Header Ads



முஸ்லிம் சமூகத்தில் 99 வீதமானவர்கள் பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்கள் - மரிக்கார்

இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தில் 99 வீதமானவர்கள் அடிப்படைவாத மற்றும் பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்கள் என்பதால், முஸ்லிம்களை சந்தேக கண்கொண்டு பார்க்க வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அடிப்படைவாதிகள் சிலர் செய்த குற்றத்திற்கு எதிராக தற்போது முஸ்லிம் மக்கள் எழுச்சி பெற்றுள்ளனர்.

சாய்ந்தமருது, மாவனெல்லை , கம்பளை போன்ற பிரதேசங்களில் சாதாரண முஸ்லிம் மக்களே, இஸ்லாமிய அடிப்படைவாதிகளை சட்டத்தின் பிடியில் சிக்க வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவங்களை கட்டுப்படுத்த சமூகத்தை மறுசீரமைப்பது அவசியம். இந்த துயரமான சந்தர்ப்பத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கைக்கு அமைய கத்தோலிக்க சமூகம் அமைதியாகவும் பொறுமையாகவும் நடந்துக்கொண்டமையையும் பாராட்டத்தக்கது எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இலங்கையின் தற்போதைய சனத்தொகையில் (21,009,315) முஸ்லிம்கள் சுமார் 20%. அப்படியானால் முஸ்லிம் தீவிரபோக்குடையோர் எண்ணிக்கை Hon. மரிக்கார் அவர்களின் கருத்துப்படி 1% ஆயின் மொத்த முஸ்லிம் சனத்தொகையில் முஸ்லிம் தீவிரபோக்குடையோர் எண்ணிக்கை சுமார் 21,009 பேர். சுமார் 12% உள்ள இலங்கைத் தமிழர்களில் இருந்த புலிகளின் எண்ணிக்கை இந்தளவுகூட இருந்தது இல்லை. பாதுகாப்புத்தரப்பினர் முஸ்லிம் தீவிரப்போக்குடையோரின் எண்ணிக்கை சுமார் 300 பேரே என்று சொல்கின்றனர். யாராக இருந்தாலும் கணக்குக் கொடுக்கும்போது மிக அவதானமாக இருக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.