Header Ads



தொகுப்பாளினியின் வாயை, அடைத்த ஹிஸ்புல்லாஹ் - “ஐயமும் தெளிவும்” தெரண 360°

கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்ட சிங்களத்திலான விவாதம் தெரண தொடைக்காட்சியில் ஒளிபரப்பாகியிருந்தது. ஏலவே எதிர்பார்க்கப்பட்டது போலவே தீவிரவாதத்தில் ஆரம்பித்து இறுதியில் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் வந்து நின்றது.

மிகவும் பக்குவமாகவும் பொறுப்புணர்வோடும் ஆளுனர் தம்மாலான சிங்களத்திலே பதிலளித்திருந்தார்கள். ஒரு படி மேலாகவே சென்று ஆளுனர், தம் மீது சுமத்தப்படும் அபாண்டத்தினை தாமாகவே தமது டெப் இல் ஒளிபரப்பி விடையளித்தது அவரது கறைபடியாக் கரங்களை கோடிட்டுக்காட்டியது.

சுமார் மூன்று லெட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கான தகுதியை அடைகின்றபோதும் வெறும் 40000 மாணவர்களே உள்வாரியாக இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்வது பற்றியும், ஏனைய மாணவர்களில் ஒரு சாரார் குறைந்த கட்டணத்தில் தொழினுட்ப துறையினை கற்றுக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் இது எனவும், செலவீனங்களை குறைக்கும்முகமாக, அதன் அமைவிடம், தண்ணீர் வசதி, சோலோபவர் மின் திட்டம், நோக்கம் பற்றி ஆளுனர் அவர்கள் கூறவே ஒரு கணம் ஸ்தம்பித்துப்போன தொகுப்பாளினி,

பல்கலைக்கழகத்தினை நடாத்த ஆளுனருக்கு உள்ள அனுபவம் தொடர்பிலும், அதனுடைய கட்டடக்கலை தொடர்பிலும் கேள்வி எழுப்பினார். ஆளுனர் அவர்கள், அவரின் தகுதி தொடர்பிலும், அரச பல்கலைக்கழகங்கள் அரச நிதியில் அவரவருடைய சமயங்கங்களை பிரதிபலிக்கும் கட்டடக்கலையோடு மிழிரும் போது தனியார் பல்கலைக்கழகம் தனக்குப்பிடித்த இஸ்லாமிய வடிவில் இருப்பது தொடர்பில் தப்பில்லை என சுவாரஸ்யமாகவே பதிலளித்தார்.

மேலும் முஸ்லிம்களுக்கு மாத்திரமான பல்கலைக்கழகமா இது என வினவவே, அனைத்து இன வறிய மாணவர்களுக்காகவும் அமைத்திருக்கின்றேன். கொழும்பு, கண்டியில் உள்ள மாணவர்கள் தலைநகரத்தில் இலகுவாக கற்றுக் கொள்கின்ற அதே வேளை நமது பிராந்திய வறிய மாணவர்களும் கல்வியை பெறுவதற்கான தளமாகாவே இதனை புனானையில் அமைத்திருக்கின்றேன். முஸ்லிங்களுக்கு மாத்திரம் அமைப்பதென்றால் காத்தாங்குடியிலையோ, சம்மாந்துறையிலையோ அமைத்திருப்பேன் என சாட்டையாக பதில் கூறினார்.

ஈற்றில் , இலங்கையில் ஏலவே இடம்பெற்ற பயங்கரவாதங்களுக்கு பொறுப்பானவர்களை JVP என்றும் , LTTE என்றும் மதம் சாரா வண்ணம் பெயரிட்டவர்கள், இஸ்லாமிய பெயர்தாங்கிய பயங்கரவாதிகள் செய்த இழி செயலுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகத்தையும் விரல் நீட்டி குற்றம் சாட்டியிருப்பதானது வேதனையளிக்கிறது. முஸ்லிம்கள் ஒரு வியாபார சமூகம். அவர்கள் இந்த பெளத்த தேசத்தின் ஒரு GS பிரிவைக்கூட தமக்காக கோரியதுமில்லை.கோரப்போவதில்லை. இந்த நாட்டிலே சுதந்திரமாகவும், சுபீட்சமாகவும் வாழவே அவர்கள் விரும்புகின்றார்கள் என்றார்.

ஒட்டுமொத்தத்தில் நேற்றைய 360° தெரணவில் சென்றிருந்தாலும் ஆளுனரை கிண்டி வம்பிழுக்கும் ச(க)தி ஊடகத்துக்கு பாரிய அடியாக இருந்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

ஷிபான் BM. 

6 comments:

  1. Nevertheless, Hisbullah tackled the subject matter, his plea in the last phase of the discussion, requesting President Sirisena to intervene in releasing Gnanasara Thero is truly ridiculous and legally unacceptable. These politicians should stop playing with the lives of innocent SL Muslims...

    ReplyDelete
  2. Jvp,LTTE என சிங்கள’தமிழ் வாலிபர்கள் ஆடிய வெறியாட்டதை அந்த வெறியாட்டத்துக்கு அவர்கள் சார்ந்த சமூகமும்,ஒரு சில அரசியல் தலைமைகளும் வழங்கிய ஆதரவும் இந்த நாட்டை சுமார் 40 வருடங்களாக நாசமாக்கியது.ஆனால் 2 நாட்களில் முடிந்து விட்ட Muslim மக்களால் ,அரசியல் தலைமைகலால் நிராகரிக்கப்பட்டு,காட்டிகொடுக்கப்பட்ட விடயத்தை வைத்துக்கொண்டு கேவலமான நாய்கள் கொஞ்ஞம் சேர்ந்து கொண்டு ஏதோ அவர்கள் இந்த நாட்டை கட்டி காப்பது போல்,நடித்தாலும் அனவருக்கும் தெரியும் மக்களை அழித்த பயங்கரவாதிகள் அரசியலிலும் சரி வெளியிலும் இப்போதும் நடித்துக்கொண்டு வாழுகின்ரனர் என

    ReplyDelete
  3. இதே போல் சக்தியையும் விவாதத்திற்குற்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  4. hmmm Sakshi real puliiiiieeeeee

    ReplyDelete
  5. ஆளுனர் அவர்களின் இந்த கருத்துக்களில் மிக முக்கியானது பல்கலைக்கழகம் ப த்திய க ருத்துக்களை.மட்டக்களப்பு கழுத்தை குணம் கொண்ட அரசியல்வாதிகளுக்கு போய்சேரட்டும் கழுத்தை திடிரென்று கத்தும்.எப்போ நிறுத்தும் கழுதைக்குத்தான் தெரியும்.ஓடி... போகும் left திரும்புமா இல்ல right திரும்புமா என்பது கழுதைக்குத்தான் தெரிரியும். புடிந்தால் போதும் உம்மால் இது முடித்ததென்று.

    ReplyDelete
  6. ஏன் அப்பா ஹிஸ்புல்லாஹ் அவர்களை கருணா அம்மான் மாதிரி நெடுகிலும் போய் முண்டிக்கொண்டு இருக்கிறீர்கள். முதலில் ஹிஸ்புல்லாஹ் அவர்களைப்பற்றி கவனமாகப் படியுங்கள். அதன்பின் உங்கள் கருத்துக்களை நல்வார்த்தையில் சொல்லுங்கள். ஆளுனர் அவர்களுக்கும் பயங்கரவாதத்திற்கும் தொடர்பிருந்தால் ஆதாரங்களுடன் சொல்லிக் காட்டுங்களேன். அவர்களது சேவை எல்லா மக்களுக்கும் நீதி நியாயமானதாகத்தான் கிடைக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.