Header Ads



சாய்ந்தமருது மக்கள் தேசபக்தியுடையவர்கள் - பதவி உயர்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் புகழாரம்

- பாறுக் ஷிஹான் -

சாய்ந்தமருதில் பதுங்கிய  பயங்கரவாதிகள் தொடர்பில் தகவல் வழங்கிய அப்பகுதி மக்கள் தேசபக்தியுடையவர்கள் என  பதவி உயர்வுடன் பணப் பரிசு பெறும் பொலிஸ் உத்தியோகத்தர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இன்றைய தினம் (3) தனக்கு கிடைக்கப்பெற்ற பதவியுயர்வு மற்றும் வெகுமதி தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவருக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் இவ்வாய்ப்பு அதிஸ்டம்  எனது மக்கள் தொடர்பாடலுக்கு கிடைத்த வெகுமதி என கூறினார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது

கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு 2015 ஆண்டு காலப்பகுதியில் இருந்து பணியாற்றுவதாகவும் அவ்வாறு பணியாற்றும் போது அன்றைய தினம்(26) அன்று தேசபக்தி மிக்க மக்களில் இருவர் என்னை சந்தித்து சம்பவத்தை விபரித்தனர்.அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்ற நான் அங்கு பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை  அறிந்து உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியதனால் பாரிய அழிவு ஒன்று தடுக்கப்பட்டுள்ளது என்பதை நினைக்கும் போது ஆறுதலாக உள்ளது என மகிழ்ச்சியுடன் கூறினார்.

மேற்குறித்த பொலிஸ்  உத்தியோகத்தர் தற்போது சார்ஜன்ட் தரத்திற்கு தரமுயர்த்தப்பட்ட மகிழ்ச்சியுடன் தனது பெற்றோர் விவசாயம் செய்தே தனக்கு  கல்வி கற்பித்ததாகவும் குடும்பத்தில் இரண்டு அண்ணாக்களுடன் தான்  3 ஆவது பிள்ளை என குறிப்பிட்டார்.

36 வயதை உடைய   டபிள்யு.டி.சுமிந்த நிஹால் வீரசிங்க    2009 ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி இலங்கை பொலிஸில் இணைந்து கொண்டுள்ளார்.மொனராகலை மாவட்டத்தில் எத்திமலே கிராமத்தில் உள்ள எத்திமலே மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுள்ளார்.இவர் கல்முனை பிரதேச மக்களுடன் நட்புடன் பழகுகின்ற போக்குவரத்து துறை பொலிஸ் உத்தியோகத்தராவார்.

மேலும்   சாய்ந்தமருதில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் தொடர்பில் தகவல் வழங்கியவர்களுக்கு பதவி உயர்வுடன் பணப் பரிசு வழங்க பொலிஸ் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
இதன் போது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு சார்ஜனாக பதவி உயர்வுடன் 5 இலட்சம் ரூபா பணப் பரிசும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 5 இலட்சம் ரூபா பணப் பரிசும் முஸ்லிம் பிரஜைகள் மூவருக்கு தலா 10 இலட்சம் ரூபா பணப் பரிசும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


4 comments:

  1. வாழ்த்துக்கள்.அனைவரும் இதே போல் இருந்து இந்த புதிய ஆனால் ஒரு சில பயங்கரவாதிகலை ஒழிக்க வேண்டும்

    ReplyDelete
  2. நாட்டின் தூய்மையான மனிதநேயமுள்ள தேசபக்தர்கள் வாழ்க.

    ReplyDelete
  3. WoW! what a laudable & exemplary act of a truly dedicated Police Officer - when someone leads others can follow - equally praiseworthy is that patriotic individual who kept this police officer informed. May Allah (SWT) bless Sri Lanka and all its people.

    ReplyDelete

Powered by Blogger.