Header Ads



குட்டக் குட்ட குனியாதீர்கள்...!

- ஷமீலா யூசுப் அலி -

மத்ரஸா பாடவிதானங்கள் மீள யோசிக்கப்பட வேண்டும்.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

இஸ்லாமிய இயக்கங்கள் தங்கள் போக்குகளில் வித்தியாசங்கள் செய்ய வேண்டும்.

இஸ்லாம் தந்த உரிமைகளைக் கூட பெண்களை அனுபவிக்க விடாமலிருக்கும் அடக்கு முறை நீங்க வேண்டும்.

சரியான முஸ்லிம், தரங்குறைந்த முஸ்லிம் என்ற அடையாளப்படுத்தல்கள் இல்லாமல் போக வேண்டும்.

இதில் எனக்கு இருகருத்துக் கிடையாது.

இவை நீண்ட காலமாக எம் சமூகத்துக்குள் புரையோடியிருக்கும் பிரச்சினைகள்.

இந்தப் பிரச்சனைகள் எல்லாம் இப்போது ஏன் தூக்கிப் பிடிக்கப்பட்டிருக்கின்றன என்பதும் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் முழு முஸ்லிம் சமூகமுமே பிற்போக்கு வாதத்தில் இருப்பதாக சித்தரிக்க முயல்வதும் தான் இங்கு வில்லங்கம்.

இந்தப் பிரச்சனைகள் தான் பெரும்பான்மை எங்களை ஓரங்கட்டுவதற்கான காரணம் என்று தப்புக் கணக்குப் போட்டு விட வேண்டாம்.

அந்தக் கணக்கு வேறு.

பிரிவேனாக்களின் பாடத்திட்டங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

பிஞ்சு வயதில் மதகுருக்களாக்கப்படும் சிறுவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்

பொது பல சேனா என்ற தீவிரவாத இயக்கங்களின் போக்குகளில் மாற்றம் வேண்டாமா?

பெண்களை இழிவு படுத்தும் முதலிரவில் வெள்ளைப் புடவை விரிக்கும் கலாச்சாரம் போன்ற அடக்கு முறைகள் பற்றி பேசக் கூடாதா?

ஒவ்வொரு சமூகத்தின் பழமைவாதம், ஆதிக்கம் பற்றி அவ்வச் சமூகம் கலந்துரையாடல்கள் மேற்கொள்வதும் மாற்றங்கள் கொண்டு வருவதும் அத்தியாவசியம்.

அது எல்லாச் சமூகங்களுக்கும் பொதுவானதே.

இதில் ' எங்களுடைய சமூகத்தில் பிழை இருக்கிறது, நாங்கள் பிழை விட்டு விட்டோம்' என்று தலை குனிந்து கூட்டு வாங்குவது அவசியமில்லை.

2 comments:

  1. நம்மில் பிழை இருக்கிறது என்று ஒத்துக்கொண்டால் முதலில் நம்மைத் திருத்திக் கொள்வோம். கிறிஸ்துவ சமூகத்துக்கும் இந்நாட்டில் இனவாதிகளால் அச்சுறுத்தல் இருக்கிறது ஆனால் அவர்களின் ஆளுமையுள்ள மார்க்கத்தலைமைத்துவத்தினாலும் சமூக கட்டுக்கோப்பினாலும் இலங்கையில் சிறந்த பிரஜைகளாக பெயர் பெற்றிருக்கிறார்களே. ஒழுக்கம் உயிரினும் மேம்பப்படும். பேச்சிலும் சிந்தனையிலும் நடத்தையிலும் எழுத்துகளிலும் ஒழுக்கம் வரவேண்டும். கிறிஸ்தவ மக்கள் அளவுக்கு முஸ்லிம்களிடம் ஒழுக்கம் வருவதற்கு இப்போது தொடங்கினால் சுமார் 20 வருடங்கள் தேவைப்படும். முதலில் தொடங்க வேண்டியது மார்க்கத்தலைமைத்துவத்துவம் தூரதிருஷ்டி கொண்ட இஸ்லாமிய கல்விமான்களிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும். அவர்கள் கட்டுக்கோப்பான சமூக அமைப்புக்கு திட்டம் வகுக்கவேண்டும். அதனை சட்டமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். கட்டுப்படாதோர் சட்டத்தை மீறியதாக கொள்ளப்பட வேண்டும்.

    ReplyDelete
  2. yes ur correct.iduku purahu kutta kutta kuniye kudaadu.kuttina naaga udaykanam

    ReplyDelete

Powered by Blogger.