May 25, 2019

40, 000 முஸ்லிம்களினால் இந்நாட்டுக்கு அச்சுறுத்தல் உள்ளது, 5 பிரிவாக உள்ளனர்

தமது மதம் சாராத  ஏனை­ய­வர்­களை அழிக்­க­  வேண்டும் என்ற அடிப்­படை கொள்­கையில் செயற்­படும் 30 முதல் 40 ஆயிரம் முஸ்லிம்கள் இந்த நாட்­டுக்குள் உள்­ளனர். இன்று இவர்­களின் மூல­மாக அச்­சு­றுத்தல் இல்­லா­து­  போ­னாலும் எதிர்­கா­லத்தில் அச்­சு­றுத்தல் உள்­ளது என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க சபையில் தெரி­வித்தார். 

மக்கள் விரும்­பா­விட்­டாலும் கூட தேசிய பாது­காப்பை கருத்தில் கொண்டு அவ­ச­ர­கால சட்­டத்தை ஏற்­றுத்தான் ஆக­வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை அவ­ச­ர­கால சட்­டத்தை நீட்­டிக்கும் விவா­தத்தில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.  அவர் மேலும்  குறிப்­பி­டு­கையில்,

இன்று நாட்டின் நெருக்­க­டியை அடுத்து அவ­ச­ர­கால சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. இதனால் மக்­களின் ஜன­நா­யக செயற்­பா­டு­க­ளுக்கும் பாது­காப்­பு­த­ரப்பின் செயற்­பா­டு­க­ளுக்கும் இடை­யி­லான சம­னிலை தன்­மையை உரு­வாக்க முடியாது என்ற கேள்வி உள்­ளது.

ஆனால் நாட்டின் தேசிய பாது­காப்பு என்ற விட­யத்தில் மக்கள் தியா­கங்­களை செய்­துதான் ஆக­வேண்டும். தேடுதல், விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கி­யாக வேண்டும். சிரி­யா­விற்கும்  ஈராக்­கிற்கும்  சம்­பந்­தமே இல்­லாத எமது கிறிஸ்­தவ மக்­களை கொலை­செய்ய எடுத்த முயற்­சி­களும் இதற்கு பின்­னரும் நடக்­குமா என்ற சந்­தேகும் ஏன் எடுக்­கப்­பட்­டது.

இந்த இஸ்­லா­மிய அமைப்பு தாம் ஒரு இனம்  தான் இந்த உலகின் மக்கள் என்ற கொள்­கையில் நாட­ளா­விய ரீதியில் இவர்கள் பரவி வரு­கின்­றனர்.  இதனை கட்­டுப்­ப­டுத்த வேண்டும். பல­வீ­ன­மான  நாடு­களில் உள்­நு­ழைந்து தமது பிராந்­தி­யங்­களை உரு­வாக்க முடியும் என்ற நோக்கம் அவர்­க­ளுக்கு உள்­ளது.

இந்த நோக்­கத்தில் தான் உலக நாடு­க­ளுக்கு பயணம் செய்து எல்லா நாடு­க­ளிலும் பயங்­க­ர­வாத தாக்­கு­த­லை­களை நடத்­து­கின்­றனர். குழு­வாக அல்­லாது தனி நப­ராக தன்னை தற்­கொலை தாரி­யாக மாற்­றிக்­கொள்­கி­றனர். எந்த வகை­யி­லேனும் கொலை செய்­ய­வேண்டும் அதன் மூலம் இஸ்­லா­மிய தேசம் ஒன்­றினை உரு­வாக்க வேண்டும் என்­பதே இவர்­களின் நோக்­க­மாகும்.  

இந்த பயங்­க­ர­வா­தத்தை அழிப்­பதில் பாது­காப்பு தரப்பின் செயற்­பா­டுகள் மூல­மாக மட்­டுமே நிறுத்த முடி­யாது. இந்த நாட்டில் தவ்ஹித் சிந்­த­னையில் இருந்து இந்த நாட்டில் கொலை­களை செய்யும் ஒரு தரப்பு உள்­ளது. அதேபோல் ஆயிரம் இரண்­டா­யிரம் பேர் கல்­வியை பெற்று பின்­ன­ணியில் இருந்து பயங்­க­ர­வா­தத்தை பலப்­ப­டுத்தும் தரப்பும் இலங்­கையில் உள்­ளது.

இவர்கள் இந்த பாரா­ளு­மன்­றத்­திலும் இருந்­துள்­ளனர். அதேபோல் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களில் ஈடுபடாதபோதிலும் கூட தமது மதம் சார்ந்தவர்கள் தவிர்ந்த ஏனைய  அனை­வரும் மத சார்­பில்­லா­தவர் என்ற கருத்தையும் இதனால் அவர்­களை அழிக்கும் கொள்­கையில் உள்ள 30, -40 ஆயிரம் பேர் உள்­ளனர். 

அதேபோல் இலங்­கையர் என்ற உணர்வு இல்­லாத அரா­பிய கொள்­கையில் உள்­ள­வர்கள் உள்­ளனர். இவர்கள் அனை­வரும் தவி­ர்த்து இலங்­கையில் முஸ்­லிம்­க­ளாக அதேபோல் ஏனைய மத இனத்­த­வரை அங்­கீ­க­ரித்து அவர்­க­ளுடன் அமை­தியா வாழும் முஸ்­லிம்­களும் உள்­ளனர்.

இவ்­வாறு ஐந்து பிர­தான பிரி­வாக உள்­ளனர். இவர்களை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். இதில் அச்சுறுத்தலான பிரிவுகளை இல்லாதொழிக்க வேண்டும்.  இன்று அச்சுறுத்தல் இல்லாதுபோனாலும் கூட எதிர்காலத்தில்  அச்சுறுத்தல் ஏற்படலாம். இந்த நாட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும். இதில் சகல தரப்பும் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.-

7 கருத்துரைகள்:

ஜனநாயகத்தில் உள்ள இன்னுமொரு பெரிய ஓட்டை எவரும் நினைத்தமாதிரி எந்த ஆதாரமும் இல்லாது பேசுவதற்குஇ நடப்பதற்குஇ செய்வதையும் செய்துவிட்டு மற்றவர்கள்மீது குற்றம் சொல்வதற்கான “உரிமை” யினை அரசே ஒரு சாராருக்கு மாத்திரம் வழங்கியிருப்பதுதான். அடிப்படையில் ஜனநாயக விழுமியங்கள் நாட்டிற்கு நாடு மாறுபட்டிருப்பதற்கு இலங்கை ஓர் உதாரணமாகும்.

என்னா ஒரு அழகிய கர்ப்பனை.எவ்வாறு 40000 என்னும் தொகையை என்ணிப் பார்த்தார்.அப்படி கனக்கிட்டிருந்தால்,ஏன் அவர்களை இப்போது ஒவ்வோருத்தாக அமச்சருக்கு காட்டிக்கொடுக்க முடியுமே.பாதுகாப்பு தரப்புக்கும் இதனால் நேரமும்,வீண் அலைச்சலும்.

This is indeed, an insult not only for 2 millions Sri Lankan Muslim community but also to entire nation. To have someone like this to spread lies and rumours as he likes is against all human norm and human consciousness. Sinhalese will never accept such lies and rumours. If you have 40.000 please provide evidence..not all Tauheed jamaths are radicals...not All Tauheed Jamath are terrorists. Why did not take on Zahran Hashim dispite the fact Muslim community told about it..

Entha amachaer than kelle vendu kunthu pakar

இவனை கைது செய்து அந்த 40000 பேரையும் காட்ட சொல்லுங்கள்.

Hello sir..ungada waaya konjam adakkuna irikkira makkal konjam amaithiya..sabthosama awangada life a kondu poha neridum..neenga ippudi 1000 kanakkula sollumpothu irikkira makkal innum muslim makkala nermayya paarkka waayppe illa....naatla enga nimmathi warum...intha keduketta isis itku udanthayyaana makkal nichayam nam naattil uruwaaha unmayyaana muslim widamaattann....so konjam makkalin ullankala purinthu kutram illatha makkaluku pathuhaappu kudunga...athu gourawam...

Number one Racist, he is in Sri Lanka. Go to hell bustard.

Post a comment