Header Ads



ரிஷாட்டை தூக்கிலிடுவதில் சிக்கல் இருந்தால், அவரை உடனடியாக நாட்டைவிட்டு விரட்டியடியுங்கள்


அமைச்சர் ரிஷாட் பதியுதீனை நாட்டிலிருந்தே விரட்டியடிக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராச்சி வலியுறுத்தினார்.

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற அரசியல் நிகழ்வொன்றின் பின்னர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

“ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்மீது கடும் அதிருப்தியிலேயே இருக்கின்றேன். அந்த எதிர்ப்பை உரிய வகையில் வெளிப்படுத்துவதற்காக காத்திருக்கின்றேன்.

ரிஷாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையென உறுதிப்படுத்தப்படுமானால் அவரை உடனடியாக தூக்கிலிடவேண்டும். மரணதண்டனையை நிறைவேற்றுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அவரை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றவேண்டும்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது எதிர்வரும் 18, 19 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. கட்சி எந்த முடிவை எடுத்தாலும், மனசாட்சியின் பிரகாரமே நான் செயற்படுவேன். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.’’ என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

2 comments:

  1. இவர் இப்போது பிரதியமைச்சராய் இருப்பதற்கு யார் அந்த 53 நாள் அரசியல் இழுபறியில் இறுதியாய் கை கொடுத்தவர் என்பதை மறந்துவிட்டார்.அமச்சர் ரிசாட் அப்போது மஹிந்த பக்கம் போய் இருந்தால் இப்போது அனைத்து இனவாதிகலும் அமைச்சரை தலையில் வைத்து கொண்டாடி இருப்பார்கள்.இந்த போலி குற்றங்களும் சுமத்தப் பட்டிருக்காது.ரனில் தன் கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு தேவையில்லாமல் பேசுவதை ஏன் தடுக்காமால் உள்ளார்.அங்கேதான் ரனில் மீதும் சந்தேகம் உள்ளது.அவர்தான் இவ்வாறு எதிராக பேச ஒரு குழுவையும்,அமைச்சருக்கு ஆதரவாகப் பேச ஒரு குழுவையும் தன் கட்டுக்குள் உருவாக்கி சதுரங்க ஆட்டம் ஆடுகிறார் போலத் தோனுகிரது.எனவே கூட்டு எதிர் கட்சியினரை விட ரனில் கட்சியினர்தான் அதிகமாக அமைச்சரை அண்மைய நாட்களில் விமர்சனம் செய்கிறார்கள்.என்வே,அமைச்சர் ரிசாத் அவர்கள் இது சம்பந்தமாக பிரதமரிடம் அவசரமாக பேச வேண்டி உள்ளது.இல்லாவிட்டால் (சாட்சிக் காரனின் வீட்டில் இருப்பதை விட எதிரியின் வீட்டில் அவனிடம் சமரசம் செய்து கொண்டு இருப்பது மேல்) என வேறு முடிவுகளை எடுப்பது சிறப்பானது.அந்த முடிவை அனைத்து Muslim சமூகமும் ஏற்றுக்கொள்ளும்.ஏனெனில் இப்போது எதிர்க் கட்சியை விட ஆழும் கட்சிக்குல்தான் அதிகமான போலி குற்றச்சாட்டுக்கு ஆராத்தி எடுக்கப்படுகிறது.ஏன் பிரதமருக்கு அதை தடுக்க முடியாது.அங்கேதான் மிகப் பெரும் சதி இருக்கிறது.

    ReplyDelete
  2. இதே துலீப் வேதார்ச்சிதான் ஸ்ரீகொத்தாவில்லே இலங்கையின் தேசிய கீதத்துக்கு மேடையில் நடனம் ஆடினார்.

    ReplyDelete

Powered by Blogger.