Header Ads



ஜனாதிபதியின் நரித் தந்திரம் இதுதான் jaffna muslim இணையம் பதிவேற்றியதை உறுதிப்படுத்திய தயாசிறி

ஜனாதிபதியின் ஐந்து ஆண்டுகால பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் திகதியா முடிவுக்கு வருகின்றது என்ற கேள்வி எம்மத்தியில் உள்ளது.இதுகுறித்து நீதிமன்ற ஆலோசனையை பெற்றுக்கொண்டு அதில் எமக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதே ஜனாதிபதியின் நிலைப்பாடு  என்கிறார் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர.

நான்கறை ஆண்டுகளில் ஆட்சியை கலைக்கவும் தீர்மானித்துள்ளதாவும் அவர் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு  இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில். 

ஜனாதிபதியின் ஆட்சிக் காலம் ஐந்து ஆண்டுகளா அல்லது ஆறு ஆண்டுகளா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அது குறித்து நீதிமன்ற ஆலோசனையை பெற்றுக்கொண்டோம்.  

ஜனாதிபதிக்கு ஐந்து ஆண்டுகளே ஆட்சியில் அமர முடியும் என்ற விடையும் எமக்குக் கிடைத்தது. ஆனால் ஜனாதிபதியின் கால எல்லை குறித்து எம்மிடத்தில் சந்தேகம் நிலவுகின்றது. அவருக்கான ஐந்து ஆண்டுகாலம் எப்போது தொடங்கி எப்போது  முடிவுக்கு வருகின்றது என்பதில் எம்மத்தியில் கேள்வி எழுகின்றது என குறித்த கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் திட்டம் இதுதான் என்ற அடிப்படையில் சில நாட்களுக்கு முன் இணையம் இது பற்றிய செய்தியை பதிவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.