Header Ads



முஸ்லிம்கள் இராணுவத்தினருடன் சகோதரர்களைப் போன்றே பழகுகின்றனர் - இராணுவத் தளபதி

தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு காத்தான்குடியில் பல ஏக்கர் கணக்கான காணியில் பயிற்சி முகாம்கள் இருப்பது தொடர்பான கருத்துக்களை நான் ஏற்க மறுக்கின்றேன் என இராணுவத் தளபதி லெப்டினன் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இங்கு தவறான புரிதலொன்று ஏற்பட்டிருக்கின்றது. இது இராணுவத்தினரினதோ அல்லது விடுதலைப் புலிகளுடையதைப் போன்றதொரு பயிற்சி முகாம்கள் அல்ல.

ஊடகங்களில் அவற்றின் படங்களைப் பார்த்தேன். அது ஒரு சிறிய காணி. அங்கு யுத்தப் பயிற்சிகள் இடம்பெற்றிருக்கவில்லை. மாறாக மனோ நிலையை மாற்றும் மனோதத்துவ ரீதியிலான பயிற்சிகளே அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவை முஸ்லிம்கள் வசிக்கும் பிரதேசங்களிலேயே இடம்பெற்றுள்ளன. அப்பிரதேசங்களில் தற்போது இராணுவ முகாம்கள் எதுவும் இல்லை.

அது சிக்கலானது. கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம்கள் இராணுவத்தினருடன் சகோதரர்களைப் போன்றே பழகுகின்றனர்.

எனினும் சில அடிப்படைவாதிகள் அவர்கள் கண்களைக் கட்டிவிட்டு இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலை மீண்டும் உருவாகாதிருக்க அங்கும் இராணுவ முகாம்களை அமைப்போம். அதற்காக தற்போது அரசுடைமையாக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளால் பயன்படுத்தபபட்டுவந்த காணிகளில் முகாம்களை அமைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. Adanalatan muslimgalukku aappu

    ReplyDelete
  2. Thank for speaking/Telling the Truth General. We Salute you Sir.
    We Love Peaceful SriLanka.

    ReplyDelete
  3. Are you true? But not the force. Minuwangoda is a witness.

    ReplyDelete
  4. He talking and doing different ways!

    ReplyDelete

Powered by Blogger.