Header Ads



சிங்களவர்களின் வீடுகளில் தங்கியிருந்த, முஸ்லிம் மாணவர்களுக்கு சிக்கல்..?

நாங்கள் மாணவர்களா? தீவிரவாதிகளா?

மாணவர்களது கதரல்களுக்கு செவிசாய்க்குமா இந்த சமூகம்?

பல்கலைகழக மற்றும் உயர்கல்வி கற்கைகளை தொடரும் முஸ்லிம் மாணவர்கள் பற்றி எவரேனும் சிந்திப்பீர்களாக இருந்தால் இது உங்களுக்கான பதிவு.

இன்றைய காலம் முஸ்லிம்களாகிய நமக்கு எவ்வளவு கசப்பானதும் பல எச்சரிக்கைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திளும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

சுருக்கமாக நேராக விடயத்துக்குள் வருகிறேன்.

நம் நாட்டில் பல பல்கலைகழகங்கள், அரச மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் அமைந்திருப்பது பெறும்பாண்மை மக்கள்கள் அதிகம் வாழும் இடங்களிலேயே ஆகும். அதனால் அங்கு தனது பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் விடுதிகளிலும் அயலில் உள்ள வாடகை வீடுகளிலுமேயே தங்கி தனது படிப்பை தொடர்கிறார்கள்.

ஆனால் நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளுக்கு அமைய பேரினவாத ஊர்களுக்கு கல்விக்காகவும் வியாபாரத்திற்காகவும் செல்பவர்களை தீவிரவாதிகளாகவும்,கடும்போக்கானவர்களாகவுமே அவர்களது பார்வை வரவேற்கிறது.

இப்படி இருக்க அங்கு தனது வாழ்கைக்காகவும் சமூகத்திற்காகவும் செல்லும் எங்களது உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் எந்தளவு பாதுகாப்பு தரப்படுகிறது என்பதை எவறேனும் எண்ணிப்பார்தீர்களா?

முஸ்லிம்களாகிய நாங்கள் அதிகம் தங்கி இருப்பது பெறும்பாண்மை மக்களது வாடகை வீடுகளிலே ஆகும்.
ஆனால் எங்களை கண்கலங்க வைத்தவிடயம்

 "இனிமேல் இங்கு நீங்கள் தங்குவதற்கு இடமளிக்க முடியாது பாதுகாப்பு பரிசோதணை எனும் பெயரில் அடிக்கடி இராணுவம் வந்து செல்கிறது அதனால் நீங்கள் வேறு இடம் தேடிக்கொள்ளுங்கள்" என்ற பதில் மாத்திரமே பல வாடகை வீட்டு சொந்தக்காரர்களது பதிலாக இருக்கிறது.

அயலில் வசிப்பவர்களே இப்படி முஸ்லிம் இளைஞர்கள் கூட்டமாக தங்கி இருக்கிறார்கள் என்னவென்று சோதணை செய்யுங்கள் என  இராணுவத்தினருக்கு தகவல் கொடுக்கிறார்கள்.

இப்படி எங்களது சூழ்நிலை இருக்க நாங்கள் எங்குதான் செல்வது?

ஆண்களாகிய எங்களது நிலையையே இப்படி என்றால் பெண்பிள்ளைகளது நிலைமை?

தூங்குவதற்கு கூட இடம் இல்லை எனும் போது எப்படி எங்களால் நிம்மதியாக கல்வியில் முழுகவனத்தையும் செலுத்த முடியும்?

இதற்கு தீர்வுதான் என்ன?

இப்பதிவினை எத்தனையோ அரசியல்வாதிகள், புத்தி ஜுவிகள் ,கல்விமான்கள், நலன் விரும்பிகள் வாசிப்பீர்கள் என்று தெரியாது.

ஆனால் இந்த தகவல் அவர்களை அடையும் வரை தயவுசெய்து பகிருங்கள்.

எங்களது உரிமைக்காக குரல்கொடுக்க தயவு செய்து உதவுங்கள்.

இது சாதாரண விடயம் கிடையாது அடுத்த தலைமுறையினது கல்வியை கேள்விக்குரியாக்கும் செயல்.

நன்றி 
நான் றிபான் ( Rifaan Muhammad ) 
University of Vocational Technology.

6 comments:

  1. ஓரிரு நாட்களுக்கே இப்படி என்றால் 30 வருடங்கள் தமிழன் அனுபவித்ததை நினைத்து பெருமையடையுங்கள். நாங்கள் பட்டதில் சிறு துளி கூட நீங்கள் இன்னும் அனுபவிக்கவில்லை.

    ReplyDelete
  2. உங்களுக்கு பல்கழைக்கழகத்தில் விடுதி கிடைக்கவில்லயா

    ReplyDelete
  3. Unmayil emathu maanavaridam irunthu vantha vaarthai ithu...

    ReplyDelete
  4. Rifan ,

    Sorry I have to write it in English . In 1987 I went to Sinhalese
    house to rent out a room which was advertised on a news paper .
    The house owner refused to take me because I am a Muslim . Then
    with the help of a Sinhalese , I got a room in Kiribathgoda and
    I was living with Sinhalese room mates and believe me , not a
    single man out of about eight boarders , was kind to me . I had
    to face bullying and insults . This was in 1987 , but remember
    I still have good Sinhalese friends and neighbours . This is
    why I keep saying all the time that there are good and bad
    Sinhalese , Tamils and Muslims everywhere throughout our life
    journey . This April incident made things worst for Muslims.
    Nobody in any part of the world is in peace today .

    ReplyDelete
  5. 1976ல் நான் யாழ்பல்கலைகளக மாணவர் தலைவராக முதல் வருடத்தில் தெரிவு செய்யபட்டபோது இந்த சிக்கல் இருந்தது. அப்போ கலாநிதி கைலாசபதி அவர்கள் வளாக தலைவராக இருந்தார். பல்கலைகழக விடுதிகளில் முஸ்லிம் மாணவிகளுக்கு மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும்படி கேட்டோ,. மேலும் வீடு வீடாக சென்று பேசி வீட்டுக்காரர்களை இணங்க செய்தோம். ஒரு ஆச்சரியம் யாழ் முஸ்லிம் பகுதியில் அதிக இடம் கிடைக்கவில்லை. அதிகமான வீடுகள் நேலதிகமானவர்கள் நெருங்கி வாழ்ந்ததும் ஒரு காரணம், ஆனால் அவர்கள் கிழக்கு முஸ்லிம் பையன்களுக்கு இடமில்லை என்று சொன்னது அதிற்ச்சியாக இருந்தது. கிழக்கில் பலதார மணம் செய்கிறவர்கள் என்று சொல்லபட்டது. அண்மையில் பிரன்சில் இருக்கும் முஸ்லிம் வர்தக நண்பர் ஒருவருடன் பேசியபோது தான் யாழ் முஸ்லிம் தெருவில் பெண்கள் விடுதி அமைபதாகச் சொன்னார். முஸ்லிம் பணக்காரர்கள் காலதாமதம் செய்யாமல் பல்கலைக் களக நகரங்களில் முஸ்லிம் ஆண் பெண் மாணவர்களுக்கான விடுதிகளில் முதலீடு செய்ய தீர்மானம் எடுக்க வேண்டும். இடைக்கால ஏற்பாடுகளிலும் முஸ்லிம் வர்தக சங்கங்கள் முதலீடு செய்ய முன்வரவேண்டும். பல்கலைக் கழக மானவர் சங்கங்கள் வீட்டு உரிமையாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதும் பயன்தரும். மனிதாபிமான அடிப்படையில் முஸ்லிம் மாணவர்களுக்கு குறிப்பாக முஸ்லிம் மாணவிகளுக்கு பல்கலைக் கழக்க விடுதிகளில் அதிக அறைகள் ஒதுக்க பல்கலைக் கழகங்களை அரசு வற்புறுத்த வேண்டும். மனமுண்டேல் இடமுண்டு.

    ReplyDelete
  6. @Arush, neengal em naattukku seidha kodumayin wilaiwe adhu. Naam (muslimgal) eppoludhume indha naattukku dhrooham seidhadhu illai.

    ReplyDelete

Powered by Blogger.