May 04, 2019

முஸ்லிம்களின் 9 லட்சம் வாக்குகளை இழக்கநேரிடும் என ரணில் அஞ்சுகிறார் - விஜயதாச

அமைச்சர் ரிசாட் பதியூதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை கைது செய்து தீவிரவாத செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரை இன்று -04- வெலிக்கடைச் சிறைச்சாலையில் பார்வையிட்டு திரும்பிய போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனை கூறியுள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமாத் போன்றதொரு தீவிரவாத இயக்கமொன்று ரிசாட், ஹிஸ்புல்லாஹ், முஜிபுர் ரஹ்மான், அசாத் சாலி போன்றவர்களின் உதவியின்றி இலங்கையில் செயற்பட்டிருக்க வாய்ப்பே கிடையாது.

கடந்த 2007-2008ம் ஆண்டு முதுல் ஹிஸ்புல்லாஹ் மிகவும் பலம்பொருந்திய ஒர் அரசியல்வாதியாக உருவாகியுள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்சவே ஹிஸ்புல்லாஹ்விற்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகள் பலர் தங்களது அரசியல் சுய லாப நோக்கங்களுக்காக இவ்வாறு இனவாதத்தையும் மதவாதத்தையும் போசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றியீட்ட வேண்டும் என்பதே ரணில் விக்ரமசிங்கவின் பிரதான இலக்கு எனவும், இதனால் தீவிரவாதம் குறித்த விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் முஸ்லிம்களின் எட்டு முதல் ஒன்பது லட்ச வாக்குகளை இழக்க நேரிடும் என்ற அச்சமும் அதிகாரப் பேரசையும் காரணமாக விசாரணைகளை உரிய முறையில் நடாத்துவதனை ரணில் தடுத்து வருகின்றார் என தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்திற்கு முன்னதாகவேனும் கலகொடத்தே ஞானசார தேரரை அரசாங்கம் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

5 கருத்துரைகள்:

காலம் காலமாக சிங்கள அரசியல்வாதிகளின் சுயநல அரசியலால் தான் இலங்கை பின்னோக்கி போனது, இப்போ மீண்டும் போக போகிறது.

அட்ரஸ் இல்லாமால் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்ட இந்த விஜேதாஸ ராஜபக்ஸ, ராஜபக்ஸவின் அரசியல் சாணக்கியத்தைப் பின்பற்றி இனத்துவேசமும், இன ஒதுக்கல் மூலமும் அரசியலில் நிலைத்திருக்கலாம் எனக் கனவு கண்டு அந்த அந்த வீணாப்போன துவேஷ ஹாமதுருவை சிறையில் சந்தித்துவிட்டு வெ ளிவந்து இனத்துவேசத்தைக் கக்குகிறான். இந்த நாட்டில் அப்பாவி மக்களையும், இந்த நாட்டின் பாதுகாப்பை நம்பி இலங்கை வந்த வெளிநாட்டவர்களின் உயிரைக் காவிக் கொண்டு இந்த அநியாயமான படுகொலைக்கு பின்னணியில் இருந்த படுதுவேஷங்கள், இப்போது இந்த நாட்டு முஸ்லிம்கள் மீது முதலைக்கண்ணீர் வடிக்கின்றன. அதேநேரத்தில் முடிந்தளவு அல்லாஹ்வைப் பயந்து அடுத்தவர்களுக்கு கனவிலும் அநியாயம் நினைக்காத முஸ்லிம்கள், கொலைகார ர்களுக்கு எதிரான பயங்கரமான ஆயுதத தை எதிர்பார்த்து இருக்கின்றார்கள். நிச்சியம் இந்த படுகொலைகாரன்களும் இந்த நாட்டின் படுதுரோகிகளுமான கொலைகார அரசியல் அவலங்களைக் கேவலப்படுத்தி இந்த நாட்டின் நீதியையும் சட்டத்தையும் மதிக்கும் மக்கள் முன்னால் கேவலப்பட்டு அவமானப்பட்டு அழிக்குமாறு அத்தனை முஸ்லிம்களும் எம் அனைவரையும் படைத்து பரிபாலித்து அத்தனை செயல்களுயும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கும் எங்கள் ரப், அல்லாஹ்விடம் நாம் நிச்சியம் கேட்போம். பிராரத்திப்போம் . அந்த ரப் எங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும் அங்கீகரிக்கப்போதுமானவன். யா அல்லாஹ் ரஜப் மாதத்திலும் ஷாபான் மாத த்திலும்,எங்கள் மீது உன் அருளைப் பொழிந்து ரமலான் மாத த்தை எங்களுக்கு அருளுவாயாக. அதன்பாக்கியங்கள் அத்தனையையும் பெற்று ஈருலகிலும் ஈடேற்றத்தை அருளுவாயாக.முஸ்லிம்களின் பெயரால் திட்டமிட்டு அநியாயமாக பொதுமக்களையும், இந்த நாட்டின் விருந்தாளிகளையும் கொன்றுகுவித்த கொலைகார ர்களை இந்த உலக மக்கள் அனைவருக்கு ம் சரியாக க் காட்டிக்கொடுத்து அவர்களைக்கேவலப்படுத்தி, உலக மக்கள் முன்னால் இழிவும் அவமானமும் பட்டு கொலைகா ர்களை அழித்து இந்த நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை அருளுவாயாக. இந்த நாட்டின் அரசியல் அப்பாவிகளாக தவிர்க்கும்எங்கள் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக.

இவனொரு கேட்ட துவேஷ நாய்.எங்கு எங்கு இவருக்கு பதவி கிடைக்கிமோ அந்த கட்சிகளுக்கு மெதுவாக நகருவாரு.இப்படிப்பட்ட நாய்கள் அரசியல் செய்யும்வரை நாட்டில் இனவொற்றுமையும் இருக்காது இன்னும் வெடிப்புகளும் பிரச்சினைகளும் தான் அதிகரிக்கும்.

ஏனைய விடயங்களை கொஞசம் விட்டு விடுவோம். கலகொட ஞானசாரரை சிறைக்காலம் முடியுமுன் விடுதலை செய்தால் நீதி அதனை ஏற்றுக் கொள்ளுமா. தடுப்புக் காவல் மற்றும் அதுபோன்ற காவலில் இருப்பவர்களையும் அல்லவா விடவேண்டிவரும். அப்படியில்லாவிடில் அது நீதித்துறைக்கு செய்யும் துரோகம் அல்லவா. ஏனக்கு ஒரு னைநய தோன்றுகின்றது. ஞானசாரரின் மீதி சிறை வாழ்க்கையை விஐயதாசா அவரகள் அனுபவிப்பதற்கு ஒப்புக் கொண்டால் அதுபற்றி பொது மக்கள் தரப்பில் யோசிக்க முடியும்.

இந்த முறை அந்த 9 லட்சம் வாக்குகளும் முற்றுமுழுதாக ரணிலுக்கு கிடைக்காது. இன்று முஸ்லிம்களுக்கு இருக்கும் தெரிவு வடகிழக்கில் முளைத்திருக்கும் தமிழ் பயங்கரவாதிகளை ஒழிப்பது தான்.

Post a Comment