Header Ads



முஸ்லிம்கள் எல்லோரையும் குற்றம்சாட்டும், கொடூரம்தானே இனி நடக்கப் போகிறது...?? - Marx Anthonisamy


- Marx Anthonisamy -

இலங்கையில் நேற்று 290 பேர்கள் கொல்லப்பட்டதற்கும், சுமார் 400 பேர்கள் காயம்பட்டதற்கும் காரணமான தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு அங்குள்ள "தேசிய தவ்ஹீத் ஜமாத்" எனும் அமைப்பே காரணம் என நம்புவதாக இன்று இலங்கை அமைச்சரும், அரசுக் கருத்தாளருமான ரஜிதா சேனரத்னே கூறியுள்ளார்.

வேறு ஏதும் வெளிநாட்டுத் தொடர்புகள் உள்ளனவா என அரசு ஆய்வு செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். இதை ஒட்டி இன்றிரவு முதல் மீண்டும் இலங்கையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்படும் எனவும் தெரிகிறது.

மூன்று தேவாலயங்களிலும் முக்கிய ஓட்டல்களிலும் துல்லியமாக நடத்தப்பட்ட இந்தத் தற்கொலைத் தாக்குதலில் அதிக அளவில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிறரும் கொல்லப்பட்டுள்ளனர். வசதிமிக்க ஓட்டல்களில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சுமார் 35 வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.

கிறிஸ்தவர்களின் ஆகப் புனித நாள் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இன்று உலகளவில் கவனத்தையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்தவ நாடுகளிலும் இலங்கையிலும் இன்று உருவாகியுள்ள இஸ்லாமிய வெறுப்பின் மீது கொண்ட கோபத்தால் இப்படி அதற்கு எந்த வகையிலும் பொறுப்பில்லாத அப்பாவி மக்களைக் கொடூரமாகக் கொலை செய்வதென்பது எங்கு கொண்டு விடும?

இந்தத் தாக்குதலுக்கு எந்த வகையிலும் பொறுப்பும் காரணமும் இல்லாதவர்களும், ஏற்கனவே பல்வேறு கொடூரமான இனப் படுகொலைகளையும், வெளியேற்றங்களையும் அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களுமான அப்பாவி இலங்கை முஸ்லிம் மக்கள் எல்லோரையும் குற்றம்சாட்டும் கொடூரம்தானே இனி இங்கு நடக்கப் போகிறது . நேற்றைய வன்முறையின் மூலம் வேறென்ன நடக்கப்போகிறது?

3 comments:

  1. It's true. Dear editor you are become to true History. Original values of Islam peace and prosperity so, whole human must read Al Qur'an them native language thereafter they know wright way. This is whole once are Illuminates plans example of world trade center attack in USA.

    ReplyDelete
  2. wanmurai yaar nadathiyirundalum paarapatchamindri pahirangamaha thookilidappadal wendum

    ReplyDelete
  3. தௌஹீத்ஜமாஅத் பிரிவி
    னர் வெளிநாட்டு நிதிமூல
    ங்கள் மூலம் இலங்கைக்
    குள் நுழைந்தபோதே குழ
    ப்பத்தை ஏற்படுத்துபவர்
    களாகவே கால்பதித்தனர்.
    இலங்கை ஜம்மியத்துல்
    உலமாசபையோ பிரதேச
    அரசியல் தலைமைகளோ
    ஏன் நாட்டின் அரசியல்நிறு
    வனமோ இவர்களை சரி
    யாக இனங்கண்டு அப்
    போதே அவர்களை கட்டுப்
    படுத்தாது இவர்களின்
    பள்ளிவாயல் நிர்மாணிப்
    பு ,மதரஸா ஏனைய சமூக
    நலசெயற்பாடுகள் என
    அனைத்திற்கும் அங்கீகா
    ரமளித்து தோல்மேல்
    தோல்கொடுத்தார்கள்.
    நாட்டிற்கும் சமூகத்திற்கும்
    இவ்வியக்கங்கள் புற்று
    நோய் என்பதை புரிந்து
    கொள்ளமறுத்தார்கள்.
    அவற்றின் விளைவை
    நாடு இன்று அனுபவித்து
    க்கொண்டிருக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.