April 22, 2019

தற்கொலையாளிகளின் உடம்பில் அரபு மொழி tatoo - தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்தில் தெரிவிப்பு

-R. Sivarajah-

கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து இன்று -22- காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபையின் விசேட கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன – முப்படைத் தளபதிமார் – பொலிஸ் மா அதிபர் அரச புலனாய்வுத் துறைத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட உறுப்பினர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்று பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் – சிலரின் உடம்பில் ‘மாஷா அல்லாஹ்’ என்று அரபு ( tatoo )மொழியில் எழுதப்பட்டிருந்தமையால் அவர்கள் வெளிநாடு ஒன்றில் பயிற்சி பெற்றவர்களாக இருக்கலாமென பாதுகாப்பு தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

தெமட்டகொடையில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் ஒருவர் அரசியல் கட்சியொன்றின் ஆதரவாளர் ஒருவர் என்றும் அவரின் இரு மகன்கள் அடிப்படைவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் இன்றைய பாதுகாப்புச் சபை கூட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து முன்னர் வந்த எச்சரிக்கைகள் பற்றியும் இங்கு பேசப்பட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் மற்றும்முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் கொண்ட குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.முக்கியமான கேந்திர நிலையங்கள் மற்றும் வணக்கஸ்தலங்கள் மீதான பாதுகாப்பை அதிகரிக்க இங்கு தீர்மானிக்கப்பட்டது.

கொல்லப்பட்ட – காயமடைந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்கவும் மரணமடைந்தோர் இறுதிக்கிரியைகளுக்கு அரச உதவிகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் பின்னர் விசேட அமைச்சரவையை கூட்டினார் ஜனாதிபதி.

6 கருத்துரைகள்:

எந்தவொரு குற்றவாளியும் தன் அடையாளங்களை காட்டிக் கொள்ள விரும்புவானா? கொத்து ரொட்டி, குர்ஆன், மாஷா அல்லா எல்லாவற்றையும் பார்க்கின்ற போது ஏதோ ஒரு சக்தி முஸ்லிம்கள் மீது பழிபோட முனைவது போலத் தோன்றுகிறது.

முஸ்லிம்க‌ள் ப‌ச்சை குத்துவ‌தை ஹ‌ராம் என்ப‌வ‌ர்க‌ள். சாதார‌ண‌ முஸ்லிம் கூட‌ ப‌ச்சை குத்த‌மாட்டான். த‌வ்ஹீத்வாதி ப‌ச்சை குத்துவ‌தை நினைத்தும் பார்க்க‌ மாட்டான். இங்கு ஏதோ ச‌தி தெரிகிற‌து. முஸ்லிம்க‌ள் மீது ப‌ழி போட‌ அர‌பு மொழியில் ப‌ச்சை குத்தியிருக்க‌லாம்.
- முபாற‌க்

உடம்பில் பச்சை குத்துவது ஹராம் இப்படி இருக்கையில் இவர்கள் இஸ்லாமிய பெயரில் இருந்தாலும் இவர்கள் முஸ்லீம்களாக இருக்கவெ முடியாது

இந்த விடயங்களை நாம் விவாதிப்பதை விட அந்நிய மக்களுக்கு நமது அரசியல் தலைவர்களோ அல்லது ஜம்மியா வோ தெளிவு படுத்துவது கடமை அல்லது இந்த நபர்களின் உண்மையான தகவல்களை கண்டறிவது முக்கியம் இல்லாவிட்டால் இவர்கள் முஸ்லிம்கள் இல்லாவிட்டாலும் அதனை மறைத்து விட அதிக வாய்ப்புகள் உள்ளன.ஒரு முஸ்லீம் நிச்சயமாக பச்சை குத்த மாட்டான். யா .அல்லாஹ் இதன் உண்மையான சதியை உலகுக்கு வெளிக்காட்டுவாயாக. உன்னையும் உனது ரஸூலையும் எத்தனை பேர் திட்டி கொண்டு இருப்பார்களோ ! அதற்கெல்லாம் எமது சமூகமே காரணமாகிவிட்டதே !

ஒரு போதும் முஸ்லிம் பச்சை குத்தமாட்டான்
இந்த சதி முஸ்லிம்கள் மீது பழி விளவேண்டும்
என்று ஒரு ஒழுங்கு படுத்தலுடன் செட்டப்பன்னபடடுள்ளது

Did they check the suicide bombers’ private parts? Had they done that, it would have revealed the identity of the bombers whether they are really Muslims or someone disguised as Muslims.

Post a Comment