Header Ads



சரணடைவதற்கு அவகாசம் வழங்குக - பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை.

-vidivelli -

தீவி­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் தாமா­கவே முன்­வந்து சர­ண­டை­வ­தற்கு 24 அல்­லது  48 மணி­நேர கால­அ­வ­காசம் வழங்­கும்­ப­டியும் அவ்­வாறு சர­ண­டை­பவர்களுக்கு புனர்­வாழ்­வுக்­கான ஏற்­பா­டு­களைச் செய்­யு­மாறும் கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ளனம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்­களின் சம்­மே­ள­னத்தின் தலைவர் அஸ்லம் ஒத்­மானின் கையொப்­பத்­துடன் ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இக்­கோ­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

‘தீவி­ர­வா­தத்­துடன் நேர­டி­யா­கவோ அல்­லது மறை­மு­க­மா­கவோ தொடர்­பு­டை­ய­வர்கள் தாங்கள் தவ­றாக வழி­ந­டாத்­தப்­பட்­டுள்­ள­மையை உணர்ந்து இந்த சர­ண­டை­வ­தற்­கான கால எல்­லைக்குள் சர­ண­டைந்தால் அவர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்­கப்­ப­ட­வேண்டும். இந்த கால­அ­வ­காசம் வழங்­கப்­பட்டால் தவ­றாக வழி­ந­டாத்­தப்­பட்ட தீவி­ர­வாத இளை­ஞர்­களின் குடும்ப அங்­கத்­த­வர்கள் அவர்­களைச் சர­ண­டை­யு­மாறு கட்­டா­யப்­ப­டுத்­தலாம்.

தீவி­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்கும், சந்­தே­கத்­துக்கு இட­மான நட­வ­டிக்­கை­களை உடன் அறி­விப்­ப­தற்கும் முஸ்­லிம்கள் நாம் பூரண ஒத்துழைப்பினை வழங்குவோம். கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனம் முஸ்லிம்களை இது தொடர்பில் விழிப்புணர்வூட்டி வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. இலங்கையிலும் சர்வ
    தேசத்திலும் மிக உயர்
    ந்த கண்ணியத்துடன்
    வாழ்ந்த முஸ்லிம்களை
    இழிவுபடுத்திய கொடூர
    செயற்பாடுகளை தாங்
    கமுடியாதுள்ளது.

    ReplyDelete
  2. Very good suggestion, it may help to save time, country's economy, avoid unwanted stresses and panic, safe civilians and security personals from life threats, will keep country's and H.E.the President's dignities and more...

    ReplyDelete

Powered by Blogger.