Header Ads



மகளிர் கல்லூரிக்கு 'தேசிய தௌஹீத் ஜமாத்' பெயரில் எச்சரிக்கைக் கடிதம் - பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதமொன்று, அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என பெயரிடப்பட்ட இந்தக் கடிதம் தபால் ஊடாக அனுப்பிவைக்கப்படதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, 

"இந்த தேசம் அல்லாவின் தேசம். இங்கு இஸ்லாமிய மக்கள் மட்டுமே வாழ முடியும். இது எமக்கான புனித பூமி. உங்களைப் போன்ற சிலுவை தூக்கிகளோ வேறு யாருமோ வாழ முடியாது. வாழ விடவும் மாட்டோம். அத்தோடு, 8.5.19 அன்று பாடசாலையில் குண்டு வைப்போம். எல்லா சிலுவை தூக்கி மாணவர்களையும் கொல்லுவோம். அல்லா மேல் ஆணை. எல்லாப் பாடசாலைகளும் குண்டு வைக்க ஜிகாதிகள் வந்துள்ளோம். இன்சா அல்ல, எங்கள் குடும்பத்தை அல்லா காப்பாற்றுவார்" என்பதாகும்.

மேலும், இக்கடிதம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

4 comments:

  1. இது நிச்சயமாக ஒரு முஸ்லிமின் மொழி நடையல்ல முஸ்லிம்கள் சாதாரணமாக அல்லாஹ் "காப்பாற்றுவான்" என்று தான் அழைப்பார்கள். ஆனால் இதில் "காப்பாற்றுவார்" என்றுள்ளது

    ReplyDelete
  2. யாரோ துவேசப் பயபுள்ள எழுத தெரியாம கடிதம் எழுதி விளையாடி இருக்கான் பக்கி

    ReplyDelete
  3. மேலே அனுப்பப்பட்டுள்ள கடிதத்தின் மொழி நடை முற்றிம் முஸ்லிம்களின் மொழி நடைக்கு மாற்றமாகும்.

    காரணங்கள் :

    1- "அல்லாஹ் காப்பாத்துவார்”

    ஒரு காலமும் எந்த முஸ்லிமும் அல்லாஹ்வை “அவர்” என்று பாவிப்பதில்லை “அவன்” என்றே பாவிப்பர்..

    இதனால் இது முஸ்லிம்களுக்கு தொடர்பில்லை, இன ரீதியாக குழப்பத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாக விளங்குகின்றது.

    ReplyDelete
  4. சந்து சிந்து பார்றாக.. பீ...ழர்கள்

    ReplyDelete

Powered by Blogger.