Header Ads



அரபு மொழியில் பெயர்ப் பலகை, இருந்தால் உடன் அகற்றுங்கள் - சுற்றுநிருபமும் வெளியாகிறது

தனியார் அல்லது அரச நிறுவனங்களில் அரபு மொழியில் பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தால், அவற்றை உடனடியாக நீக்கிவிடுமாறு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்றுநிருபம் சகல அரச அதிகாரிகள் மற்றும் மாகாண சபை தலைவர்கள் ஆகியோருக்கு வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாக ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளைத் தவிரவுள்ள எந்தவொரு மொழியிலும் அறிவித்தல் பலகைகள் அமைக்கப்படக் கூடாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  

5 comments:

  1. IZU WARAWETKA THAKKAZU. AZEIPOL CHEENA PASHAI IL ULLAWAIHALAI UM AHATRINAL SHATTAM ELLORUKKUM POZUWAHA IRUKKUM.

    ReplyDelete
  2. how about chinese language sign boards on newly construction buildings in colombo, will it be applicable only to arabic or any foring language?

    ReplyDelete
  3. how about chinese language sign boards on newly construction buildings in colombo, will it be applicable only to arabic or any foring language?

    ReplyDelete
  4. அடே அனுஷ் நீ நினைத்தியா நாம் கோபப்படுஒமென்று..

    ReplyDelete

Powered by Blogger.