May 29, 2019

50000 முதல் 5 இலட்சம் குழந்தைகளை பிறக்கவிடாது தடுத்துள்ளனர் - அத்துரலிய ரத்ன தேரர் குற்றச்சாட்டு

கடந்த 10 அல்லது 15 வருட காலப் பகுதியில் மாத்திரம் எமது நாட்டில் பிறக்கவிருந்த சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் பிறக்க விடாது தடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

அண்மைய குண்டு வெடிப்பு மற்றும் கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் மொஹமட் சாபி தொடர்பில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பேசிய அவர்,

மொஹமட் சாபி வைத்தியருக்கு எதிராக முன்னெடுக்கும் விசாரணைக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளிடமிருந்து அழுத்தங்கள் விடுக்கப்படுகின்றன. எனக்குத் தெரிந்த வகையில், கடந்த 10 அல்லது 15 வருட காலப் பகுதியில் மாத்திரம் எமது நாட்டில் பிறக்கவிருந்த சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் பிறக்க விடாது தடுக்கப்பட்டுள்ளன.

இது எனது அனுமானம். இது சிலவேளை, 5 லட்சம் வரை வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது. எல்லா வைத்தியசாலைகளிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எமது சிங்களவர்கள் ஒற்றுமைப்பட்டால் அன்றி, இதற்கு விடைகாண முடியாது. இதனால், முழு சமூகமும் இனவாதத்தை மறந்து, உணர்வுகொண்டு, இந்த நாட்டுக்காக தனக்கு முடியுமான காரியத்தை செய்ய வேண்டியுள்ளது.

இதேவேளை, நாடு என்ற வகையில் நாம் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளோம். இந்த இஸ்லாம் அடிப்படைவாதம் என்பது பயங்கரவாதி சஹரான் போன்ற குண்டுதாரிகள் எட்டுப் பேரின் பிரச்சினையல்ல.

இன்று இந்த அடிப்படைவாதம், நீதித்துறை, மருத்துவத்துறை, வங்கி, வைத்தியசாலை, பொருளாதார கேந்திர நிலையம், பாதுகாப்புப் பிரிவு என அனைத்திலும் ஊடுறுவியுள்ளது. எந்தவொரு அழிவையும் ஏற்படுத்த முடியும் வகையில் புற்றுநோய் போன்று புரையோடிப்போய் உள்ளது என்றார்.

2 கருத்துரைகள்:

A kind request to Jaffnamuslim.com.

As we all know that ... The enemy of ISLAM and Muslims are successfully conducting a "psychological war" against Muslim to make us feel weak.

So please avoid any articles, that can create fear in the hearts of Muslims. Otherwise you are contributing the enemies goal in making our society living in a fearful mentality. This their main goal these days.

Let us place articles that will increase the courage of our society.

We keep trust in Allah and seek his his help always.

இவனுக்கும் அவனுக்கும் அந்த ஞானசார மக்களிடம்தில் பிரபல்லியமாகவேண்டும் என்ற கடும் போட்டிகள் நிகழ்கின்றன

ஆகையால் தற்போது அப்பாவி முஸ்லிம்கள்மீது நாம் எந்த பொய்களையும் கட்டுகதைகளையும் சொன்னாலும் பெருபாண்மை பௌத்தமக்களை செவிமடிப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு பைத்தியகாரன் போன்று கதைக்கின்றான்

இவன் சொல்லும் கதையையை ஏன் பலவருடங்களுக்கு முன்பே ஆதாரங்களுடன் மக்களுக்கு சொல்லவில்லை தற்போது சொல்லும் காரணம் என்ன? இவன் சொல்லும் விடயத்தை முஸ்லிம்மல்லாத வைத்தியர்கள்தான் முஸ்லிம் குழந்தைகளை பிறந்தவுடன் நஞ்சி injunction மூலம் கொலை செய்துள்ளார்கள் என்று அந்த வைத்தியர்கள் இஸ்லாதில் நேர்வழியை அடைந்து தங்கள் வாயினாலே சொல்லி அழுகின்றார்கள்

ஒரு சிங்கள வைத்திய பெண்மனி அவளுடய சேவயில் 90 முஸ்லிம் குழந்தைகளை கொலைசெய்துள்ளதாக நேர்வழி பெற்று இஸ்லாத்தில் நுளைந்தபின் தன்வாயால் சொல்லு அழும் செய்திகளை பார்கின்றோம் இவ்வாறு எத்தனை விடயங்கள்!

Post a Comment