April 26, 2019

ISIS ஐ, CIA உருவாக்கியது - இஸ்லாமிய பயங்கரவாத்தை, இலங்கை இராணுவம் தோற்கடிக்கும் - ஜயந்த MP

பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்காவின் FBI, பிரித்தானியாவின் MI5 ஆகிய விசாரணை குழுக்களை இலங்கை விடயத்தில் தலையிட வைக்க வேண்டாம் எனவும், இவர்கள் இலங்கைக்குள் நுழைந்தால் இலங்கைக்கும் எதிர்காலத்தில் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா போன்ற நாடுகளுக்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படும் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், இலங்கையில் தற்போது செயற்படும் பயங்கரவாத்தை, விடுதலைப் புலிகளை முற்றாக அழித்த இலங்கை இராணுவத்திற்கு அழிக்க முடியும்.

Is என்ற இஸ்லாமிய அரசு அமைப்பு அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான CIA உருவாக்கிய அமைப்பு. அமெரிக்கா இந்த பயங்கரவாத அமைப்பு அல்லது அதன் ஆதரவாளர்களை நாடுகளுக்குள் அனுப்பி அவர்கள் மூலம் மிலேச்சத்தனமாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்துகிறது என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

கொடூரமான பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கும் நாடுகளுக்கு உதவும் போர்வையில், அமெரிக்கா தனது இராணுவத்தை அனுப்பும். அந்த பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விசாரிக்க FBI விசாரணையாளர்களை அனுப்பும்.

அமெரிக்கா எண்ணை வளம், இயற்கை வளங்கள் மற்றும் இராணுவ ரீதியான முக்கிய இடங்களில் அமைந்துள்ள நாடுகளில் நுழைய இந்த வழிமுறையை பின்பற்றுகிறது. ஈராக்,லிபியா, சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் அமெரிக்காவின் வேட்டை களமாக மாறின.

IS அமைப்புக்கு தற்கொலை குண்டு தாக்குதல் நடத்துவதை கற்பித்த விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளை அழித்த இலங்கை படையினருக்கு வெளிநாட்டுப் படையினரின் உதவி எந்த வகையிலும் தேவைப்படாது. இலங்கை படையினர் மிக விரைவில் இந்த இஸ்லாமிய பயங்கரவாதத்தை தோற்கடிப்பார்கள்.

விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் போருக்கு தலைமை தாங்கிய உயர் இராணுவ அதிகாரிகள், திறமையான புலனாய்வு அதிகாரிகளை உரிய இடங்களில் நியமித்து இந்த பயங்கரவாதத்தை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்குமாறு முப்படை தளபதியான ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

புலிகளை தோற்கடிக்க வழங்கிய ஒத்துழைப்புகளை இஸ்லாமிய பயங்கரவாத்தை தோற்கடிக்க வழங்க வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் ஜயந்த சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

16 கருத்துரைகள்:

இப்படியான கல்வியறிவு அற்ற முட்டாள்கள் பாராளுமன்றம் போனதால் இலங்கைக்கு இப்போ இந்த நிலைமை

அஜன் புலிப் பயங்கரவாதிகளினை அவர்களின் 33 வருட கால வெறி செயலையையும்,இன்னும் Muslim களிக்கும் Sri Lanka வில் நடந்த தாக்குதலுக்கும் சம்பந்தமில்லை என உன்மையை பேசினால் அது உமக்கு கசப்பாக உள்ளதா

இஸ்லாமியப் பயங்கரவாதம் என்ற சொற்பதத்தைக் கேட்பதற்கே பெரும் அருவருப்பாக இருக்கின்றது. கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ஐயந்த சமரவீர கூறியதுபோல் இந்த ISIS இயக்கம் அமெரிக்காவினால் வடிவமைக்கப்பட்டு உலக நாடுகளில் செயற்படுத்தப்பட்டு வரும் ஒரு இயக்கம். இதற்கு மாற்றுக்கருத்து யாரிடமும் இருக்க மாட்டாது. துரதிஷ்டவசமாக அதனுள் இலங்கையும் மாட்டுப்பட்டுவிட்டது. சமரவீர அவர்கள் மிகத் தெளிவான விளக்கம் ஒன்றினை வழங்கியுள்ளார்கள். ISIS ல் மிகக் குறைந்தளவிலான முஸ்லீம்களே இருக்க முடியும். அதுவும் மூளை சலவை செய்யப்பட்டவர்கள். அப்படியானவர்கள் சொல்வதனைச் செய்பவர்களாகவே இருப்பார்கள். கட்டளையிடுவோராக இருக்க மாட்டார்கள். நாங்கள் இப்போது செய்யக்கூடிய ஒரு விடயம் பொருத்தமான நுண்ணறிவுடன் இலங்கையிலுள்ள இதன் காரணகர்த்தாக்கள் யார் என்பதனை துள்ளியமாகக் கண்டறிந்து மிகவும் பொருத்தமான தண்டனையினை வழங்கி எமது நாட்டில் இத்தகைய படுமோசமான சூழல் இனிமேலும் ஏற்படாதவாறு காத்துக் கொள்வதுதான். சண்டைக்காரனை நீதிபதியாக்கிவிட வேண்டாம். இந்தப் பெரிய புலிப் பயங்கரவாதத்தை முற்றாக முறியடித்த இலங்கைக்கு இதனை முறியடிப்பது சுண்டைக்காய் மாதிரித்தான் இருக்கும். நீதியான முறையில் புலன் விசாரணைகளை நடாத்தி சரியான குற்றவாளிகளைப் பிடித்து அழித்துவிட வேண்டும். எமது அழகிய திருநாடு சமாதானபூமி மேலும் மேலும் மலர இந்நடவடிக்கை மிகக்காத்திரமானதாகும்.

He knows the people behind ISIS. ISIS has only newly converted people in its group. Rhose newly recruited are being used as suicide bombers.

உண்மையும் உண்டு

This is very fact statement. Sure USA will use this opportunity for it's self purpose

Only you are uneducated... Specially in Geo Politics.

your never state "Islamic terrorism" Islam never recognise terrorism, terrorists have no religion, because if they have faith they never practice barbarism of vandalism??????????

You are right Mr. Jayantha . Why we need FBI? they (US) are dustroying whole world peace.

முஸ்லிம் கள் தாக்கினால் ஏன் உள்ளாச கோட்டல்களில் தாக்க வேன்டும் இதில் ஏதே நமது நாட்டின் வளர்ச்சியை தாங்கிக்கொள்ளாத சக்திதான் உள்ளாசதுரையில் நமது நாடு முதலிடம் இதனை சீரலிக்க எடுத்த முயற்சிதான் நமது அழகிய நாட்டை விட்டுகொடுக்காமல் அனைவரும் ஒன்று சேருவோம் வாரீர்

Our Srilankan brave forces who have wiped out LTTE enough experience and knowledge in eradication of any kind of terrorism So,no need of foriegn military assistance in this connection our forces can do this alone

கண்ணியமிக்க ஜனாதிபதி மேலும் நம் நாட்டு விசுவாசமான பாதுகாப்பு உளவுத்துறை நம் அழகான நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெற்றோலிய வளங்களில் ஆசைப்பட்டு இந்த அமெரிக்காவின் ISIS தீவிரவாதிகள் நம் நாட்டை நாசமாக்க திட்டமிட்டுவிட்டார்கள் இதில் இஸ்லாம் என்றால் என்னவென்று சரியாக விளங்காத சில இஸ்லாமிய பெயருடைய மனநோயாளிகளை கதாநாயகர்களாக பாவித்துவிட்டு அதை காரணம் காட்டி நம் நாட்டின் கண்ணியமிக்க உளவுத்துறையை திசைதிருப் இந்த அமெரிக்காவின் FBI நம்நாட்டுக்குள் நுழைந்து விட்டான் ஆகவே இவர்களை நாட்டை விட்டு தூரமாக்கும்வரை நம் நாட்டு மக்களின் நிம்மதி கேள்விக்குறியாகவே இருக்கும்
நாம் 30 வருடங்களாக இவ்வாறான தற்கொலை வெடிகுண்டுகளுடன் பல உயிர்களை இழந்தோம் ஏன் அப்போது இந்த FBI நம் நாட்டுக்கு உதவி செய்யவரவில்லை!?
உலகத்தில் உண்மை ISIS யார்
ISRAEL SAFETY INTERNATIONAL SOLDIERS
இஸ்ரேல் பாதுகாப்பு சர்வதேச படை OR ISRAEL SECRET INTERNATIONAL SOLDIERS இஸ்ரேல் சர்வதேச இரகசிய படை இவர்கள் அமெரிக்க நாட்டு யூதர்களால் இயக்கப்படுகின்றார்கள்
இந்த ISIS அமரிக்கா சித்தரிப்பதை போன்று இஸ்லாமிய தீவரவாதிகளாக இருந்தால் அவர்களின் முதல் BOM OR ROCKET டை இஸ்ரேலுக்கு எதிராகத்தான் பாவித்திருப்பார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம் ஆச்சிரியம் இஸ்ரேலின் போடரில் நின்றுதான் சிரியாவில் இந்த ISIS பல கொலைகளையும் அட்டகாசங்களையும் செய்தார்கள் ஒரு ஏவுகனையாவது இஸ்ரேலை நோக்கி அடித்தார்களா? ஏனெனில் அந்த இஸ்லாமிய அமைப்பில் இல்லாத அனைவரும் அவர்களுக்கு எதிரிதானே!

தமிழ் பயங்கரவாதிகளைப்போல் நாம் தற்கொலைகுண்டு வைத்த நாய்களை ஆதரிப்பதில்லை. உண்மையை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு புலி பயங்கரவாதிகளுக்கு மண்டையில் மசாலா இல்லை

உண்மை தான் ஆனால் இது இஸ்லாமிய பயங்கரவாதம் இல்லை, ஒரு குறிப்பிட்ட பேரினவாத குழுவின் கைவரிசை வெளிப்பட்டு விடும் என்ற பயம், FBI அதை சொல்லி விடும்

Post a Comment