Header Ads



மத்ரசாக்கள், இஸ்லாமிய கல்வியகங்கள் பற்றி புதிய சட்டம் வருகிறது

மதரசாக்கள் மற்றும் இஸ்லாமிய கல்வியகங்களை நிர்வகிப்பது தொடர்பான திருத்தச் சட்டமூலத்தை அமைச்சரவையில் முன்வைக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மதரசாக்கள் மற்றும் இஸ்லாமிய கல்வியகங்களை நிர்வகிப்பது தொடர்பில் அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது பேசிய பிரதமர்,

மதரசாக்கள் மற்றும் இஸ்லாமிய கல்வியகங்களை நிர்வகிப்பது தொடர்பான திருத்தச் சட்டமூலத்தை அமைச்சரவையில் முன்வைக்க உள்ளது.

இச் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சு ஆகியவற்றுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. மிகச்சிறந்த முன்னெடுப்பு

    ReplyDelete
  2. Well done Mr Prime Minister . One important request ,
    turn your attention to Buddhist Temples and regulate
    them too . This will help put all religions under
    guard and neutralise everyone !

    ReplyDelete

Powered by Blogger.