Header Ads



5 சிறுவர்கள் அடங்களாக 12 பேர் அடங்கிய, முஸ்லிம் குடும்பமொன்றுக்கு நடந்த அக்கிரமம்

மஹியங்கன,  ஹசலக பிரதேச முஸ்லிம் பெண்மனியின் கைது பற்றிய செய்தியை கேள்விப்பட்டாத இலங்கையர் இருக்கமாட்டார்கள். அதையொத்த செய்தி ஒன்றை நான் ஆங்கில மூலத்திலிருந்து தமிழுக்கு எழுதுகின்றேன். இந்த ஆக்கம் முஹீத் ஜீரான் என்ற சர்வதேச மனித உரிமைகள் உத்தியோகத்தரினால் அவரின் முகநூலில் நேற்று 23,எழுதப்பட்டிருந்த ஆக்கமாகும்.

மொழிபெயர்பை எழுதுவதற்குமுன் என் மனதை குடைந்து கொண்டிருக்கும் கேள்வியை எமது முஸ்லிம் சமூகத்திற்கு சமர்ப்பிக்கின்றேன்.

உலகக்கல்வி,மறுமைக்கல்வி எனக்கல்வியைப்பிரித்து இந்த சமூகத்தை இரண்டுகூறாக்கி சமூகத்தை குட்டிச்சுவராக்குகின்றீர்களே உங்கள் பிராத்தனைகளினால் மட்டும் இந்த சமூகத்தை பாதுகாக்க முடிகிறதா?

இந்த இரு சம்பவங்களிலும் விடுதலைக்காக போராடுபவர்கள் உங்கள் பார்வையில் உலகக்கல்வி கற்றவர்கள்.

நான் ரசூல் (ஸல்) அவர்களின் “ ஒட்டகத்தைக்கட்டிவிட்டு அதன் பாதுகாப்பிற்காக அழ்ழாவிடம் பிராத்தியுங்கள்” என்ற பொன்மொழியை இப்போதைக்கு மேற்கோள்காட்டுகின்றேன்.

மனதைச்சஞ்சலப்படுத்தும் 5 சிறுவர்கள் அடங்களாக 12 பேர் அடங்கிய ஒரு குடும்பத்தின் கதை.

ஒரு தாய் தனது திருமணம் முடித்த மூன்று மகள்களுடனும் 5 பேரக்குழந்தைகள் சிறிய வாடகை வீடொன்றில் வாழ்ந்துவந்தனர்.அவர்கள் தமது அன்றாட தேவைகளுக்காக சிறுமியருக்கான பாவாடைகளை தைத்து விற்பனை செய்தனர்.பாவாடை உற்பத்திற்காக பலவர்ண பொப்லின் துணிகளை அவர்கள் சந்தையில் வாங்கினர்,மஞ்சள் வர்ணம் அடங்கலாக.அதனை பாவாடையில் தைத்து ஹுனுபிடிய,ரொஸ்வெலிகாடன் இல் உள்ள தொழிநுற்பமாக ஆடை கழுவும் இடத்தில் கொடுத்து கழுவி எடுப்பார்கள்.இப்போது புதியதொரு தோற்றத்தை பாவாடை பெற்றிருக்கும்.

10 தினங்களுக்கு முன்னர் இவர்கள் வசித்த வீட்டின் மேல் மாடியில் வசித்துவந்த முஸ்லிம் உரிமையாளர்,கீழ் மாடியில் வசிக்கும் குடும்பத்தினர் சந்தேகத்திற்குரியவர்களாக இருப்பதாகவும் அவர்களிடம் பிக்குகள் அணியும் துணியை வைத்திருப்பதாகவும் பொலிசாருக்கு ரகசிய தகவலொன்றை வழங்கியுள்ளார்.இதனை அடுத்து அங்கு விஜயம் செய்த இரண்டு பொலிசாரின் தேடுதலின்போது மஞ்சள் துணி கலந்து தைத்த பாவாடைகள் கழுவுவதற்கு தயார் நிலையில் இருந்தது.அவர்கள் இது போலியான அச்சம் என்ற முடிவிற்கு வந்த நேரம் அவ்விடத்திற்கு வந்த பக்கத்துவீட்டு பெளத்த பெண் ஒரு ஆடையை தூக்கிக்கொண்டு வெளியே ஓடி,”இதோ இவர்கள் எமது பிக்குகளின் துணியை வைத்திருக்கின்றார்கள்” என்று சத்தமிட்டிருக்கின்றாள்.

இதனைக்கேட்ட முழுக்கிறாமமும் அவ்விடத்தில் திரண்டு அவ்வீட்டிற்கு கல்லெறிந்துள்ளார்கள். பொலிசாரினால்  அவர்களை கட்டுப்படுத்தமுடியவில்லை.கிராமத்துக்காடையர்கள் கத்தி வாள்களுடன் அவர்களைத்தாக்க வீட்டினுள் நுழைந்து விட்டனர்.அவர்கள் பயத்தினால் வேறுவழியின்றி சிறுவர்கள் உட்பட அனைவரும் மலசலகூடத்திற்குள் நுழைந்து கொண்டனர்.கதவை உடைக்கமுயற்சித்தனர்,காற்று வழியினூடாக கற்களை அவர்கள்மீது எறிந்துள்ளனர்.உடனடியாக STF உம் பொலிசாரும் அவ்விடத்திற்கு விரைந்து அவர்களை காப்பாற்றி கிரிபத்கொட பொலிசிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இவர்கள்மீது குற்றம் இல்லை எனப்பொலிசார் கண்டாலும் ஊர் மக்களின் எதிர்பினால் 21 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நீதி மன்றின் அனுமதியைப்பெற்றிருக்கின்றார்கள். இதில் மனவருந்தத்தக்கவிடயம் என்னவென்றால் பள்ளிவாசலில் இருந்து அவர்களின் நலனைவிசாரிக்க யாரும் வரவில்லை என்பதுதான்.பொலிசார் அவர்களை காவலில் வைக்கவில்லை,ஆனால் அவர்களுக்கு வேருவேறான ‘செல்’களை ஒதுக்கி சகல அடிப்படைவசதிகளையும் செய்துகொடுத்துள்ளனர்.பேலியகொட பொலிஸ் அத்தியட்சகருக்கு நன்றி.

இச்செய்தியைக்கேள்விப்பட்டவுடன் பொலிஸ் நிலையத்திற்கு நான் விஜயம் செய்தேன்.தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரிடமும் கதைத்தேன்.என்னைக்கண்டவுடன் அழுதார்கள்,வீட்டில் எல்லாவற்றையும் அழித்துவிட்டதாகக்கூறினார்கள், அவர்களை விடுதலை செய்ய உதவுமாறு கேட்டார்கள்,நான் அவர்களுக்கு உதவுவதாகக்கூறினேன், அது இந்தக்கக்ஷ்டமான நேரத்தில் எனது மானசிகக்கடமை. 

நான் பேலியகொட பொலிஸ் சுப்ரிண்டண்ட் Mrs. Madaraa Ariysena அவர்களுடன் 30 நிமிடங்களுக்கு மேல் கதைத்தேன்.அவர் சாதாரண சட்டத்தின்கீழ் அவர்களை விடுதலை செய்வதாக கூறினார்.நாளை அவராகவே கோப்புக்களை பூர்த்திசெய்து விடுதலைக்கு ஏற்பாடு செய்வதாகக்கூறினார். 

அவர்களைப்பார்க்கும்போது கவலையாக இருக்கின்றது,இன்னும் ஓரிரண்டு தினங்களில் அவர்கள் விடுதலை ஆவார்கள்.


Muheed Jeeran
5 hrs · 
Further Update of Victims are further Victimize at the Kiribathgoda Police Station. ( families of 4 including 4 mothers)
After my visit yesterday, things have dramatically changed for sure. Since last week various people including lawyers, social activists and local politicos were lobbying for the release but police was only promising to release and it never came to reality.
I am glad to hear that one of the ladies called me and said. "Today police took the statements from us and also took us to our home to move out all the household items.
She told me police awaits the signature of Division SP to send them home without sending them to courts. I can hear the excitement in her voice during this phone conversation. I told them some people are coming forward to help them after the release.
Muheed Jeeran 
International Human Rights Activists

1 comment:

  1. My Sincere Thanks to Mr. Moheed Jeeran, Allah will help u on your future.

    ReplyDelete

Powered by Blogger.