Header Ads



300 காடையர்கள் தாக்குதல் - குருநாகலில் 3 பள்ளிவாசல்களுக்கு சேதம், குர்ஆன் பிரதிகள் எரிப்பு

வடமேல் மாகாணம், குருநாகல் மாவட்டம், பிங்கிரிய தேர்தல் தொகுதி, பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, இஹல கினியமை எனும் கிராமத்தில் நேற்று இரவு (2019/05/12) காடையர்களினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலினால்

1) மஸ்ஜிதுத் தக்வா (ஜும்ஆ மஸ்ஜித்)

2) மஸ்ஜிதுல் அப்ரார் (தக்கியா)

3) மஸ்ஜிதுல் ஆயிஷா (தக்கியா)

போன்ற பள்ளிவாயில்களுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

மஸ்ஜிதுத் தக்வா பெரிய பள்ளிவாயிலில் தொடங்கிய தாக்குதல் பின்பு படிப்படியாக தக்கியா பள்ளிகளை நோக்கி நகர்ந்தன. இதன்போது பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

புனித அல் குர்ஆன் பிரதிகள் தீ வைக்கப்பட்டு, மேலும் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள் பலவும் தீ வைக்கப்பட்டுள்ளதுடன், பாரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டும் உள்ளன. அத்தோடு பல தளபாடங்கள், மின் உபகரணங்கள் என்பனவும் தீ வைக்கப்பட்டுள்ளன.

பள்ளி வாயில்களின் அனைத்து கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளதுடன், பள்ளிவாயிலில் இயங்கிவந்த கிராமத்தின் அனைத்து இனமக்களுக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் பாரிய நீர்த்தாங்கிகள் உடைத்துச் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன.

நேற்று நல்லிரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 3.30  மணிவரை இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதுடன், இத்தாக்குதலை நடாத்த காடையர்கள் 300 க்கும் மேற்ப்பட்டோர். ஆயுதங்களுடனும் கல் வீச்சுத் தாக்குதல் நடத்துவதற்குத் தேவையான கற்கள் சிறிய ரக லொறியோன்றில் கொண்டுவரப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்ட பலர் தெரிவித்தனர்.

கிராமத்து மக்கள் கிராமத்தைச் சூழவுள்ள மாற்று மத மக்களுடன் பல்லாண்டு காலமாக அன்னியோன்யமாக பழகும் குணமுடையவர்கள் தொழில், கொடுக்கல் வாங்கல்கள், சமய, கலாசார நிகழ்வுகளில் இரு தரப்பினரும் பரஸ்பர ஒற்றுமையுடன் சகவாழ்வுடனேயே வாழ்ந்து வருவதோடு நல்லிரவு திடீரென இடம்பெற்ற இச் சம்பவம் அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கிராமத்தின் பாதுகாப்புக் கருதி 24 மணிநேரம் பொலிஸ் பாதுகாப்பு கிராமத்தின் நாட்சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், போலீசார் கடமையில் இருக்கும் நேரமே இக் காடையர் கூட்டம் தாக்குதல் நடாத்த சாரை சாரையாக வந்து குவிந்துள்ளனர்.

இவ்வாறு வந்த தாக்குதல்தாரிகளை ஊர் மக்கள் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பியபோதும் பாதுகாப்புப் பிரிவின் வருகையைத் தொடர்ந்தே இப் பாரதூரமான இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தாக்குதலை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இரும்புக் குழாய்கள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் ஊர் முஸ்லிம் மக்கள் சிலரை நிராயுதபாணிகளாக்கி அச்சமூட்டப்பட்ட நிலையில் காடையர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் ஊரடங்குச் சட்டத்தின் பின்பே தாக்குதல் உக்கிரம் அடைந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும், ஒரு சில வீடுகளின் கண்ணாடிகள், இரண்டு ஹோட்டல்களின் கண்ணாடிகள் பள்ளிவாயில்களில் புதிதாய் அமைத்த ஈட்டி வடிவ வேளிக்கட்டைகள், துவம்சம் செய்யப்பட்டுள்ளதுடன், அயல் கிராமங்களில் பள்ளிவாயில்கள், வியாபார நிலையங்களும் இத்தொடர் தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளன.

     “ ரமழான் பொறுமையுடைய மாதம், எமக்கு அல்லாஹ் மட்டுமே போதுமானவன்.

      தொழுகையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் இறைவைடத்தில் உதவி தேடுவோம்.

      நிச்சயமாக பொறுமையாளர்களுடனேயே அல்லாஹ் இருக்கிறான்.

களத்தில் இருந்து - ரி. ஹமீட்

3 comments:

  1. சிங்கள கடும் போக்குதல் தீவீரவாதிகள். இவர்களுக்கும் சஹ்ரானுக்கும் பாரிய வித்தியாசம் இல்லை

    ReplyDelete
  2. இது போன்ற சம்பவங்களை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் அநியாயம். தாக்குதலுக்கு பின்னர் ஊரடங்கு சட்டம் போட்டு என்ன பயன் ?? அளுத்கம கலவரத்தில் ஊரடங்கு சட்டம் போட்ட பின்னர் இராணுவத்தினர் முன்னிலையிலேயே வீடுகளை கொளுத்தி உள்ளனர். தாக்க போகிறார்கள் என்று ஊர் போலீசுக்கு ஏற்கனவே தெரிந்தாலும் தாக்குதலின் பின் போவோம் என்று இருப்பார்கள். இது நிச்சயம் நல்ல பலனை தராது.

    ReplyDelete

Powered by Blogger.