Header Ads



முஸ்லிம்கள் வழங்கிய ஒத்துழைப்பை, இல்லாமல் செய்துகொள்ள வேண்டாம் - ரணில்

பயங்கரவாதத்துக்கு அடிபணியாமல் நாட்டு மக்களின் வாழ்க்கையை சாதாரண நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற மே தின நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முஸ்லிம் பள்ளிவாயல்களில் வழிபாடுகள் இடம்பெற வேண்டும். அதேபோன்று ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்தவ ஆலயங்களில் வழிபாடுகள் இடம்பெற வேண்டும்.

நாம் உள்நாட்டுப் பயங்கரவாதத்துக்குப் பகரமாக வெளிநாட்டு ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதத்துக்கு முகம்கொடுத்திருக்கின்றோம். நாம் சர்வதேச புலனாய்வுத் துறையினரையும் இணைத்துக் கொண்டே பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளோம்.

நாம் பயங்கரவாதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமாக இருந்தமைக்கு பிரதான காரணம், முஸ்லிம்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இதனை இல்லாமல் செய்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன் எனவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.  

(Dc)

3 comments:

  1. பிரதமர் அவர்களே இதை பொது பல சேனாவுக்கு முதலில் அரிவியுங்கல்.அவர்கள் மட்டும்தான் தற்போது விசமக் கருத்துக்களினை கூற ஆரம்பித்துல்லார்கல்

    ReplyDelete
  2. International CID WE DONT WON.T

    ReplyDelete
  3. The helping Moslems mustn't be tortured Mr.Ranil, in the name housesearch.
    Forces are capturing all our daily home needs assets, specially bringing the dirty dogs into our houses and mosques.
    Please, concern this kind appeal.

    ReplyDelete

Powered by Blogger.