Header Ads



முகத்தை மூடியதற்காக 3 குழந்தையுடன் சிறையிருந்த தாய் - விளக்­க­ம­றி­யலில் ஏசி­னார்கள், 31 வரை கணவருக்கு விளக்கமறியல்

சிலா­பத்தில் முகத்தை மறைத்து ஆடை­ய­ணிந்து கொண்டு சென்­ற­தாக புகார் செய்­யப்­பட்ட பெண் ஒருவர் அவ­ரது வீட்டில் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டார்.

சிலாபம் – ஜய­பிம என்ற கிரா­மத்தைச் சேர்ந்த பாத்­திமா சில்­மியா (25) என்­ப­வரே அவர். அவர் தனக்கு நேர்ந்த சம்­ப­வத்தை கவ­லை­யுடன் எம்­மிடம் தெரி­வித்தார்.

கடந்த 10 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஊரில் எனது நண்­பி­யொ­ரு­வரின் வாப்­பாவின் ஜனா­ஸா­வுக்கு அவ­ரது வீட்­டுக்கு காலை 7.30 மணிக்கு எனது கணவர் மொஹமட் சாதீக் (24) உடன் சென்றேன். எங்­க­ளுக்கு மூன்று மாத குழந்­தை­யொன்றும் இருக்­கி­றது. குழந்­தை­யையும் என்­னுடன் கொண்டு சென்றேன். காலை 7.30 மணிக்கு ஜனாஸா வீட்­டுக்குச் சென்று 8.00 மணிக்கு வீட்­டுக்கு திரும்பி வந்து விட்டேன். நான் முகத்தை மூடி ஆடை அணிந்தே சென்றேன்.

8.30 மணி­ய­ளவில் ஊர் பள்­ளி­வாசல் என்று கூறிக்­கொண்டு சுமார் ஐந்து, ஆறுபேர் வீட்­டுக்கு வந்­தார்கள். வீட்டில் எனது கண­வரும் இருந்தார். வந்­த­வர்கள் எனது கண­வ­ருடன் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்­டார்கள். ஏன் முகத்தை மூடி அழைத்துச் சென்­றீர்கள். உங்கள் மீது முறைப்­பாடு இருக்­கி­றது. ஏன் பிரச்­சி­னைக்கு ஆளா­கி­றீர்கள். உங்­களால் எங்­க­ளுக்குப் பிரச்­சினை என்­றார்கள். வாக்­கு­வா­தப்­பட்டு எனது கண­வரை தாக்­கு­வ­தற்கும் முயற்­சித்­தார்கள். அவர்கள் நாட்டு நடப்பு தெரி­யாத எங்­க­ளுக்கு விளக்­கி­யி­ருக்க வேண்டும். நல்­ல­படி பேசி­யி­ருக்க வேண்டும். பின்பு அவர்கள் போய்­விட்­டார்கள்.

9 மணி­ய­ளவில் பொலிஸார் எங்கள் வீட்­டுக்கு வந்­தார்கள். அப்­போது வீட்டில் நான் முகத்தை மூடி ஆடை அணிந்­தி­ருக்­க­வில்லை. சாதா­ரண உடையில் குழந்­தைக்குப் பால் கொடுத்­துக்­கொண்­டி­ருந்தேன். பொலிஸார் நான் முகத்தை மூடி ஆடை அணி­வ­தா­கவும் என்­னிடம் வாக்­கு­மூலம் பெற்­றுக்­கொள்­ள­வேண்­டு­மெ­னவும் கூறி என்­னையும் கண­வ­ரையும் அழைத்­துச்­சென்­றார்கள். நான் மூன்று மாத குழந்­தை­யையும் எடுத்­துக்­கொண்டு சென்றேன்.

எங்கள் மீது யாரோ புகார் செய்தே பொலிஸார் எங்­களைக் கைது செய்­தார்கள். வீட்­டி­லி­ருந்த கறை­ப­டிந்த கத்­தி­யொன்­றையும் எடுத்­துக்­கொண்­டார்கள். எங்­க­ளிடம் வாக்­கு­மூலம் பெற்­றுக்­கொண்டு நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­தார்கள். நீதிவான் எங்­களை ஒரு கிழமை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார். நான் எனது மூன்று மாத குழந்­தை­யு­ட­னேயே விளக்­க­ம­றி­யலில் இருந்தேன். விளக்­க­ம­றி­யலில் என்னை ஏசி­னார்கள்.

கறை­ப­டிந்த கத்­தி­யொன்று வீட்டில் இருந்­த­தற்­காக எனது கண­வரும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டார். நீர்­கொ­ழும்பு சிறை­யிலே வைக்­கப்­பட்டேன். ஒரு வாரத்தில் நான் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்டேன். ஆனால் எனது கணவர் விடு­தலை செய்­யப்­ப­ட­வில்லை. அவர் எதிர்­வரும் 31 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

மொஹமட் ருனைஸ்

விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள மொஹமட் சாதீக்கின் மைத்­துனர் மொஹமட் ருனைஸ் சம்­பவம் தொடர்பில் விடி­வெள்­ளிக்கு விளக்­க­ம­ளித்தார். நான் புத்­த­ளத்தைச் சேர்ந்­தவன். மொஹமட் சாதீக் எனது மனை­வியின் சகோ­தரர். எனது மைத்­து­னரும் அவ­ரது மனை­வியும் கைது செய்­யப்­பட்­டமை எனது மனை­வியின் தங்­கை­யி­னது கணவர் மூலமே அறிந்து கொண்டோம். அவர் கட்­டா­ரி­லி­ருந்து பேஸ்­புக்கில் விபரம் அறிந்­த­தாக எங்­க­ளுக்கு அறி­வித்தார். அவர் கட்­டா­ரிலே வேலை செய்­கிறார். அவர் அறி­வித்­ததன் பின்பே நாங்கள் சிலா­பத்­துக்குச் சென்றோம். அவர்கள் ஒன்றும் அறியாதவர்கள் முகத்தை மூடி ஆடை அணிந்ததற்காகவும், வீட்டில் கறைபடிந்த கத்தியொன்று இருந்ததற்காகவும் கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்கள் என்றார்.

மொஹமட் சாதீக்கின் சகோதரி யமீனா

விளக்கமறியலில் வைக்கப்பட்டி ருக்கும் மொஹமட் சாதீக்கின் சகோதரி யமீனா விடிவெள்ளிக்கு கருத்து வழங்குகையில்,

‘மொஹமட் சாதீக் எனது சகோதரர். நாங்கள் புத்தளத்தைச் சேர்ந்தவர்கள். எனது சகோதரர் 2 வருடங்கள் கட்டாரில் வேலை செய்து நாடு திரும்பியதன் பின்பே திருமணம் செய்தார். இப்போது கடல் தொழில் மற்றும் கூலிவேலை செய்து வருகிறார். எனது சகோதரரும் அவரது மனைவியும் அப்பாவிகள். முகத்தை மூடி ஆடை அணிவதன் பாரதூரத்தை அவள் அறியாதவள். அத்தோடு கறைபடிந்த கத்தியொன்றுக்காகவும் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். எனது சகோதரர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்’ என்றார்.

6 comments:

  1. சட்டம் ஒன்றை தெரியாது என்பது தப்பிப்பதற்கு காரணமாக அமையாது. இவர்கள் சிறை சென்றதன் மூலம் மற்றவர்கள் அறிந்திருப்பர். ஒருவரின் அனுபவம் தான் மற்றவர்களுக்கு கல்வி.

    ReplyDelete
  2. நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் மற்றும் அதனுடன் தொடர்பு பட்ட விடயங்கல் தெரியவில்லை என சொன்னால் நீங்கள் வேடுவ வாழ்க்கையா வாழுகிரீர்கல்.இப்படியான வரட்டுக் கொள்கை கொண்ட முட்டாள்கலால்தான் இன்ரு அடுத்த இனம் எம்மை பார்த்து சிரிக்கிறது.வீட்டில் t.v,சட்டலைட் அண்டனா,வை-பை எல்லா பித்னாக்கலையும் பார்த்தும் கேட்டும் அனுபவிப்பார்கல்.வெளியில் செல்லும் போது கோர வெட்பமும்,தூசி மணல் புழுதியும் உள்ள நாடுகளில் உள்ள Muslim கள் அந்த காலனிலையில் இருந்து பாதுகாப்புக்காக போடும் ஆடையின் இவர்களுக்குத் தேவை.எம்மவர்கலின் முட்டாள் தனத்தை நினைக்கும் போது அழுவதா அல்லது சிரிப்பதா.

    ReplyDelete
  3. ரிஸாட் நாகரீகமாக கருத்து தெரிவிக்கப் பழகு.கருத்து குணவொழுக்கத்தின் நிலையை எடுத்துக்காட்டும்.

    ReplyDelete
  4. நீதிமன்றம் இத்தகைய குற்றங்களுக்கு எச்சரித்து விடுதலை செய்தல், நீதிமன்றம் கலையும்வரை சிறை, ஓரிரு வாரங்கள் பொலிஸில் கையொப்பமிடல் அல்லது ஒத்திவைக்கபட்ட தண்டனைகள் வளங்க வேண்டுமென அரசுடனும் அட்டோனி ஜெனறலுடனும் பேசி ஏற்பாடு செய்யவேண்டுமென முன்னைநாள் நிதிஅமைச்சரும் என் அன்பு தோழருமான தலைவர் றவூப் ஹஹ்ஹீம் அவர்களை ஜப்னா மூஸ்லிம் ஊடாக கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  5. என்ன அனியாயம் இது.நமது சமூகம் இவர்களை குற்றம் பிடிக்கிறது.இப்படி இந்த பெண்ணை பொலிசில் சொல்லி கொடுத்தவன் எப்படி பட்டவனாய் இருப்பான் @Rizard நீ கேடபதோ பார்ப்பதோ மட்டும் சரி என்று காணாதே உனக்கும் தாய்,சகோதரி,மனைவி மற்றும் பிள்ளைகள் இருக்கும் அல்லாஹ்வை பய்ந்து கொள்.அல்லாஹ் இம்மி அளவேனும் அனியாயம் செய்யமாட்டான் நாம் வாழ்வது மறுமைக்கு அன்னாலில் நீ கைசேதப்படுவனாய் மாறிவிடாதேய்.

    ReplyDelete
  6. @ Rizard ponra modayann comment ai delete sei. may be racist ah irukalam.muslim nameil msg panalam

    ReplyDelete

Powered by Blogger.