Header Ads



நிக்காப் அணியாமல் பாடசாலைக்கு, சமுகமளிக்க முடியாதென ஆசிரியைகள் கூறினார்களா..?

நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு, பாடசாலை, அரச நிறுவனங்கள் மற்றும் பிரசித்தமான இடங்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்து அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், கண்டி புனித அந்தோனியார் மகளிர் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் சில ஆசிரியைகள், நிக்காப் அணியாமல் பாடசாலைக்கு சமுகமளிக்க மறுத்து வருவதால், கல்லூரியின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 முஸ்லிம் ஆசிரியைகள் குறித்த கல்லூரியில் கடமையாற்றி வருகின்ற நிலையில், அவர்களுள் 6 பேர், சேலை அணிந்து கடமையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏனைய 6 முஸ்லிம் ஆசிரியைகளும் சேலை அணிந்துகொண்டு பாடசாலைக்கு சமுகமளிப்பதை நிராகரித்துள்ளதுடன், தங்களது சம்பிரதாய ஆடையில் பாடசாலைக்கு சமுகமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

இதன் காரணமாக, இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில், கண்டி புனித அந்தோனியார் கல்லூரியின் கற்றல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரணத்தின் அடிப்படையில், கடந்த சில நாட்களில் கல்லூரிக்கு முன்னால் போராட்டங்கள் முன்னெடுக்கப்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. ஒன்றில் ஹிஜாப் விசயத்தில் இவர்களின் உரிமையை வழங்குங்கள், இல்லையென்றால் விட்டு விடுங்கள்.
    சேலை அணியும் ஆசிரியைகள் தானே ஈசல்கள் போன்று இருக்கின்றனர்.தேடிக்கொள்ளலாமே.

    ReplyDelete
  2. Could you clarify your news, was it Nikab or Hijab that the teachers refuse to take off??

    ReplyDelete
  3. well done ippadi than irukkanam.muslim pengal awagada urimaye vittu kudukkakuudaadu

    ReplyDelete
  4. அன்புக்கும் மிகவும் மரியாதைக்குமுரிய முஸ்லிம் ஆசிரியைகளே
    உங்களுக்கு முஸ்லிம்களாகிய நாம் விடுக்கும் மிகவும் பணிவானவேண்டுகோள், அரசாங்கமும் அதன் பாராளுமன்றமும், சனாதிபதி உற்பட ஒரு விடயத்தைச் சட்டமாக க் கொண்டுவந்து அதனை வர்த்தமானியிலும் வெ ளியிடப்பட்டால், அந்த சட்டத்தை நீதித்துறை அமுல் நடாத்தும்.அந்த சட்டம் அவசர கால நிலைமைப் பிரகடனத்தின் பின் நடைபெற்றால் அந்த சட்டத்தின் பாரதூரம் மிகவும் பயங்கரமானது. எனவே அந்த சட்டத்தை மாற்றும் அல்லது நீக்கும் அதிகாரம் சனாதிபதிக்கும் பாராளுமன்றத்துக்கும் உரியது. இந்த காலத்தில் அந்த சட்டம் என்ன காரணம் கொண்டும் மாற்றப்படவோ நீக்கப்படவே மாட்டாது. அதற்கு முரணாகசெயற்பட்டால், அந்த நபரை பொலிஸ்கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்து குறைந்த து மூன்று மாதங்கள் அல்லது நீதிபதி தீர்மானித்தால் அதைவிடவும் அதிக காலம் சிறையில் வைக்கப்படலாம், அந்த சட்டத்தை எதிர்த்து எந்த கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டங்களும் முன்வைக்க முடியாது. எனவே நீங்கள் சிறையில் அடைபட்டு அவமானமும் சீரழிவும் தேவையென்றால் உங்கள் ஆர்ப்பாட்டத்தைத் தொடருங்கள். ஆசிரியர்கள் என்ற வகையில் இந்த நாட்டின் சட்டத்தை மதித்து நடந்தால் அந்த நிகாபை கழற்றி வைத்துவிட்டு மரியாதையாக பாடசாலைசென்று தொழில் செய்யுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.