May 13, 2019

இன்னொரு பர்மாவை காண்பதற்கு, பௌத்த இனவாதம் கனவு காணுகிறது (எச்சரிக்கை ரிப்போர்ட்)

திருப்திப்படுத்துவதின் எல்லை,  எது வரை திருப்திப்படுத்துவது ?

நாடு தற்போது அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டு இருக்கின்றது .

யார் எதை நம்புவது ?நாட்டில் என்னதான் நடக்கின்றது என்பது அப்பாவி முஸ்லீம் குடிமக்கள் ஒவ்வொருவரின் கேள்விகள் .

மீண்டும் நாடு பழைய நிலைக்கு திரும்பாதா என்பது ஒவ்வொரு முஸ்லிம்களின் எதிர்ப்பார்ப்பு ..

ஈஸ்டர் குண்டு வெடிப்புக்களை அடுத்து,  பிற மதத்து அண்டை வீட்டுக்காரன் கூட,  தலையை திருப்பிக்கொண்டு போகிறானே என்பது ஏறத்தாழ எல்லோரின் கவலையும்..

வெள்ளம் வந்த போது இரவு பகலாக பெரும்பான்மை மக்களுக்கு உதவினோமே ? புயல் அடித்த போது கிழக்கில் தமிழ் மக்களுக்கு மதம் பாராமல் இனம் பாராமல் உதவினோமே ..இன்னும் பெருநாட்களுக்கு வட்டிலாப்பமும் நோன்பு நாட்களில் கஞ்சியும் கொடுத்து பிற  மதத்தவர்களை புன்னகை உதிர்க்க வைத்தோமே ..

எல்லாவற்றுக்கும் என்ன ஆகி விட்டது ?

புலிகளின் குண்டுகள் மத்திய வங்கியையும் உலக வர்த்தக மையத்தையும் விமான நிலையத்தையும் தாக்கி பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை படுகொலை செய்த போது தாக்கப்படாத இந்து கோயில்களும், தமிழர்களின் வியாபாரங்களும் முஸ்லிம்கள் செய்யாத ஒன்றுக்காக இலக்கு வைக்கப்பட்டு கல்லெறி தாக்குதல் நடத்தப்படுவதுடன் 'மின்சார ஓழுக்கு' என்கிற பேரில் தீவைக்கப்பட்டு சாம்பலாக்கப்பட்டு வருகினறன் .

இன்னொரு பர்மாவை காண்பதற்கு பௌத்த இனவாதம் கனவு காணுகிறது .இன்னொரு காஷாவை இலங்கையிலே காண சியோனிஸம் நாட்களை எண்ணுகிறது இன்னொரு 82 கலவரம் ஏற்படாதா என இனவாத தமிழ் குழுக்கள் அவா கொண்டுள்ளன . அரசியல் வாதிகளின் அடக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் மீதான எரிச்சல் வாய்களில் விஷமாக கக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

தெருக்களில் கிடக்கும் சொறி பிடித்த நாய்கள் வரை, நம்மை பற்றி பேசுகின்ற, அட்வைஸ் பண்ணுகிய நிலைக்கு இப்போது நாம் ஆளாகி விட்டோம் 

நாம் முஸ்லிம்கள் ..! கேக்கின் மேலே ஐசிங் போடுவது போலே சௌகரியமானது அல்ல இந்த உலகம் .

இலங்கை முஸ்லிம்களான நமக்கு நிம்மதியாக வாழ்வது என்பது இவ்வளவு காலமும்  கிடைத்த வரப்பிரசாதமாக இருந்தது.

 இனியும் அதை எதிர்பார்க்க முடியாது .நடக்கும் தெருக்களில் முட்கள் இருக்கும் , கட்டாக்காலிகள் நம்மை கதைத்து தள்ளும் ,சமுக ஊடங்களில் உள்ள "சைக்கோக்கள்'  நம்மை விமர்சிக்கும் ,பல 'மின்சார ஒழுக்குகளை' , கல் வீச்சுக்களை வரும் காலங்களிலே எதிர்பார்க்க முடியும் .

இனி வருகின்ற காலம் கொந்தளிப்பனது .பல சவால்களை  நாம் எதிர்நோக்க வேண்டி இருக்கும். ஹலால் முத்திரையை விட்டுக்கொடுப்பதாலோ ,நிக்காபை விட்டுக்கொடுப்பதாலோ அல்லது அதான் சொல்லுவதை நிறுத்துவதாலேயோ நாம் அமைதியாக வாழலாம் என்று கனவு காண்பது முட்டாள் தனமானது . 

அல்லாஹு தஆலா கூறியது போல,,

"மார்க்கத்தில் இருந்து முற்றுமுழுதாக நீங்கள்  வெளியேறும் வரை காஃபிர்கள் திருப்தி அடைய மாட்டார்கள் .." (2:120) என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.மார்க்க விடயங்களை யாருக்காகவும்  விட்டுக்கொடுக்க முடியாது .

நமக்குள் இருக்கும் தவறுகளை திருத்தி நம்மை பலப்படுத்த வேண்டியது காலத்தின் தேவை .பின்வரும் விடயங்களில் நம்மை மாற்றிக்கொள்ளுவோம் 

1 நமக்குள் இருக்கின்ற ஈமானை இஸ்லாத்தை பலப்படுத்துகிற நேரம் இது .மக்களையும்,  நாட்டின் அரசியல் வாதிகளையும் திருப்தி படுத்திவதை விடுத்து அல்லாஹ்வை திருப்தி படுத்த நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் .நாம் உண்ணுகின்ற உணவு உழைக்கிற உழைப்பு ஹலாலானதா என கேள்வி எழுப்புகிற நேரம் இது .அப்போதுதான் நமது துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் 

2.நமக்குள் இருக்கின்ற 'கிழக்கான்' 'கண்டியான்' 'காலியான்' 'வன்னியான்' 'யாழ்ப்பாணத்தான்' என்கிற பிரதேச வாதத்தை முடிவுக்கு கொண்டு வருதல் காலத்தின் தேவை .இஸ்லாம் தேசிய வாதத்தை கோத்திர வாதத்தை வண்மையாக கண்டிக்கிறது 

3.அரசியல் ரீதியாக ஏட்டிக்கு போட்டியாக கட்சி ரீதியாக பிரிந்துள்ள நாம் ஓன்று படவேண்டிய தருணம் இது .

4.சந்தி சந்தியாக ஜமாஅத்து என்கிற பேரில்  வெறியர்களாக திரிகிற நாம் இஸ்லாம் என்கிற கொடியின் கீழ் நம்மை ஒற்றுமைப்படுத்தி பலப்படுத்த வேண்டிய இக்கட்டான தருணம் இது .

5.சொத்துக்களை பணத்தை அடிப்படையாக கொண்ட சமுகம் என்கிற கட்டமைப்பில் இருந்து கல்வி சார் சமுகம் என்கிற கட்டமைப்புக்குள் நமது சந்ததிகளை மாற்ற வேண்டிய தருணம் இது  . அதிகம் சேர்க்கும் போது சொத்துக்களை பாதுகாக்க பொய்யாக  பொறுமை என்கிற பேரில் கோழைகளாக ஆக வேண்டிய நிலை ஏற்படும். 

6.நமது சந்ததிகளுக்கு தற்பாதுகாப்பை கற்றுக்கொடுக்க வேண்டிய காலகட்டம் இது .

இனிவரும்  கடினமான காலங்களின் நெருக்கடிகளில் இருந்து,
அடக்கு முறைகளில்  அட்டூழியங்களில் இருந்து உலக முஸ்லிம்களை அல்லாஹ் பாதுகாப்பானக !

Raji

5 கருத்துரைகள்:

யாஅல்லாஹ் எல்லாவற்றுக்கும் நீயே போதுமானவன்.

போரபோக்க பார்த்தான் நம் கண்முன்னே தாயோ,மனைவியோ,மகளோ கற்பழிக்க படும் நிலை தொலைவில் இல்லை அப்பகூட நாம பொறுமையாதான் இருப்போம் போல.
சிங்கள ஊர்ல இருக்கிற முஸ்லிம்கள் ஈமானை பலமாக்குங்கள்,பொலிஸில் ஒரு முறைப்பாட்டை கொடுங்கள் மற்றும் சமயசானங்களை பாதுகாக்க ஒரு இளைஜர் அணியை உருவாக்குவோம்.நமது பெரும் தோள்விக்கு பிரதான காரணம் இளைய சமூகத்தை நம்பி பொருப்பை கொடுக்காதது.இது நபிகள் நாயகம் காட்டி தந்த சுன்னாஃ.

காலத்திற்க்கு தேயைான பதிவு...அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள்..

Post a Comment