Header Ads



நீங்கள் முஸ்லிம்களைப் பற்றி, முன்வைக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டு

- S.H.M.Faleel -

நீங்கள் முஸ்லிம்களைப் பற்றி முன்வைக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டு முஸ்லிம்கள் கடந்த இருபது முப்பது வருடங்களாக அதிகம் மாறிவிட்டார்கள் என்பதாகும். இந்த நாட்டில் இருக்கின்ற ஏனைய இனத்தவர்களை விடவும் உடை நடை பாவனை என்பவற்றில் ஏன் எம்மை விடவும் முஸ்லீம்கள் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

இப்படிக் கூறும் நீங்கள் உங்களது சமூகத்தை சற்று நோட்டமிட்டுப் பாருங்கள்.

நாம் கேட்கும் முதல் கேள்வி, உங்களது இனத்தவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு மேற்கத்திய, சடவாத, நாத்திகவாத சிந்தனைகளும் உள்நுழைய முடியுமோ அந்த அளவு நுழைந்திருக்கிறார்கள். உடை, நடை, பாவனை,வாழ்வுமுறை. அனைத்திலும் இந்த மாற்றம் உள்ளது.

Diversity எனும் பன்மைத்துவத்தை ஏன் நீங்கள் ஏற்க்க மறுக்குறீர்கள்? உங்களது வாதத்துக்குள் மறைந்திருப்பது என்ன?

உலகத்தை நீங்கள் சுற்றிப்பார்க்க வேண்டாமா? அங்கு மத அடிப்படையிலான ஆடைகள், சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற ஆடைகள், பொருளாதார வசதிக்கேற்ப ஆடைகள், தொழில் செய்யும் இடத்திற்கு ஆடைகள் என்று அவை வேறுபடுவதைக் காணலாம்.

No comments

Powered by Blogger.