May 12, 2019

முஸ்லிம்களுக்கு, மனோ விடுத்துள்ள அறிவிப்பு - போலித்தனமான பாசாங்கு செய்யக்கூடாது என்கிறார்

முகத்தை மூடும் புர்கா தடை செய்யப்பட்டுள்ளதே தவிர, அபாயா தடை செய்யப்படவில்லை என்பதை நான் தெளிவாக கூறியுள்ளேன். அபாயாவை அணிய வேண்டாம் எனக்கூற இதுவரை எந்த சட்ட அடிப்படையும் இல்லை எனவும் நான் கூறியுள்ளேன்.

அதேவேளை கொழும்பில் பல சிங்கள பாடசாலைகளில் அபாயா அணிந்து வரவும் தடை இருக்கிறது. அதுபற்றி எவரும் கதைப்பதில்லை. ஆசாத் சாலியும், இவைபற்றி வாயையும், கண்ணனையும் மூடிக்கொண்டு இருக்கிறார்.

ஆக, அவிசாவளை தமிழ் பாடசாலையின் பெற்றோர் உணர்ச்சிவசப்பட்டு பேசியதுதான் இங்கே ஒரே பிரச்சினையாக எல்லோருக்கும் இருக்கிறது. இந்த பாடசாலையின் அபாயா அணிந்த ஆசிரியைகளை சேலை அணிந்து வருமாறு பெற்றோர் வலியுறுத்தும் காணொளியை வைத்துக்கொண்டு வாத பிரதிவாதம் செய்ய வேண்டாம்.

இத்தகைய வாத பிரதி வாதங்கள், சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் நாடு முழுக்க இந்த நிமிடத்தில் நடைபெறுகின்றன. சிங்கள சமூக ஊடகங்களில் பிரமாண்டமான இஸ்லாம்-முஸ்லிம் விரோத சிந்தனை கொளுந்து விட்டு எரிகிறது. அங்கே மிகவும் மோசமாக கழுவி ஊற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இவை பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் கூட எதிரொலிக்கின்றன. இவற்றை எம்மை போன்றவர்கள்தான் எதிர்கொண்டு அவ்வப்போது அமைதிப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

இன்று நாடுமுழுக்க, தமது பிள்ளைகளின் உயிர் பாதுகாப்பு பற்றி பெற்றோர் பதட்டமும், கோபமும், அடைந்து இருப்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். ஏப்ரல் 21 ஐஎஸ்-ஐஎஸ் குண்டு வெடிப்பு நடைபெற்று நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதையும், காயமடைந்ததையும், கணக்கில் எடுக்காமல் இப்படியான சம்பவங்கள் நடக்கவே இல்லை என்பது போன்று போலித்தனமான பாசாங்கு செய்யக்கூடாது.

ஏப்ரல் 21 ம் அன்று வெடித்த ஏழு குண்டுகளில், ஐந்து குண்டுகள் வெடித்து, அதிகம் பாதிக்கப்பட்டது எனது கொழும்பு மாவட்டம் ஆகும். இந்த பாடசாலை அமைந்துள்ள அவிசாவளையும், கொழும்பு மாவட்டம் ஆகும். ஏப்ரல் 21 ம் திகதிய குண்டு வெடிப்பில் அவிசாவளையை சார்ந்த சிலரும் கொல்லபட்டுள்ளனர்.

நாளைய தினம் கொழும்பின், வெள்ளவத்தை, நாவலை, பஞ்சிக்காவத்தை, கோட்டை ஆகிய இடங்களில் குண்டு தாக்குதல் நடைபெற போவதாக உளவு தகவல் கிடைத்துள்ளது. இத காரணமாக கொழும்பு பரபரப்பாகவும், பதட்டமாகவும் இருக்கிறது. தமிழ், சிங்கள, முஸ்லிம் பெற்றோர்கள் கொதிநிலையில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் அனைத்து தரப்பினரும், நிதானமாக நடந்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக இந்த ஆசிரியைகள், இந்த நிலைமையை மேலும் மோசமாக்க கூடாது. என்னுடன் ஒத்துழைக்க வேண்டும். எங்கோ இருந்துகொண்டு எவரும் ஊடகங்களின் மூலம் தீயை பற்ற வைக்க கூடாது.

இதுவே ஒரு சிங்கள பாடசாலையாக இருந்தால், நிலைமை பாரதூரமான கட்டத்தை அடைந்து இருக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

அவிசாவளை பாடசாலை பெற்றோர், அபாயா அணிந்த ஆசிரியைகளுடன் வாதப்பிரதிவாதங்களை செய்த போது அங்கு வந்த அவிசாவளை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி விகும் வீரசேகர, பெண் பொலிஸ் அதிகாரியை அழைத்து வந்து, அபாயா அணிந்த ஆசிரியர்களை உடற்பரிசோதனைக்கு உட்படுத்தி, தீர்வு காண முயன்றுள்ளார். அதை அந்த ஆசிரியைகள் ஏற்றுக்கொள்ள மறுத்து, ஆளுனரை பாரக்க போயுள்ளனர்.

இதுபற்றி விகும் வீரசேகரவும், வலய கல்வி பணிப்பாளர வீரசூரியவும் எனக்கு தெரிவித்துள்ளனர். இவை அனைத்தும் முழுமையாக காணொளியில் இடம் பெறுகிறதா என்பது எனக்கு தெரியாது. ஆனால், அந்த பிரதேசத்தின் சட்டம் ஒழுங்குக்கும், கல்விக்கும் பொறுப்பு கூறும் இரண்டு அரசாங்க அதிகாரிகள், ஒரு அமைச்சர் மற்றும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய எனக்கு இவற்றை தெரிவித்துள்ளனர்.

உடற்பரிசோதனைக்கு ஆசிரியைகள் இடமளிக்கவில்லை என்ற விஷயம், இந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதையும் பொலிஸ் பொறுப்பதிகாரி விகும் வீரசேகர எனக்கு கூறியுள்ளார். அதை ஒரு கௌரவ பிரச்சினையாக ஆசிரியைகள் நினைத்து விட்டதாக விகும் வீரசேகர என்னிடம் கூறுகிறார்.

உண்மையில் நாட்டு நிலைமையை மனதில் கொண்டு நாம் செயற்பட வேண்டும். நாடாளுமன்ற நுழைவாயிலில், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற ஊழியர்கள் என்ற பேதங்கள் இல்லாமல் அனைவரும் ஒவ்வொரு முறை உள்நுழையும் போதும் முழுமையான உடற்பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றோம். எமது வாகனங்கள் அனைத்தும் ஒவ்வொரு தரம் உள்நுழையும் போதும் முழுமையாக பரிசோதிக்கப்படுகின்றன.

எனவே, இது கௌரவ பிரச்சினை அல்ல. தேசிய பாதுகாப்பு பிரச்சினை.

நான் நாளை அந்த பாடசாலைக்கு சென்று சகல தரப்பினருடனும் கலந்து பேசி இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பேன். இது எனது மாவட்டம். என் மீது இங்கே வாழும் அனைத்து இன மக்களுக்கும் நம்பிக்கை இருக்கிறது.

எனவே என் பணியை ஆற்ற எனக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். அரைகுறையாக விஷயங்களை அறிந்துக்கொண்டு எனக்கு எவரும் இடையூறு விளைவிக்க வேண்டாம்.

12 கருத்துரைகள்:

You are a racist. There's no objections.

உன் தோட்டக்காட்டு சமூகத்திற்கு பனி செய்ய உனக்கிருக்கும் உரிமையை போல் தான் அசாத் சாலிக்கு தன்னுடைய சமூகத்திற்கு பனி செய்ய உரிமையுண்டு.புவக்பிடிய தோட்டக்காட்டானுக்கு அவித்துப்போட்ட ஆடையோடு வரும் ஆசிரியர்கள் தான் வேண்டுமென்றால் அப்படியான ஆசியர்களை ஏற்பாடு செய்துகொடுக்கலாமே மீண்டும் எதற்கு வெட்கமில்லாமல் முஸ்லிம் ஆசியர்கள் வேண்டுமென்டு நாயை போல் அலைகிறீர்கள்?

real communal minded man

முதலில் நீங்கள் எங்களை பத்தி சிந்திப்பதையும்,விமர்சனம் செய்வதையும் நிறுத்துங்கள்.எமது சமூகம் ஒன்னும் அரசியல் அனாதைகள் அல்ல.தமிழ் இனம் ஆயுத போராட்டத்தை நடத்திய போது ஜன நாயக ரீதியில் போராடி தேவையானதை தலைவர் MHM.Ashraf ஊடாக அடைந்தோம்.இப்போது நீங்கள் (போலிதனமாக பாசங்குடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடங்களுடன் எமது இனத்துடன் ரெட்டை வேட விளையாட்டை இனியும் வைத்துக்கொள்ள வேனாம்) அமைச்சரே மலையகத் தமிழ் ஒரு நாளைக்கு 1000/- சம்பளம் கேட்டு அழுகிரான்.அவன் படும் பாடுகளுக்கு அவனுக்கு உன்மையான கூலி இன்னும் கிடைக்கவில்லை.sir please அவர்களுக்கு 1000/- சம்பளம் வாங்கிக் கொடுக்க கூட வக்கில்லாத நீங்கள் எல்லாம் எம் இனத்தின் மீது காட்டுவது பரிவு அல்ல போலிதனமான கபட நாடகம்.பசுத் தோல் போர்த்தினாலும் புலி புலிதான்.

Hahaha kevalama illa?

This is useful article for you Mess Mano...!
http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_331.html

அன்பார்ந்த மனோ ஐயா. எல்லோருக்கும்தான். இந்த விடயத்தை இத்தோடு விட்டு விடுங்கள். ஏழை மாணவர்களுக்கும் முறையாகக் கல்வி சென்றடைய வேண்டும். அதனைப்பற்றி மட்டும் இப்போது சிந்தியுங்கள். அந்தப் பாடசாலையின் பெரும்பான்மையினராக உள்ள தமிழ் மக்கள் சிறுபான்மையினமான இந்த முஸ்லிம் பெண் ஆசிரியர்களுக்கு உரிய கௌரவத்தினைக் கொடுக்காதுபோனால் இவர்கள் வேறு எங்கு போவார்கள். நாங்கள் பேசும் மொழி தமிழ். எங்களுடைய சுற்றாடலும் நண்பர்களும் தமிழ் மொழியினைப் பேசுபவர்களாக மிக அதிகம் பேர் இருக்கின்றார்கள். நாங்கள் உழைத்து சேர்த்து சொத்தினைக் கட்டிவைக்கவிலலை. தோட்ட மக்களும் மாணவர்களும் அனுபவிக்கும் இன்னல்மிக்க வாழ்க்கையை நாம் ஒருபோதும் அனுபவித்திருக்க மாட்டோம். எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் கொடுத்துச் செல்லப் போவதும் இந்த நிரந்தரமான கல்வியைத்தான். வேறு எந்தவித சொத்துகளும் எம்மிடம் இல்லை. எங்கள் அப்பாமார் கற்ற காலத்தில் இந்தப் பிரச்சினைகளே இருந்ததில்லை. மிகக் கவனமாக இருங்கள். எங்கள் பலம் எங்கள் ஒற்றுமையே. எங்களுக்குள் பாழாய்ப்போன அரசியல் வேண்டாம். ஆதனைத் தேர்தல் காலங்களில் மாத்திரம் தேவையென்றால் வைத்துக் கொள்வோம்.

You must apologize for the lies you said yesterday.......

Pls mind comment. Discussion and criticism are worth full for proper understanding. But that should not hurass other with inflammatory use of language. Your feedback should in a way that correct them but to make them more stronger in their opinion.

பதிவுகள் இடும் போது வார்த்தைகளை மரியாதையாகவும் பண்புடனும் இட வேண்டும் எவராயிருப்பினும்

I don't know why our keyboard worriers are finding faults with this article. we need to act more responsibly

புடவை கட்டினால்தான் உள்ளே போகலாம் என்றால் பின்னர் அவர்களை பரிசோதித்து என்ன பலன். சோதனை முஸ்லிம் ஆசிரியர்களுக்கு மட்டுமா? அல்லது அனைவருக்குமா?

Post a Comment