Header Ads



எங்கே ஆரம்பித்தமோ, அங்கேயே நிற்கப்போகிறமோ...?


ஆரம்பித்துவைத்தவன் முடிக்காமலே போய்விட்டான், அவனைப்பார்க்காமல் அமைதியாய் வாழும் என் தேசத்து முஸ்லிம்களை ஓரிரவில் தீவிரவாதியாகவும், அநாதரமற்றவர்களாகவும் முத்திரை குத்திய பிரமாண்ட படத்தின் காட்சிகள் நாடெங்கிலும் இரவும் பகலுமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இரத்தமும் ஒப்பாரியும் ஓய்ந்துபோவதாக தெரியவில்லை. 

எங்கே ஆரம்பித்தமோ அங்கேயே நிற்கப்போகிறமோ என்பதான மன பிரம்மைகள் அவ்வப்போது தோன்றி செல்கிறது.

பல தசாப்த வரலாற்றில் பெரும்பான்மை சமூகத்தின் நன்மதிப்பை நாணயமாக்கிய என் உடன்பிறப்புக்கள் செல்லாக்காசாய் அடித்துநொருக்கப்படுகையில் மனம் ஆறாத சினம் கொள்கிறது. தடிக்கு தடியெடுக்க எவ்வளவு நேரமாகும்? அதை சொல்லித்தரவில்லை என் மார்க்கமும் என்னைப்பெற்றவர்களும். பள்ளிவாசல்களும் கடைக்கட்டிடங்களும் என்ன செய்தது நண்பா? உன்னோடு கோபம்கொண்டதா? வம்பிழுத்ததா? நீ வரும்போது சிங்கள்வர் வருகிறார் , தமிழர் வருகிறார் என வஞ்சனை கொண்டதா?? நீ வீசியெரியும் கல்லிலும் நீ நொருக்கிய கண்ணாடியிலும் எதனைச்சாத்தித்தாய் கர்வம் கொள்கிறாய்?

உயிரற்றபொருடகள் அவையனைத்தும் எளிதில் மறந்துவிடும் தோழா..!! நாளை நீயும் நானும் இத்தெரிவில் முன்னொருகாலத்தில் நடந்துசென்றோம் என்கிற சேதியை வரலாற்றுக்கதைகளில் மாத்திர‌ம் நமதுபிள்ளைகள் அறிந்துகொள்ளவைக்காதே...!!
இதுதான் எனது நாடும் உனது நாடும் நமது தேசமும்,

Rumait Muhammad 

1 comment:

Powered by Blogger.