Header Ads



உயிர் போனாலும் உண்ணாவிரதத்தைக் கைவிடமாட்டேன் - ரத்ன தேரர் சூளுரை

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் , கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி ஆகியோர் பதவிலியிருந்து நீக்கப்பட வேண்டும். அவர்கள் பதவி நீக்கப்படும் வரை உயிர் போனாலும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று அத்துரலியே ரத்ன தேரர் சூளுரைத்தார்.

ஆளுநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லாஹ் மற்றும் ரிஷாத் ஆகியோர் 24 மணித்தியாலங்களுக்குள் பதவி நீக்கப்பட வேண்டும் என்று கடந்த வாரம் அத்துரலியே ரத்ன தேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் ஜனாதிபதி இந்த விடயத்தில் பாரா முகமாக செயற்படுவதால் தீர்வு கிடைக்கும் வரையில் இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துரலியே தேரர் இன்று (31) காலை தலதா மாளிக்கைக்கு முன்னால் தனது உண்ணா விரத போராட்டத்தை ஆரம்பித்தார். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரத்ன தேரர் கூறியதாவது,

இனவாதியாகவும், அடிப்படைவாதியாகவும் செயற்படும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் பதவிகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அண்மையில் கோரிக்கைளைமுன்வைத்திருந்தோம். இது குறித்து பிரதமருக்கு அறிவித்ததன் பின்னர் அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்தோம்.

குருணாகல் மற்றும் பேராதனை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் கடந்த காலங்களில் சிங்கள மக்களின் சனத்தொகையை குறைப்பதற்கான சட்டவிரோத சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடிப்படைவாத முஸ்லிம் வைத்தியர்கள் சிலர் இவ்வாறு செயற்பட்டுள்ளனர். இவர்களால் பாதிக்கப்பட்ட 300க்கும் அதிகமான தாய்மார் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலாசனையில் க ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள தாய்மாருக்கு நஷ்டஈட்டினை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை இந்த ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் (எம்.மனோசித்ரா)

11 comments:

  1. Good. It's a easy way to die.

    ReplyDelete
  2. Good. Its a easy way to die. Please do it. Keep your promise.

    ReplyDelete
  3. இலங்கையின் வரலாறு நெடுகிலும் நாட்டைச் சீரழிக்க வழிகோரியவர்கள் இச்சாதியினர்தான். நடைமுறைச்சாத்திமற்ற இத்துறவற வாழ்கையில் ஈடுபடுவோர் எண்ணிக்கை வெகு வேகமாக குறைவடைந்து செல்லுகின்றது. எனவே எதிர்காலம் சுபீட்சமானது.

    ReplyDelete
  4. How they can resign without any evidences? what kind of democracy is in Sri Lanka. Sri Lanka is rule by people or by some Buddhist monks? We must file cases against each and every human rights violation in the courts and international human rights commission.

    ReplyDelete
  5. Protests are not allowed during law of emergency... Dont know how this is allowed.

    ReplyDelete
  6. Good decision but Keep your promise . There's no benefit to the community because
    Of This monks living

    ReplyDelete
  7. யா அல்லாஹ் இவனுக்கு ஹிதாயத்தை கொடுப்பாயாக இல்லையென்றால் கெட்ட மரணத்தை கொடுப்பாயாக...

    ReplyDelete
  8. இவனுகள் செத்தாத்தான் இந்நாடு நிம்மதி அடையும்

    ReplyDelete
  9. Iwarhalai ponrawarhal ithu ponru seyatpadum pothu ithai thattikkekkum urimay iwarhalin maha sangatthikku mattume undu..bt mahaa sangamum talaikuninthu nikkum pothu naadu seeraliyaamal enna seyyum...

    ReplyDelete

Powered by Blogger.