May 26, 2019

சஹ்­ரான் பயன்படுத்திய 8 சிம்கார்ட்டுக்கள் - வைத்தியர், அரச ஊழியர், பணக்காரர் என முக்கிய சிலர் கைது

உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் 86 பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­களின் கைத்­தொ­லை­பே­சி­களும் தற்­பொ­ழுது ஆரா­யப்­பட்டு வரு­வ­தாக சிரேஷ்ட பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். 

இவர்­க­ளுக்கும் தடை­செய்­யப்­பட்ட தெளஹீத்  ஜமாஅத் அமைப்­புக்கும் மற்றும் அர­சி­யல்­வா­திகள், கோடீஸ்­வ­ரர்கள் ஆகி­யோ­ருக்கும் இடை­யி­லான தொடர்­புகள் குறித்து ஆரா­யப்­பட்டு வரு­கின்றது. நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமைய, இது­தொ­டர்­பான விசா­ர­ணைகள் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. பல்­வேறு தொலைத்­தொ­டர்பு நிலை­யங்­களில் இருந்து இது­கு­றித்த விப­ரங்கள்  திரட்­டப்­பட்­டுள்­ளன என்றும் கூறினார்.   

இதே­வேளை, பயங்­க­ர­வாதி சஹ்­ரானால் 8 சிம்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இத­னை­ய­டுத்து, அவ­ரது சிம்­ அட்டைகளை ஆராய்ந்­த­தை­ய­டுத்து அவ­ருடன் தொடர்­பி­லி­ருந்த, மட்­டக்­க­ளப்பு வைத்­தி­ய­சா­லையில் சேவை­யாற்றும் நிஜாம் என்ற கணனி இயக்­குநர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இவர் பெருங்­கோ­டீஸ்­வ­ர­ராவார். காத்­தான்­கு­டியைச் சேர்ந்த இவர், கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி பயின்றும் வரு­கிறார்.

மேலும் ஒரு கோடீஸ்­வரர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இவர் வெளி­நாட்டு வங்கி ஒன்றில் கணக்கு வைத்­துள்ளார்.  இவ­ருக்கு எவ்­வாறு இந்­த­ளவு தொகை பணம் வந்­தது என்­பதை அவரால் தெளி­வு­ப­டுத்த முடி­யா­துள்­ளது என்ற அவர், மட்­டக்­க­ளப்பு வைத்­தி­ய­சா­லையில் சேவை­யாற்­றிய நிலையில் கைதான நிஜாம், சிரி­யா­வி­லுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்­கத்­துடன் நேரடி தகவல் தொடர்­பு­களை பேணி­வந்­தவர்.

இத­னி­டையே, ஹொர­வ­பொத்­தா­னையில் ஐவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்கள் ஐவரும் சஹ்­ரா­னுடன் நேரடி தொடர்­பு­களைப் பேணி­வந்­த­தாக குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் தெரி­விக்­கின்­றனர். இவர்­களின் வங்­கிக்­க­ணக்கில் ஒரு பில்­லி­ய­னுக்கும் அதி­க­மான பணம் இருந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

பயங்­க­ர­வாதி சஹ்­ரா­னு­டனும், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­பு­டனும் நேரடித் தொடர்பை பேணி­வந்த நௌபர், சக்­கி­ரியா, ஜெய­னுதீன், இர்ஷான், ஜஸ்மின் ஆகிய ஐவரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­தாக தெரி­வித்த குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர், கைதா­ன­வர்­களில் ஹொர­வ­பொத்­தானை செய­ல­கத்தில் அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­த­ராகக் கட­மை­யாற்றும் ஒருவர், இரு அரச ஆசி­ரி­யர்கள், கிவு­லு­கட அரபிக் கல்­லூ­ரியைச் சேர்ந்த இரு ஆசி­ரி­யர்கள் என ஐவர் அடங்­கு­கின்­றனர். 

இவர்கள் அநு­ரா­த­பு­ரத்­திலும் திருகோணமலையிலும் தீவிரவாதம் தொடர்பில் கருத்தரங்குகளை நடத்தியுள்ளனர். மேலும் இவர்களின் வங்கிக்கணக்கில் பெருந்தொகைப்பணம் உள்ளது. மேலும், இந்த சந்தேக நபர்கள் ஹொரவபொத்தானை காட்டுக்குள் ஆயுதப் பயிற்சியும் பெற்றுள்ளனர் என்றும் அந்த பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.   

1 கருத்துரைகள்:

It is very much worrying to read all this revelation about this group. JVP says that it is an internal problem of Muslim community in Sri Lanka. Sri Lankan community leaders should think about this issue and make a plan to wipe of any extremism from Sri Lanka? we know well where did all these imported ideology came from? Islam came from Arabia and yet, peaceful Islam has been hacked by these radicals. Please consider to refrain from all radical groups. So called Tauheed groups are fitna to SL. They think their form of Islam is only Islam and all others are misguided according to them. So, be careful with any of these groups.

Post a comment