May 12, 2019

இது சித்தாந்தத்துடன் தொடர்புபட்டது, நிலத்தைக் கேட்கின்ற தீவிரவாதம் அல்ல - இராணுவத் தளபதி

சமூக ஊடகங்களில் வெளியாகின்ற தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

சிறிலங்காவின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினியில் நேற்றிரவு -11- உரையாற்றிய சிறிலங்கா இராணுவத் தளபதி, சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் பல்வேறு தகவல்களில் உண்மையில்லை என்றும், கூறினார்.

”இஸ்லாமிய அடிப்படைவாத வலையமைப்பின் உயர்மட்டத்தினர் குண்டுத் தாக்குதல்களில் இறந்து விட்டனர். இரண்டாம் மட்டத்தில் உள்ள தலைவர்களில் பெரும்பாலானோரும், 75 வீதமான சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய புற சக்திகடைய கண்டறிந்து அடையாளம் காணும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

இது சித்தாந்தத்துடன் தொடர்புடைய விடயம். நிலத்தைக் கேட்கின்ற தீவிரவாதம் அல்ல. அவர்கள் எதையும் கேட்கவில்லை.

எனவே சிறிலங்காவிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ ஒரு சமூகத்தில் இதனை கையாளுவது சுலபம் அல்ல.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1 கருத்துரைகள்:

கண்ணியத்துட்குறிய நம் நாட்டு இராணுவ தளபதி அவர்களே நீங்களோ அல்லது நம் நாட்டு பாதுகாப்பு புலனாய்வு துறை சார்ந்தவர்களோ மீண்டும் கவனயீனமாக இருந்துவிடாதீர்கள்

இந்த தாக்குதலின் நோக்கம் நம் நாட்டில் இடம் கேட்டுத்தான்!

இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மதசித்தாந்த்தின்படி மூளைச்சலவு செய்யப்பட்ட சரியான இஸ்லாமிய அறிவில்லாத வடிகட்டிய முட்டாள்களான கயவர்களால்தான் அவர்களை தயார்படுத்தி உருவாக்கியவர்கள் இந்த அமெரிக்க உலக மஹாகள்ளர்களே இதை தற்போது உலகமக்கள் நன்றாக தெரிந்து கொண்டுள்ளார்கள்
இதன் பின்னால் உள்ள சூத்திரதாரிகள் அமெரிக்கா ,இஸ்ரேல் என்று நீங்கள் பல கோனங்களில் புலன் விசாரனை செய்தால் கண்டுபிடிப்பீர்கள்

16/5/2019 வியாழக்கிழமை அன்று இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் நடைபெறவிருக்கும் பேச்சுவார்தையில் நம்நாட்டு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன் அமெரிக்க மைக்கல் ரிச்சட் பொம்பியோ இவர்களுக்கிடையில் நடைபெரும் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தெளிவாக இலங்கையில் அவனுடய தேவைக்கு இடத்தை கேட்பதுடன் முழு இலங்கை கடல் ஓரபகுயுடன் இந்து சமுத்திரத்திலும் தன்னுடய ஆதிக்கத்தை நிலை நாட்ட திட்டமிட்டுள்ள முடிவின் பெருபேறுதான் 21/4/2019 வெடித்த பொம்புகளாகும்

அவனுடய நோக்கம் நிறைவேறும்வரை நம் நாட்டில் இவ்வாறான பிரச்சினைகளை செய்துகொண்டே இருப்பான்

ஆகவே நீங்கள் நம் நாட்டில் உள்ள அமெரிக்கர்களின் நடவடிக்கைகளை நன்றாக கவனியுங்கள் அவர்களின் தூதரகம்முதல் யுத்த விமானங்கள் கப்பல்கள் அமெரிக்க பிரஜா உரிமை கொண்டுள்ள தென் ஆசிய நாட்டவர்கள் நம் நாட்டில் வாழ்ந்தால்

குறிப்பாக இலங்கை இந்தியா பங்களாதேஷ் நேப்பால் இன்னும் ஏனைய நாடுகளை சேர்ந்தவர்கள் நம் நாட்டில் அமெரிக்க பிரஜாஉரிமையுன் வாழ்ந்தால்

நம் நாட்டில் இடம் கேட்டுத்தான் இந்த நாசகார கொடூரச்செயலை அமெரிக்க செய்துள்ளான் இதற்காக இஸ்லாமிய பெயர்கொண்ட மத சித்தாந்த்த்தின் மூலம் அவனுடய ISIS அமைப்புக்கு சேகரித்தவர்களை தற்போது பாவித்துக்கொண்டான் மீண்டும் வேறு எதட்காவது ஆசைப்படுவர்களை கண்டிறிந்து அவர்கள் மூலம் இந்த செயல்களை அவனுடய ISIS அமைப்பின் பெயரில் செய்து கொண்டிரிப்பான்!

Post a Comment