Header Ads



பள்ளிவாசலை ஏன் உடைத்தோம்..? மடாடுகமை முஸ்லிம்கள் கூறும், விசித்திரக் காரணங்கள்


கெக்கிராவை மடாடுகமை பிரதேசத்தில அமைக்கப்பட்டிருந்த தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் தொழுகையில் ஈடுபடும் பள்ளிவாசலை, பிரதேச முஸ்லிம் மக்கள் மற்றும் பெரிய ஜூம்மா பள்ளவாசலின் 29 பேர் இணைந்து இன்று இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.

கிராமத்தில் வசிக்கும் பிள்ளைகளுக்காக நூலகம் ஒன்றை நிர்மாணிக்க காணி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வெளிநாட்டு அமைப்பு ஒன்றின் நிதியுதவியில் இந்த பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக பெரிய பள்ளிவாசலின் தலைவர் எம்.எச்.எம். அக்பர் கான் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது காணப்படும் சூழ்நிலையில், மற்றுமொரு பள்ளிவாசல் அவசியமில்லை என்பதால், பெரிய பள்ளிவாசலின் செயற்குழுவுடன் இணைந்து பள்ளிவாசலை உடைக்க தீர்மானித்தோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன் பின்னர் மடாடுகமை பிரதேச மக்களுடன் இணைந்து நிர்மாணிக்கப்பட்டிருந்த பள்ளிவாசலை உடைத்துள்ளனர். அரபு மொழியில் எழுப்பட்டிருந்த பெயர் பலகையும் கழற்றப்பட்டுள்ளது.

இந்த பள்ளிவாசலை நிர்மாணிக்க வெளிநாடுகளில் இருந்து பணம் கிடைத்துள்ளதாகவும் பணம் வழங்கியவர்களின் பெயர்கள் அரபுமொழியில் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை மடாடுகமை பிரதேசவாசியான மொஹமட் அமீன் என்பவர் கூறுகையில், உடைக்கப்பட்ட பள்ளிவாசலுக்கு பெயர் இருக்கவில்லை. முஸ்லிம் பள்ளிவாசல் எனக் கூறினாலும் அதில் தவ்ஹித் ஜமாத் அமைப்பினரே தொழுகை நடத்தி வந்தனர் எனக் கூறியுள்ளார்.

தேவேளை பிரதேசத்தில் வாழும் சிங்கள மக்களுடன் பல காலமாக மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வருவதாகவும் தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் காரணமாக அதற்கு பங்கம் ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் மடாடுகமை ஜூம்மா பள்ளிவாசல் உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

இதனால், கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் இணைந்து கலந்துரையாடி, பிரதேச மக்களுடன் இணைந்து செயற்பட தடையாக இருக்கும் வெளிநாடுகளின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட பள்ளவாசலை இடிக்க தீர்மானித்தாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

15 comments:

  1. Yes yes good explanation. Eventhough the people involved in Terroir activity are also called Muslims but they are from Thaw community

    ReplyDelete
  2. மடையர் கூட்டம்...
    அல்லாஹ்வின் இல்லத்தை உடைக்கிறார்கள்..
    அல்லாஹ் ஹிதாயத் கொடுக்கட்டும்

    ReplyDelete
  3. Allahda palliya odacha kafirgal ungal meedu Allahda saabam undagattum.....

    ReplyDelete
  4. அல்லாஹ்வின் இல்லத்தை உடைத்தவர்களின் கைகளையும் கால்களையும் அல்லாஹ் உடைத்து விடுவானாக.

    ReplyDelete
  5. எமது ஊரிலும் பள்ளிகள் இருக்கின்றன. வந்து உடைக்கலாமா please

    ReplyDelete
  6. ரஹீம் கூலி கொடுத்தாவது உடைத்து வீசுங்கள் விட்டு வைத்தால் பின் வரக்கூடிய சந்ததியினர் அதன் தீய பிண்ணனியை அறியாமல் நலவு பேச க்கூடும்

    ReplyDelete
  7. என்ன காரியம் செய்து விட்டீர்கள்... இது முட்டாள் தனம் ...ஒரு இயக்கத்தை சர்வாதிகாரமாக கட்டுப்படுத்தும் உரிமை மற்ற இயக்கத்துக்கு இல்லை...

    அல்லாஹ் போதுமானவன்

    ReplyDelete
  8. Mrs Raheem உங்களுக்கும் குருணாகல் கிராமங்களில் பள்ளிகளைத் தாக்கிய காடையர்களுக்கும் என்ன வித்தியாசம்??!

    ReplyDelete
  9. அறிவாலிகள் என்று நினைக்கும் சிலர் சிந்திக்கமறந்ததன் விளைவுகளில் மிக மிக மோசமான செயல் இது,
    ஆத்திரப்பட்டு கிணற்றில் குதித்தால் ஆயிரம் அறிவு இருந்தாலும் மேலே/வெளியே வரமுடியாது. இது போன்ற ஈனச்செயல்களால் எமது சமூகத்திதின் முட்டாள் தனமும் அடிமைத்தனமும் வெளிப்பாடாகுவதுடன் படைத்தவனைப் பற்றிய அச்சம் துச்சமும் இல்லாத வெறும் பெயர்தாங்கி முஸ்லீம் என்ற உண்மையும் தெளிவாக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல்கள் தனி மனித சொத்தல்ல அது அல்லாஹ்வை வனங்கி வழிபடுவதட்கான இறைஇல்லம் அதனை அழித்து விட முன்னின்ற அனைவருக்கும் அல்லாஹ்வின் சாபக்கேடு உண்டாகட்டும் .
    அந்தக் கயவர்கள் என்ன ஆனார்கள் என்று இதே ஜப்னா முஸ்லிம் இனையதளம் பதிவுதரும் அந்த நாளும் வெகு தூரமில்லை என்று எதிர்பார்க்கிறேன்
    இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  10. அறிவாலிகள் என்று நினைக்கும் சிலர் சிந்திக்கமறந்ததன் விளைவுகளில் மிக மிக மோசமான செயல் இது,
    ஆத்திரப்பட்டு கிணற்றில் குதித்தால் ஆயிரம் அறிவு இருந்தாலும் மேலே/வெளியே வரமுடியாது. இது போன்ற ஈனச்செயல்களால் எமது சமூகத்திதின் முட்டாள் தனமும் அடிமைத்தனமும் வெளிப்பாடாகுவதுடன் படைத்தவனைப் பற்றிய அச்சம் துச்சமும் இல்லாத வெறும் பெயர்தாங்கி முஸ்லீம் என்ற உண்மையும் தெளிவாக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல்கள் தனி மனித சொத்தல்ல அது அல்லாஹ்வை வனங்கி வழிபடுவதட்கான இறைஇல்லம் அதனை அழித்து விட முன்னின்ற அனைவருக்கும் அல்லாஹ்வின் சாபக்கேடு உண்டாகட்டும் .
    அந்தக் கயவர்கள் என்ன ஆனார்கள் என்று இதே ஜப்னா முஸ்லிம் இனையதளம் பதிவுதரும் அந்த நாளும் வெகு தூரமில்லை என்று எதிர்பார்க்கிறேன்
    இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  11. அளவுக்கதிகமான எதனையும் இஸ்லாம்
    வீண் விரயமாவே எடுத்துொள்கிறது.
    அது வணக்கஸ்தலங்களாக இருந்தாலும்
    கலாபீடங்களாக இருந்தாலும் சரியே.

    ReplyDelete
  12. It s better if we change ths village name as "maattugama"

    ReplyDelete
  13. allah wa sujoodhu seida idamda erumaihala yenda adai yosikka maatengureenga

    ReplyDelete
  14. உலக மகா மடையனுகள் அபுஜஹல்கள் அல்லாஹ்வின் சாபத்திலிருது தப்பிக்க பிராயச்சித்தம் காணுஞ்கள்

    ReplyDelete
  15. Ithu Sammanthamaka ACJU vin Vilakaam Enna enpathai arivika vendum

    ReplyDelete

Powered by Blogger.