரே, காரணத்தினால் முஸ்லிம்களின் பரிதாப நிலை"

ஊடகவியலாளர் ரிஸ்வி மஹ்ரூப் அசாதாரண முறையில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவளில் வைத்திருந்து விசாரணை செய்யப்பட்டுள்ளார் . 

இலங்கையில் அரபு பெயரை உடையவர் என்கின்ற ஒரே காரணத்தினால்  தொடரும் இந்த  அசாதாரண கைதுகள் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு சிறுபான்மை தமிழ் சமூகம் அடையாள அட்டையில் தமிழ் பெயரை உடையவர் என்கின்ற ஒரேகாரணத்தினால் அனுபவித்த   இதே இன்னல்களையும் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்த அந்த வேதனையையும் நாம் கண்கூடாகவே கண்டோம் அந்த துன்பங்களையும் நாம்  நன்கறிவோம். 

இன்று இதே நிலமை சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் பக்கம் திரும்பி இருக்கிறது. 

ஊடகவியலாளர் ரிஸ்வி அனுராதபுரத்தில் சிங்கள மக்களுடன் ஒன்றாகவே வாழ்ந்தவர்,  இனங்களுக்கிடையிளான ஒன்றுமையை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றியவர். வஹ்ஹாபிய,  ஐ. எஸ் இஸ்லாமிய தீவிர வாதத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர் ,  பௌத்த பேரினவாத அமைப்புகளோடு பல ஊடக விவாதங்களில் பங்குபற்றி சமூகம் சார்த கருத்துக்களை முன்வைத்த ஒரு  ஊடகவியலாளர்

தன்னிடம் சீடி வைத்திருந்தார் என்ற காரணத்தினால் கைது செய்யப்பட்டு  தடுப்புக்காவளில் வைத்திருந்து பின்னர் அந்த CD க்களில் ஒன்றும் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். 

முஸ்லிம்  ஊடகவியலாளர்கள்  CD க்களை தம் வசம்  வைத்திருப்பதும் பயங்கரவாத  தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் குற்றமாக  கருதப்படும் நிலைக்கு நாட்டின் தற்போதைய ஊடக சுதந்திரம் காணப்படுகிறது. . 

ஊடகவியலாளர் ரிஸ்வி குற்றமற்றவர் என்று விடுதலையான பிறகும் தான் ஐந்து தசாப்தங்களுக்கு மேல் தான் கௌரவமாக வாழ்ந்த ஊரில் அயலவர்கள் நன்பர்கள் கூட சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலைக்கு உருவாகி இருக்கிறது . 

நன்பர் றிஸ்வி மஹ்ரூப் அவர்களுக்கு நடந்த இந்த அநீதிக்கு எதிராக வழக்குத்தாக்கள் செய்வதற்காக முயற்சிகளை சிந்திக்கிறோம், இருந்தும் இலங்கையின் பாதுகாப்புத்துரையின் இந்த  நடந்து முடிந்த அசாதாரணத்தை  சரி செய்ய முடியாது . 

அரபு பெயர் உடையவர்கள் என்கின் ஒரே  காரணத்தினால் கைது செய்யப்படும்  பல றீஸ்விக்கள் ஒவ்வொரு நாளும் துன்பப்படுகிறார்கள். 

நீதியே இல்லாத ஒரு நாட்டில் நீதிக்காக ஏங்கும் ஒரு சமூகமாக முஸ்லிகளின் இன்றைய பரிதாப நிலை .

யு. எச். ஹைதர் அலி

No comments

Powered by Blogger.