Header Ads



பாராளுமன்றத்தில் குர்ஆனை ஓதி, இத்தா விடுமுறையை பெற்றுக்கொடுத்த டாக்டர் அகமட் பரீட் மீராலெவ்வை

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையானது, இலங்கையிலுள்ள முஸ்லீம்களின் மார்க்க ரீதியிலான பிரச்சினைகளிலும், சில வேளைகளில் இலங்கை முஸ்லீம்களின் பொதுவான தேசியப் பிரச்சினைகளிலும் தனது பங்களிப்பை செய்துவருகின்றது. இதேபோல் இலங்கையில் ஜ.உலமா சபை என்ற பொதுவான அமைப்பின் தொடரான சேவை எனறும் தேவை என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

தற்போது அரங்கேற்றம் செய்யப்படும் முஸ்லீம் விரோத செயற்பாடுகளுக்கும் அதனுடன் இணைந்ததான முஸ்லீம் பெண்களின் ஆடைக் கலாசாரம் தொடர்பான பல்வேறு அரசியல் பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகளே கவனம் எடுக்க வேண்டும். 

இழப்பது இலகு ஆனால் பெற்றுக்கொள்வதுதான் மிகக் கடினம். முஸ்லீம்களின் பெரும்பாலானவர்கள் மத்தியில் கருத்து வேறுபாடான விடயமாக இருந்தாலும் ஒரு குழுவினர் மார்க்கமாக எண்ணி பின்பற்றிக் கொண்டிருக்கின்ற விடயங்களை பாதுகாத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் அதற்காக உரிய இடங்களில் அல்லது பேச வேண்டிய சபைகளில் உறுதியாக மக்களின் பிரதிநிதிகள் தெளிவுபடுத்த தொடர்ந்தும் தவறிக்கொண்டிருக்கின்றனர்.

ஆரம்பத்தில் புர்கா தடை செய்யப்பட்ட போது புர்கா தடையை பல முஸ்லீம்கள் ஆதரித்தனர் ஆனால் தடையைக் கொண்டுவந்த அரசாங்கம் முஸ்லீம்களின் கலாசாரம் என்று மாத்திரம் பார்த்ததே தவிர இதனை எந்த ஜமாஅத்தினர் ஆதரிப்பார்கள் அல்லது எதிர்ப்பார்கள் என்று பார்க்கவில்லை என்பதனை முஸ்லீம்களாகிய நாம் நிதானமாக சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

அதேபோன்று தற்போது வெளியிடப்பட்ட அரச சுற்றுநிரூபத்திற்கு அமைவாக அரச அலுவலகர்களுக்கான சாரி விடயத்தையும் ஆதரிக்கக் கூடிய முஸ்லீம்கள் பலர்  இருக்கின்றனர் என்பதில் தவறு கிடையாது. இங்கு அமுல்ப்படுத்தப்படுகின்ற விடயங்கள் சாரி, அபாயா என்ற வெளிப்படையான பார்வையைத் தவிர்த்து முஸ்லீம்களின் கலாசாரத்தை குறிவைத்து திட்டமிட்டு அரங்கேற்றம் செய்யப்படுகின்ற முஸ்லீம் விரோத செயற்பாடுகள் என்ற விரிந்த பார்வையில் நாம் நோக்க கடமைப்பட்டுள்ளோம்.

எமக்கு மத்தியில் இருக்கின்ற இஸ்லாமிய இயக்க ரீதியிலான கருத்து வேறுபாடுகளை அரசாங்கம் அழகாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதனையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கான தீர்வுத் திட்டங்களில் ஜம்மியதுல் உலமா சபையை விட தேசிய அரசியல்வாதிகளுக்கே பங்கு அதிகமாகும்.

[MLM.சுஹைல்]

1 comment:

  1. இலங்கையில் முஸ்லிம்களுக்கு என பிரத்தியேகமான சலுகைகள் பல உண்டு. அவைகளை உரிமைகள் போன்று அனுபவிக்க முற்பட்டமையினால் ஏற்பட்ட விளைவுகள் தான் இவை. சலுகைகளை அவசியம் ஏற்படும் போது மட்டும் பாவித்து இருந்தால் இந்த சிக்கல்கள் வந்திருக்காது. ஒரு தமிழ் நண்பர் சொன்னார் முஸ்லிம்கள் இந்த நாட்டின் செல்லப்பிள்ளைகள் என்று. செல்லப்பிள்ளைகள் வழிதவறியது போன்றாகி விட்டது.

    ReplyDelete

Powered by Blogger.