Header Ads



முஸ்லிம் ஆசிரியைகளை, மிகமோசமாக திட்டிய 4 பேர் கைது - அதிரடி காட்டிய மைத்ரி குணரத்ன

கண்டியில் மிகப் பிரபலமான பெண்கள் கல்லூரி அது.

சிங்கள மாணவிகளுக்கு சமமாக முஸ்லிம்  மாணவிகளும் அங்கே கல்வி கற்கிறார்கள்.

குறித்த பாடசாலையில் நான்கு முஸ்லிம் பெண் ஆசிரியைகள் கடமை புரிகிறார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப்பின்னர் இந்த ஆசிரியைகளுக்கு அபாயா மற்றும் ஷோல் அணிந்து பாடசாலை வருவதற்கும் தடைவிதிக்கப்படுகின்றது.

ஆசிரியைகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்கிறார்கள்,

அதன் பின்னர் அபாயா அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இருந்தாலும் சில பெற்றோர்கள் அந்த ஆசிரியைகளை பாடசாலைக்கு உள்ளே போகவிடாமல் தடுத்து விடுகிறார்கள்.

அதன்பின்னர் இந்த ஆசிரியைகள் குறித்து முறைப்பாடு செய்வதற்கு பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் மத்திய மாகாண ஆளுனரிடம் செல்கிறார்கள்.

குறித்த பெற்றோர்கள், முஸ்லிம் ஆசிரியைகள் பற்றி முறைப்பாடுகளை ஆளுனரிடம் முன்வைத்துக்கொண்டு இருக்கும் பொழுது,

மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் சிலரும் ஆளுனர் அலுவலகத்துக்கு வருகிறார்கள்.

மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் முஸ்லிம் ஆசிரியைகள் சார்பாக பேசிக்கொண்டிருக்கும் பொழுது, அங்கிருந்த பெற்றோர்கள் சிலர் மிக மோசமாக அந்த ஆசிரியைகளையும், முஸ்லிம்களையும் விமர்சித்து இருக்கிறார்கள்.

அந்த பெற்றோரின் இனவாத, முஸ்லிம் வெறுப்பு கருத்துக்களை கேட்டு ஆத்திரமடைந்த  மத்திய மாகாண ஆளுனர் உடனடியாக அந்த பெற்றோரை கைது செய்யுமாறு கட்டளை பிரப்பித்து இருக்கிறார்.

அந்த ஆசிரியைகளைக்கும் தங்கள் கலாச்சார விழுமியங்களை பேணி ஆடை அணிந்து பாடசாலை செல்ல அனுமதி வழங்கி இருக்கின்றார்.

இந்த நாட்டின் முன்னேற்றத்துக்கு அதிகாரத்திலும்,பதவிகளிலும் எமது இனத்தவர்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று இல்லை.

நல்ல மனிதர்கள் இருந்தாலே போதும் என்பதற்கு மத்திய மாகாண ஆளுனர் ஜனாதிபதி சட்டத்தரனி மைத்ரி குணரத்ன நல்லதொரு உதாரணம்.

Safwan Basheer

6 comments:

  1. Sri Lanka has many of this types of officials. We are happy of them and we respect too.

    ReplyDelete
  2. Same approach should have been made at Puwakpittiya school.......

    ReplyDelete
  3. thank you sir. we need leaders like you. those parents came to the wrong place to display their racism.

    ReplyDelete
  4. பல நல் உள்ளங்கள் உண்டு.சில இனவாதம் பிடித்த சில்லறைகலும் உண்டு.மைத்திரி குணரட்ன UNP யில் இருக்கும் போதும் ஒரு நல்ல மனிதர்

    ReplyDelete
  5. Good movement, thanks for the Governor and Human Rights commission.
    As there are ways for your rights, you must approach the right places first and officially.

    ReplyDelete
  6. Inda padasalaiyin peyarai kurippittal than enna?

    ReplyDelete

Powered by Blogger.